யாழ் FM

யாழ் FM Fallow this page 24 ours news

🛑zee Tamil சரிகமப சீசன் 5ல் பங்கு பற்றிய திருகோணமலை மாவட்ட சிறுமி “வர்ஜா” நேற்றைய தினம் சொந்த ஊரான இலங்கை வந்தார்❤️
15/06/2026

🛑zee Tamil சரிகமப சீசன் 5ல் பங்கு பற்றிய திருகோணமலை மாவட்ட சிறுமி “வர்ஜா” நேற்றைய தினம் சொந்த ஊரான இலங்கை வந்தார்❤️

15/06/2026

வீட்டுக்குள் நுழைந்த மிகப்பெரிய ராட்சதன்😱









🛑 அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப...
14/06/2026

🛑 அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

வாகனங்களின் பின் இருக்கைகளில் ஆசனபட்டி பொருத்துவதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனவே எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்குப் பின் இந்த விதிமுறையின் நடைமுறை வலுப்படுத்தப்படும். இந்த மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14/06/2026

நல்லூரில் பதற்றம்😱 தனி நபராக போராடிய பெண்😱






🛑மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து, ஒரு கோடி ரூபாய் க...
14/06/2026

🛑மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து, ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு தெற்குப் பிராந்தியக் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரான பெண், குறித்த வர்த்தகரின் நிர்வாணக் காட்சிகளை அவரது வாட்ஸ்-அப் இலக்கத்திற்கு அனுப்பி, அந்த வீடியோக்களைச் சமூக ஊடகங்களிலும் அவரது மனைவியிடமும் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது, சுமார் 1,50,000 ரூபாவை வர்த்தகரிடம் பெற்று சந்தேக நபர் தனது வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் கண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவருமாவர்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர், கொழும்பு தெற்குப் பிராந்தியக் குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, தலாங்கம பகுதியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் வைத்து சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

14/06/2026

கோழிக்கு வந்த சோதனை😂










🛑 அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட...
14/06/2026

🛑 அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில தடவைகள் மழை பெய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14/06/2026

கொழும்பில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்😱








🛑 வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் மரணம்!பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திர...
13/06/2026

🛑 வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் மரணம்!

பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி, யடிநுவர பகுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, யடிநுவர பகுதியைச் சேர்ந்த கே.ஏ. நந்தனி கலன்சூரிய என்ற 59 வயதுடைய பெண்ணாவார்.

உயிரிழந்த பெண் ஆஸ்துமா நோய் நிலைமைக்காக 20 வருடங்களுக்கும் மேலாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், இவருக்கு 'அமோக்சிலின்' (Amoxicillin) மருந்து ஒவ்வாமை (Allergy) உடையது என மருத்துவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்திருந்தனர்.

இதன்போது வீட்டில் பயன்படுத்துவதற்காக வைத்தியசாலையினால் மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அவருக்கு ஒவ்வாமை உடையது என முன்னரே மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்த 'அமோக்சிலின்' என்ற மருந்தே இதன்போதும் வழங்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அன்றைய தினம் இரவே அந்த மருந்தை உட்கொண்டதன் பின்னர் அவர் கடுமையான நிலைக்கு உள்ளாகியதுடன், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

13/06/2026

உண்மையில் சங்கீத்தன் கூறியது என்ன😱







Address

Colombo
01

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழ் FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share