Tamil Tech Library

Tamil Tech Library About modern and history of technology in Tamil






is what we are all about

24/02/2025
World Population by Religion
24/12/2024

World Population by Religion

18/07/2023
🚂 ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூ...
29/04/2023

🚂 ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்

சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.

ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா?

அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு. பிறகு விளக்கு எரியும், அதையும் அவர்கள் உதாசீனம் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கு எரியும், அதையும் உதாசீனம் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், Automatic braking system மூலம்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது, குறைப்பது, ஹாரன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால், அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.

இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன் நாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் ரயில்வே ஓட்டுனர்களுக்கு தனியாக கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.

ஒரு நிமிடம்தான் ஸ்டேசனில் நிற்கும் அடுத்து சிக்னல் விழுந்த உடன் வண்டி எடுக்கனும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம்! டிராக்கில் ஏதேனும் பிராப்ளம்! சிக்னல் மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்!

கேட் horn அடிக்கனும்! 60 செக்கண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டானா அவரை எழுப்பனும்! 27 kwh கரண்டின் கீழ் வேலை! இன்ஜீன் சூடு!

ராத்திரியில் வண்டியின் வேகத்தை பொருத்து கத்தி போல குத்தும் குளிர். எக்ஸஸ் ஸ்பீடு போக கூடாது! டிரையின் டைமிங் மெயிண்டன் செய்ய வேண்டும்! சிவப்பு சிக்னலை தாண்டினால் ரீமுவ்டு பிரம் சர்விஸ் என பல அழுத்தங்கள் இருக்கு!

இருந்தும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கனும்! காடுகளில் போகும் போது செயின் இழுத்து வண்டி நிக்கும் போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது சிங்கம் புலி யானை என இருக்கும்.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதி கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரஸ்க்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்... அப்போ ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும் அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால் பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்!

சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளை தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ யாருமே சாப்பிட்டார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!

இப்படியாக தொடர்கிறது...தொடர் வண்டியின் பயணம்...

waiting room with TV. Los angels Bus hold (1969)
28/04/2023

waiting room with TV. Los angels Bus hold (1969)

21/04/2023
👉 தாய்லாந்தில் த்ரீவேல்ராக் என அழைக்கப்படும் 75 மில்லியன் வருட பழமையான அதிசய பாறைகள்..
18/04/2023

👉 தாய்லாந்தில் த்ரீவேல்ராக் என அழைக்கப்படும் 75 மில்லியன் வருட பழமையான அதிசய பாறைகள்..

எகிப்தில் காணப்படும் ஹதோர் கோயில் இது. மர்மங்களின் உச்சம் இந்தகோயில். 400சதுரமீட்டர் அளவிலான இந்த கோயில் முழுக்க முழுக்க...
28/03/2023

எகிப்தில் காணப்படும் ஹதோர் கோயில் இது. மர்மங்களின் உச்சம் இந்தகோயில். 400சதுரமீட்டர் அளவிலான இந்த கோயில் முழுக்க முழுக்க கிரானைட்டினால் வார்க்கப்பட்டுள்ளது. அதாவது உலோக வார்ப்பு போல கிரானைட் வார்ப்பு. தெளிவாக சொல்லவேண்டுமன்றால் கிரானைட் கற்களை உருக்கி குழம்புபோல ஆக்கி செய்யப்பட்ட கோயில் இது. பல அறைகள் சிலைகள் மூலதெய்வமான ஹதோர் உள்பட அனைத்தும் செதுக்கப்பட்டவை அல்ல. வார்ப்புகள்(மோல்ட்). கிரானைட்டை உருக்கும் தொழில்நுட்பம் இப்போதுவரை இந்த நவீன உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் அதிசயமே. ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? அந்த காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பம் அதுவும் அணுவை வைத்து எதையும் உருக்கும் டெக்னாலஜி இருந்தால்தான் இது சாத்தியம் என்பதுதான்.
அந்த தொழில்நுட்பங்கள் அந்த மனிதர்கள் இவையெல்லாம் என்னவானது?!! மர்மதேசம் எகிப்து.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Tech Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share