Vaanalai Media

Vaanalai Media 🎤 "உண்மை தகவல், உன்னதமான அனுபவம்!" 🎤

✨📡 நம்பகமான செய்தி, புதுமையான விழுப்புணர்வு மற்றும் உங்களை ஈர்க்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் – எப்போதும் உங்களுடன்

🌟வானலை மீடியா – உங்கள் உண்மை ஒலி🌟

📡 நம்பகமான செய்திகள் | விவரமான பகுப்பாய்வு | விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் புதுமை தகவல்கள்!

🎙️ உண்மையை வெளிப்படுத்தும் குரல், உங்கள் தமிழ்மக்களுக்கு அர்ப்பணிப்பு!

🌏 வானலை மீடியா – உங்கள் பார்வை, உங்கள் ஒலி!

காணாமல்போன ஞானசாரர் மீண்டும் வந்தார்.நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொ...
16/09/2026

காணாமல்போன ஞானசாரர் மீண்டும் வந்தார்.

நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சி காணாமல் போய்விட்டதாக இணையம் முழுவதும் செய்திகள் பரவுவதை நான் பார்த்தேன்.

ஆனால், பலவீனமானவர்களே ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். நாட்டிற்காக உழைத்த நாங்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.
நாங்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதுமில்லை. ஓடி ஒளிந்து கொள்ளப் போவதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
=வானலை news=

இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்.முன்னா...
16/09/2026

இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) அழைக்கப்பட்டிருந்த போதிலும் இன்று அதிகாலை (16) நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக வெளியாகும் ஊடகச்செய்திகள் பொய்யானவை என ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திததி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வெளிநாடு சென்றதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அவருடன் ரோஹித ராஜபக்சவின் அத்தையும் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் ஒரு தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை திடீரென தன்னிடம் வழங்கியதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அவர் நாட்டை விட்டு வெளியேறவிருந்த நேரத்திலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதற்கு முன்பு ஷிராந்தி ராஜபக்ச FCID-யால் அழைக்கப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே சம்பந்தப்பட்ட கடிதம் வழங்கப்பட்டதாகவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
=வானலை news=

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த ...
15/09/2026

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
=வானலை news=

கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்புஅர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்...
15/09/2026

கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு

அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.
=வானலை news=
=வானலை news=

பலத்த மின்னல் தாக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல...
15/09/2026

பலத்த மின்னல் தாக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை.

பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
=வானலை news =

இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்.முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் ச...
15/09/2026

இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்.

முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுவன் இந்தியாவின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முகநூல் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திப்பதற்காகவே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு வருவதற்கான படகுக் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், சிறுவன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இலங்கைக்கு வந்தபோது சிறுவனிடம் இந்திய நாணயத்தில் 280 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கைக்குள் வந்த சிறுவனை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த தலைமன்னார் நீதிமன்றம், குறித்த 14 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திப்பதற்காக சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
=வானலை news=

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள...
14/09/2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதும், அந்தத் தகவல் அன்றைய தினம் எனக்குக் கிடைக்கவில்லை.

அவர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டமையை செய்தியாக்கியாக்கிய ஊடகங்கள், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமையை பெரும்பாலும் செய்தியாக்கவில்லை.

செய்தியின் பண்பு அதுதான். இயல்புக்கு மாறான நிகழ்வுகள்தான் அநேகமாக செய்தியாக மாறும்.

இந்த நிலையில், தான் சிறையில் அடைக்கப்பட்டதை செய்தியாக்கிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும், பிணையில் வந்ததை ஏன் செய்தியாக்கவில்லை என்று கேட்டு, நேற்றைய தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் சக்கி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

ரஜினிகாந்த்-இன் ”நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்திட்டேன்னு சொல்லு” என்பதை நினைவுபடுத்தும் வகையில், சக்கியின் பதிவு ஆரம்பிக்கிறது.

அந்தப் பதிவை வாசியுங்கள். ’
🔴
நான் திரும்பி வந்துவிட்டேன்… ஆனால் சில கேள்விகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 9ஆம் திகதி வரை, மட்டக்களப்பு சிறைச்சாலையின் சுவர்களுக்குள் ஒரு கைதியாக இருந்தேன்.

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, பாலியல் குற்றச்சாட்டு.

நான் அந்தக் குற்றத்தை செய்யவில்லை என்பது எனது தெளிவான நிலைப்பாடு.

மேலும், என்னை அரசியலிலிருந்து பலவீனப்படுத்தவும், பழிவாங்கவும், என் நற்பெயரை களங்கப்படுத்தவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான குற்றச்சாட்டு மற்றும் முறைப்பாடு என நான் நம்புகிறேன்.

இந்த இரண்டு மாதங்கள் என்னை உடைத்துவிடும் என்று சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் என்னை அறிந்திருக்கவில்லை. சிறைச்சாலை எனக்கு ஒரு தண்டனையாக இருக்கவில்லை. அது ஒரு வாழ்க்கைப் பல்கலைக்கழகம். அங்கு நான் மனிதர்களைப் பார்த்தேன். மனிதர்களின் பலவீனங்களையும் பார்த்தேன்.

நம்பிக்கையின் உண்மையான அர்த்தத்தையும் பார்த்தேன். அதிலும் முக்கியமாக சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தேன்.

ஆனால் இன்று சில கேள்விகளை கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நான் கைது செய்யப்பட்டபோது, நாட்டின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான சக்தி TV உள்ளிட்ட ஊடகங்கள் இந்தச் செய்தியை முக்கியத்துவத்துடன் வெளியிட்டன.

சமூக ஊடகங்களில் சில செய்திப் பக்கங்களும் என்னைச் சுற்றி பரபரப்பை உருவாக்கின.
“விளக்கமறியல்…”
“14 நாட்கள்…”
“9 நாட்கள்…” என்று தலைப்புகள் ஓடின.

அப்போது ஒரு குற்றச்சாட்டு மட்டும் போதுமானதாக இருந்தது.

ஒரு மனிதனின் பெயரைச் சுற்றி சந்தேகம் உருவாக்குவதற்கு அது போதுமானதாக இருந்தது.
ஆனால் இன்று நான் வெளியே வந்துவிட்டேன்.

அப்போது செய்தியாக இருந்த நான், இன்று ஏன் செய்தியாக இல்லை? இதுதான் எனது கேள்வி.
நான் கைது செய்யப்பட்ட செய்தி முக்கியமானது என்றால், நான் வெளியே வந்த செய்தி ஏன் முக்கியமானதல்ல?

ஒரு மனிதனை குற்றச்சாட்டின் அடிப்படையில் பொதுமக்கள் முன் நிறுத்துவது ஊடகப் பொறுப்பா?

அப்படியானால், அதே மனிதன் வெளியே வந்தபோது உண்மையின் மறுபக்கத்தை மக்களுக்கு தெரிவிப்பதும் அதே ஊடகப் பொறுப்பு அல்லவா?

அல்லது ஊடகங்களின் நீதி என்பது - ஒருவரை குற்றம் சாட்டும் வரையில் மட்டும்தானா?

நான் எந்த ஊடகத்திடமும் எனக்காக பரிதாபம் கேட்கவில்லை. எனக்காக செய்தி போடுங்கள் என்றும் கேட்கவில்லை.

நான் கேட்பது ஒரே ஒரு விஷயம் சமநிலை.
ஒரு குற்றச்சாட்டு வெளியிடப்பட்டால், குற்றச்சாட்டுக்குள்ளானவரின் நிலைப்பாடும் மக்களுக்கு தெரிய வேண்டும்.

அதுதான் ஊடக நெறிமுறை. அதுதான் ஜனநாயகம்.
அதுதான் ஒரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச நீதி. என்னை அவமானப்படுத்த நினைத்தவர்கள் ஒருவேளை தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள்.

அவமானம் ஒரு மனிதனை அழிப்பதில்லை.
அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் அவனுடைய குணத்தை நிரூபிக்கிறது.
நான் மறைந்து கொள்ளப் போவதில்லை.
நான் பயந்து அரசியலை விட்டு விலகப் போவதில்லை.
நான் தலைகுனிந்து நடக்கப் போவதில்லை.
நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்.
இந்த வழக்கு தொடர்பாக எனக்கு இன்னும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது.

நான் அனுபவித்த சிறைச்சாலை வாழ்க்கையைப் பற்றியும், இந்த வழக்கு என்னை எவ்வாறு பாதித்தது என்பதையும், இந்த காலகட்டத்தில் நான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும், எனக்குத் தெரிந்த உண்மைகளையும் நேரம் வரும் போது ஒவ்வொன்றாகப் பேசுவேன்.

அப்போது யாரும் என்னிடம், “ஏன் இப்போது பேசுகிறீர்கள்?” என்று கேட்க வேண்டாம்.
நான் பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன்.

என்னை அழிக்க நினைத்தவர்களுக்கு நான் கோபத்துடன் பதில் சொல்லப் போவதில்லை.
என் வாழ்க்கையே பதிலாக இருக்கும்.
என்னைப் பற்றி பொய்யாக எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும், என்னைப் பற்றி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு தவறான புரிதலுக்கும்,
என்னை மௌனமாக்க நினைத்த ஒவ்வொரு முயற்சிக்கும் காலம் பதில் சொல்லும்.
எனது நம்பிக்கை அல்லாஹ்வின் மீது. அல்லாஹ் போதுமானவன்.

அவனே உண்மையை அறிந்தவன். அவனே சிறந்த தீர்ப்பளிப்பவன். நான் இரண்டு மாதங்களை இழந்திருக்கலாம். ஆனால் அந்த இரண்டு மாதங்கள் எனக்கு ஒரு விஷயத்தை கற்றுக் கொடுத்துவிட்டன.
சிறைச்சாலையின் கதவுகள் ஒரு மனிதனின் உடலை மட்டுமே அடைக்க முடியும்.

உண்மையை அடைக்க முடியாது. நான் திரும்பி வந்துவிட்டேன். இன்னும் அமைதியாக. இன்னும் உறுதியாக. இன்னும் நம்பிக்கையுடன்.
🔴
முன்னாள் மேயரின் இந்தப் பதிவு பற்றி, நீங்கள் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்கள்??

14/09/2026

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை கடுமையாக சாடியவர் இன்று இப்படி ஒரு நிகழ்வில்.....

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் கடுமையாக குறைப்பு.லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்று...
14/09/2026

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் கடுமையாக குறைப்பு.

லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தாம், கடுமையாக குறைத்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
=வானலை news=

பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்புAnura Kumara DissanayakaValue Added Tax​ (VAT)இலங்கையில் ப...
14/09/2026

பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
Value Added Tax​ (VAT)

இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை. பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும்“ என தெரிவித்தார்.
=வானலை news=

Address

120 Street
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaanalai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share