Jaffna Hindu

Jaffna Hindu சுவாரசிய செய்திகள் உடனுக்குடன்

25/03/2026

கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகளை சாட்சியாக மாற்றி தப்ப வைக்க முயன்ற சுமந்திரன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரான திலீபன் தயாளினியின் கொலை சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயமாக பார்க்கப்படுகிறது. குறித்த விரிவுரையாளரை அவரது மகளின் கணவன் கொலை செய்வதற்கு விரிவுரையாளரின் மகளும் உடந்தையாக இருந்த விடயம் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமானது.
யாழ்ப்பாண பொருளாதாரம்

இந்நிலையில் கொலை சந்தேகநபரான விரிவுரையாளரின் மகளை அரச தரப்பு சாட்சியாக மாற்றி, கொலைக்கும் அவருக்குமிடையே சம்பந்தம் இல்லை அல்லது அச்சுறுத்தலின் பேரில் கொலையாளியுடன் சேர்ந்து சொன்றதாக காண்பித்து அவரை கொலை குற்றச்சாட்டில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு சுமந்திரன் தயாரான இரகசியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விரிவுரையாளரின் மகனின் கோரிக்கைக்கு அமைவாகவே சுமந்திரன் இவ்வாறு தயாரானதாக உள்ளார்ந்த தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இருப்பினும் ஊடகவியலாளர் கஜி முகநூலில் வெளியிட்ட பதிவால் எழுந்த சுமந்திரனுக்கு எதிரான கடுமையான எதிர்ப்புகளால் சுமந்திரன் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்ற அளவுக்கு உத்தமன்போல் கருத்து பகிர்ந்து காய்வெட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மயானத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட முயன்றபோது சுமந்திரன் அவர்களை அச்சுறுத்தும் வகையில், ஒளிப்படங்கள், காணொளிகள் பகிர்ந்தால் கைது செய்யப்போவதாக அச்சுறுத்தினார். பொலிஸாரே பேசாமல் நிற்கும்போது நீதிமன்ற கட்டளை எதுவுமின்றி சுமந்திரன் தன்னிச்சையாக ஊடகங்களை அடக்கிய விடயம் தற்போது பல்வேறு கேள்விகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த பெண்ணை காப்பாற்றுவதற்கு சுமந்திரன், பொலிஸ் உயர்மட்டங்களுடனும் பேசியதாக இரகசிய தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

அரச இயந்திரங்கள் ஊடகவியலாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றன என்பது ஒருபுறமிருக்க ஒரு தமிழ் சட்டத்தரணியே எந்தவிதமான அதிகாரமும் இல்லாமல் இவ்வாறு செய்தது சுமந்திரன் மீது மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணுக்காக சுமந்திரன் ஆஜராவதாக வெளியிட்ட ஒரு பதிவையே பொறுத்துக்கொள்ள முடியாத சுமந்திரன், அதே பெண்ணை காப்பாற்ற பலதரப்பட்ட முயற்சி எடுத்ததும், அவருக்காக ஆஜராக ஆரம்பத்தில் சம்மதித்ததும் அவருக்கு தவறாக தெரியவில்லையா?

குறித்த பெண்ணை நீதிமன்றத்தின் அனுமதி பெற்றா அல்லது சுமந்திரன் தனது உயர்மட்ட செல்வாக்கின் அடிப்படையிலா மயானத்துக்கு அழைத்து சென்றார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த கேள்வி எழுவதற்கு சுமந்திரனின் செயற்பாடுகளே காரணம். தனது குட்டுகள் வெளிப்பட்டவுடன் அரசியல் இருப்புக்கு ஆபத்து என்பதால் நழுவி செல்வது தெளிவாக தெரிகிறது.

சுமந்திரன் எந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் ஊடகவியலாளர் என்ன செய்தியை வெளியிடவேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டாம். ஆனால் சுத்துமாத்து சுமந்திரன் ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்து தனது காவாலி தனத்தை காட்டியுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணை விரிவுரையாளரின் வீட்டில் நடைபெற்ற இறுதிச் சடங்குக்கோ அல்லது அல்லது பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக்கோ அழைத்து சென்றால் அங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் தனக்கும் பிரச்சினை என உணர்ந்தால் சுத்துமாத்து சுமந்திரன் சுடலைக்கு அழைத்து சென்றமை தெரியவருகிறது.

தனக்கு எதிராக கருத்து பதிவிட்ட ஊடகவியலாளர் கஜிக்கு எதிராக கருத்துக்களை பகிருமாறு சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டது என்ற விடயமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் வழக்கிற்கு ஆதரவாக சுமந்திரன் ஆஜராகவில்லை என்றும் துளசி என்ற பெண் சட்டத்தரணியே ஆஜராகியதாகவும் சுமந்திரனின் செம்புகள் கூறுகின்றன. துளசி என்ற பெண் சட்டத்தரணி சுமந்திரனுக்கு கீழே வேலை செய்பவர் என்ற விடயமும் தெளிவாகியுள்ளது. சுமந்திரன், சிறிய வழக்குகள் அல்லது தனக்கு பாதகமான வழக்குகளை தனக்கு கீழுள்ள அல்லது தனக்கு சார்பான சட்டத்தரணிகளுக்கு வழங்கிவிட்டு முக்கிய சந்தர்ப்பங்களில் தான் ஆஜராகின்ற திருவிளையாடல் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. வழக்கு வேறொரு சட்டத்தரணியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் தனது பெயர் வெளிவராத என்ற சுத்துமாத்து எண்ணமே இதற்கு காரணம்.

மிகவும் பாரதூரமான குற்ற சம்பவங்கள் இடம்பெறும்போது அதில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் சிக்கினால் உடனடியாக தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே எடுக்கின்ற அல்லது அந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்ற அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

வலி வடக்கு தவிசாளரான சுகிர்தனின் வீட்டில் வேலை செய்த பெண்ணொருவர் தீயில் எரிந்து பலியான சம்பவத்திலும் சுமந்திரனே தலையிட்டு அது ஒரு தற்கொலை என காண்பித்து சுகிர்தனை காப்பாற்றிய கொடூரமும் இடம்பெற்றது.

விரிவுரையாளரின் மகளை காப்பாற்ற துடிக்கும் சுமந்திரனின் உள்நோக்கம் என்ன? இந்த வழக்கில் ஆர்வம் காட்டும் சுமந்திரன், புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கு, காட்டுப்புலம் ரெஜீனா கொலை வழக்கு என கொடூரமான கொலை வழக்குகளில் முதன்மை சட்டத்தரணியாக ஆஜராகாதது ஏன்? காசு கிடைக்காது என்பதாலா?

சுத்துமாத்து சுமந்திரன் அடங்க வேண்டும் இல்லாவிட்டால் சுத்துமாத்து சுமந்திரன் இதுவரை ஆஜராகி குற்றவாளிகளை காப்பாற்றி விட்ட அனைத்து வழக்குகளும் தூசு தட்டப்பட்டு மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஒன்று பேசிவிட்டு பின்னர் அதனை தான் அவ்வாறு பேசவில்லை என்று சுத்துமாத்து செய்வது சுமந்திரனின் வளமையான பாணி. இவ்வாறான பின்னணியில் முதலமைச்சர் ஆகும் ஆசை சுத்துமாத்து சுமந்திரனுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனக்கு எதிரானவர்களுக்கு ஆசனம் ஒதுக்காமல் காய்வெட்டுவதற்காக ஒரு சுத்துமாத்து கதையை சுமந்திரன் அவிழ்த்து விட்டார். அதாவது ஏற்கனவே தேர்தல் கேட்டு தோற்றவர்களுக்கு தேர்தலுக்கான ஆசனங்கள் வழங்கப்படாது என்று. கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்வினார். அப்படி சொன்ன அதே சுமந்திரன் தற்போது தான் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் என கூறுகின்றார்.

08/03/2026

முஸ்லிம் தீவிரவாதிகளின் அட்டகாசம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் முஸ்லிம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள பகுதியில், நேற்று (06) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் அதிகமான மக்களைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் 3 தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.

இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்தக் கடத்தலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது

15/02/2026

வெறும் பேச்சு மாத்திரம் தான். செயலில் ஒன்றுமில்லை. சட்டத்தரணி ஒருவர் அவரது மனைவியுடன் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த இரண்டு கொலைகளுடன் தொடர்பு படுத்தி நாட்டில் நடக்கும் கொலை கலாசாரம் குறித்து பலர் அரசுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சட்டத்தரணிகள் சங்கம் கூட தனது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறது.
ஆம் உண்மை தான் இதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டியது தான். அதில் நானும் உடன்படுகிறேன்.

ஆனால் இந்த நாடு இந்தளாவது மீதம் இருக்கின்றது என்பதே பெரிய விடயம் தான்.
நாட்டின் பிரதம நீதியரசரை காதைப் பிடித்து வெளியேற்றியதும், தனக்கு ஏற்றாற் போல செக்கு மாட்டை கொண்டு வந்து அந்த பதவியை அலங்கரித்த நாடு இது.

ஜூலம்பிட்டிய அமரே, சொத்தி உபாலி, கோணவல சுனில் முதல் வம்பொட்டா, மதூஷ் வரை பாதாள உலகக்குழுக்கள் ஆட்டி படைத்த ஒரு இருண்ட காலம் கடந்த ஆண்டுவரை இந்த நாட்டில் இருந்தது.

பாதாள உலகக்குழுக்களை போல திட்டமிட்டு கிரிமினல் வேலைகளை பார்க்கும் பொலிஸ் மா அதிபர் மக்களை பாதுகாக்கும் முக்கிய பொலிஸ் திணைக்களத்தில் இருந்த நாடு இது.

குடு லன்ஷா முதல் துமிந்த, பாரத போன்றவர்கள் போதைப்பொருள் கொண்டு வந்து விற்றது மாத்திரமல்லாமல் அதற்காகவே வீதியில் ஒருவரை ஒருவர் கொலை செய்த அரசியல்வாதிகள் இருந்த ஒரு அரசியல் அமைப்பு கொண்ட நாடு இது.
முன்னாள் ஜனாதிபதிகள் கூட போதைப் பொருள் மன்னர்களை காப்பாற்ற ஹெலிகாப்டரில் உடனே வீட்டுக்கு சென்ற காலமும் இருந்தது.

‘ஐஸ்’, ‘குடு’ விற்கப்பட்ட அளவுக்கு, இளைஞர் தலைமுறையை போதைப்பொருளால் எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கக்கூடிய நிலைக்கு தள்ளிய நாடு இது.
சில கிராமங்களில் காப்பாற்ற ஒரு நல்ல இளைஞரையே கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நாடு நாஷாமாய் போய் இருந்தது.

சில பகுதிகள் இன்னுமே போதையில் இருந்து மீட்கப்படத பிரதேசங்கள்போலவே உள்ளன.
யார் இதில் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாத நிலை.

இந்த அனைத்தும் பல தசாப்தங்களாக வளர்ந்ததே தவிர, திடீரென்று முளைத்ததல்ல.
ஜே.ஆர்., பிரேமதாச காலத்தில் சந்திகளில் கத்திக்குத்து நடந்த காலம் கடந்து இன்று கிலோ 500, 1000 அளவில் போதைப்பொருள் கொண்டு வரப்படும் நிலை வரை வளர்ந்து இருக்கும் துஷ்ட அமைப்பு இது.

சிறை பேருந்தை கூட வழியில் தடுத்து, அதிகாரிகள் முன்னிலையிலேயே கொலை செய்து விட்டு தப்பும் அளவுக்கு சங்கர் படங்கள் போல இருந்த கட்டமைப்பு.

இந்த எல்லாவற்றையும் ஒரு ஆண்டில் தலைகீழாக மாற்ற சொல்லி அது முடியவில்லை என்றால் “இவர்கள் பயனில்லை” என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

அரசு தயாராக இருந்தாலும், “இந்த இராஜ்ஜியம்” இன்னும் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு சிறையையும் சோதிக்கும்போது உள்ளே போன்கள், கஞ்சா, குடு கிடைப்பது அரசுப் பணியாளர்கள் இன்னும் மாற தயாராக இல்லை என்பதற்கே சான்று.

இந்த ஆண்டுக்குள் இந்த அரசு பல விடயங்கள் செய்யும் என நம்பலாம்.
சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு அந்த சுதந்திரம் அவசியம்.

ஆனால் நான் முன்பு கூறிய மற்ற விடயங்களுடன் சேர்த்து பார்க்கும்போது அந்த பாதாள உலகத்திற்கு இவை ஒன்றும் பொருட்டல்ல.
இந்த கூட்டம் விரும்புவது குழப்பமான நாட்டை. அவர்களுக்கு தேவையானது சட்டம் இல்லாத நாடு.

இந்த நாடு இன்னும் முழுமையாக சுத்தமானது அல்ல என்பதை வழக்கறிஞர்களும் உணர வேண்டும்.
அந்த அவநீதியின் கட்டமைப்புக்குள் சென்று சட்ட உதவி தரும் தருணத்திலேயே அதே கட்டமைப்புக்குள் இருக்கும் மற்ற குற்றவாளிகளும் இருப்பார்கள் என்பதை நாம் ஏற்க வேண்டும்.

அரசு தனது பக்கத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை அதிகபட்சமாக எடுத்து வருகிறது.

இந்த அரசைத் தவிர வேறு யாராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியுமா என்று யோசித்து பாருங்கள்.

மீண்டும் பிரேமதாசா, விக்ரமசிங்க, ராஜபக்ஷ போன்றவர்களுடன் இது சரியாகும் என்று யாராவது நினைத்தால் அவர்களிடம் சொல்ல ஒன்றே ஒன்று இருக்கிறது சொரி டொட் கோம்.

இந்த அரசு அனைத்திற்கும் பொறுப்பு ஏற்று, செய்ய முடிந்தவற்றை அதிகபட்சமாக செய்கிறது.

பல தசாப்தங்களாக பாதாள உலக்குழுக்கள் ஆண்ட இந்த நாட்டை ஒரு ஆண்டில் முழுமையாக குணப்படுத்தலாம் என்று கூறி அரசியல் செய்யும் அளவுக்கு எதிர்கட்சி போன்று எம்மால் மலிந்த அரசியல் செய்ய முடியாது.

25/12/2025

🔴உடல் முழுவதும் வரும் நோய்களுக்கு எந்த மருத்துவர்? – முழு வழிகாட்டி🔴

பலருக்கும் நோய் ஏற்பட்டவுடன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை, யாரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதைக் கண்டறிய முடியாததுதான். தலைவலி வந்தால் கண் மருத்துவரிடம், மார்பில் எரிச்சல் வந்தால் இதய மருத்துவரிடம் ஓடி ஆயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்கிய அனுபவங்கள் பலருக்கும் உண்டு.

நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன, அதற்கான சரியான நிபுணர் யார் என்பதில் அடிப்படை அறிவு இல்லாததால் நேரமும் பணமும் இரண்டுமே இழக்கப்படுகிறது. எனவே, அறிகுறிகளுக்கு ஏற்ப சரியான மருத்துவரைத் தேர்வு செய்வது மிக முக்கியம்.

🟢 முதலில் நினைவில் கொள்ள வேண்டியது

சிறிய காய்ச்சல், சளி, உடல் வலி போன்ற ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், நேரடியாக நிபுணர் மருத்துவரிடம் ஓடுவது அவசியமில்லை.

👉 முதலில் பொது மருத்துவர் (General Practitioner / Family Doctor) அல்லது 👉 அரசு மருத்துவமனையின் OPD-யை அணுக வேண்டும்.

அவர்கள் தேவையெனில் மட்டுமே சரியான நிபுணரிடம் உங்களை பரிந்துரை செய்வார்கள். இதனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம்.

🧑‍⚕️ அறிகுறிகளுக்கு ஏற்ப நிபுணர் மருத்துவர்கள் – முழுப் பட்டியல்

1️⃣ இதய நோய் நிபுணர் (Cardiologist) – மார்புவலி, மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம் (மருந்து சிகிச்சை)

2️⃣ இதய & மார்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Cardiothoracic Surgeon) – பைபாஸ், வால்வு மாற்று அறுவை சிகிச்சைகள்

3️⃣ பொது மருத்துவ நிபுணர் (General Physician) – காய்ச்சல், நீரிழிவு, கொலஸ்ட்ரால், உள் உறுப்புகள் தொடர்பான நோய்கள்

4️⃣ பொது அறுவை சிகிச்சை மருத்துவர் (General Surgeon) – அப்பெண்டிசைட்டிஸ், ஹெர்னியா, வயிறு அறுவை சிகிச்சைகள்

5️⃣ ஹார்மோன் நிபுணர் (Endocrinologist) – கட்டுப்படாத நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள்

6️⃣ நரம்பியல் நிபுணர் (Neurologist) – தலைவலி, ஸ்ட்ரோக், வலிப்பு, நினைவழப்பு (மருந்து சிகிச்சை)

7️⃣ நரம்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Neurosurgeon) – மூளை, முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள்

8️⃣ எலும்பு & மூட்டு நிபுணர் (Orthopedic Surgeon) – எலும்பு முறிவு, முதுகு வலி, மூட்டு பிரச்சினைகள்

9️⃣ மூத்திர & ஆண் நல நிபுணர் (Urologist) – சிறுநீரக கல், சிறுநீர் பிரச்சினைகள், புரோஸ்டேட்

🔟 சிறுநீரக நிபுணர் (Nephrologist) – சிறுநீரக செயலிழப்பு, டயாலிசிஸ்

1️⃣1️⃣ வயிறு & குடல் நிபுணர் (Gastroenterologist) – காஸ்ட்ரைட்டிஸ், கல்லீரல், செரிமான கோளாறுகள்

1️⃣2️⃣ மூச்சுத் திணறல் நிபுணர் (Respiratory Physician) – ஆஸ்துமா, நிமோனியா, காசநோய்

1️⃣3️⃣ குழந்தைகள் நிபுணர் (Paediatrician) – பிறந்த குழந்தை முதல் 16–18 வயது வரை

1️⃣4️⃣ மகப்பேறு & மகளிர் நிபுணர் (Gynecologist / VOG) – கர்ப்பம், மாதவிடாய் கோளாறுகள்

1️⃣5️⃣ கண் மருத்துவர் (Ophthalmologist) – கண் பார்வை, கண் நோய்கள், cataract

1️⃣6️⃣ காது–மூக்கு–தொண்டை நிபுணர் (ENT Surgeon) – கேட்கும் திறன், சைனஸ், குரல் பிரச்சினைகள்

1️⃣7️⃣ தோல் நிபுணர் (Dermatologist) – சிரங்கு, முகப்பரு, முடி உதிர்தல், தோல் நோய்கள்

1️⃣8️⃣ பாலியல் நோய் நிபுணர் (Venereologist) – STD / பாலியல் நோய்கள்

1️⃣9️⃣ மூட்டு நோய் நிபுணர் (Rheumatologist) – Arthritis, Autoimmune நோய்கள்

2️⃣0️⃣ மனநல மருத்துவர் (Psychiatrist) – மன அழுத்தம், தூக்கமின்மை, மனஅழுத்த நோய்கள்

2️⃣1️⃣ புற்றுநோய் நிபுணர் (Oncologist) – கீமோதெரபி, ரேடியோதெரபி

2️⃣2️⃣ புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் (Onco Surgeon) – புற்று கட்டி அகற்றல்

2️⃣3️⃣ இரத்த நோய் நிபுணர் (Hematologist) – அனீமியா, தலசீமியா, லியூகேமியா

2️⃣4️⃣ இரத்த நாள அறுவை நிபுணர் (Vascular Surgeon) – Varicose veins, diabetic foot

2️⃣5️⃣ வாய் & முக அறுவை மருத்துவர் (OMF Surgeon) – முக எலும்பு, வாய்ப்புற்று

2️⃣6️⃣ பல் மருத்துவர் (Dental Surgeon) – பல் அகற்றல், நிரப்புதல்

2️⃣7️⃣ பல் ஒழுங்கு நிபுணர் (Orthodontist) – Braces, பல் சீரமைப்பு

2️⃣8️⃣ பிளாஸ்டிக் சர்ஜன் (Plastic Surgeon) – தீக்காயம், அழகுக்காக அறுவை சிகிச்சை

2️⃣9️⃣ போஷண நிபுணர் (Nutritionist) – உடல் எடை, உணவுக் குறைபாடுகள்

3️⃣0️⃣ விளையாட்டு மருத்துவ நிபுணர் (Sports Medicine Doctor) – விளையாட்டு காயங்கள்

3️⃣1️⃣ மூத்தோர் நிபுணர் (Geriatrician) – வயோதிபர்களின் சிக்கலான நோய்கள்

3️⃣2️⃣ அலர்ஜி & நோய் எதிர்ப்பு நிபுணர் (Allergist / Immunologist) – அலர்ஜி, ஆஸ்துமா

3️⃣3️⃣ வலி மேலாண்மை நிபுணர் (Pain Management Specialist) – நீண்டகால வலி, புற்றுநோய் வலி

⚠️ முக்கிய அறிவுரை

❌ பிறர் சொல்வதை கேட்டு சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். ❌ மருந்தகத்தில் நினைத்தபடி மாத்திரைகள் வாங்க வேண்டாம்.

✅ சரியான தகுதி பெற்ற மருத்துவரை அணுகுங்கள்.

📞 சந்தேகம் இருந்தால் 1990 – சுவசரிய அல்லது மருத்துவமனை தகவல் மையத்தை அணுகுங்கள்.

👉 சரியான மருத்துவரைத் தேர்வு செய்வதே 👉 விரைவான குணமடைவிற்கும் 👉 தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதற்கும் சிறந்த வழி.

02/05/2025

இலங்கை பல்கலைக்கழகங்களில் பகுதி வதை சம்பவங்கள்..
*1975 ஆம் ஆண்டு – பேராதனை பல்கலைக்கழக மாணவி ரூபா ரத்னசீலி, பாலியல் துஷ்பிரயோகத்தை தவிர்க்க, ராமநாதன் மண்டபத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து, உடல் உறுப்புகள் செயற்படாமல் போய் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

1992 ஆம் ஆண்டு – களனி பல்கலைக்கழகத்தில் பெண் மாணவி தனது முன்னாள் காதலனால் குத்திக் கொல்லப்பட்டார்.
1993 ஆம் ஆண்டு – ருஹுணு பல்கலைக்கழகத்தில் சமிந்தா புஞ்சிஹேவா பகிடிவதையின் விளைவாக உயிரிழந்தார்
1997 ஆம் ஆண்டு - ருஹுணு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவி கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால், தற்கொலை செய்து கொண்டார்.
1998 ஆம் ஆண்டு – பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதையின் போது ஏற்பட்ட காயங்களால், வரபிரகாஷ் என்ற மாணவர் உயிரிழந்தார்
2002 ஆம் ஆண்டு – ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையைத் தடுக்க முயன்றபோது, ஓவிடிகல விதானகே சமந்த என்ற மாணவர் கொல்லப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு – களனி பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி தனது முன்னாள் காதலனால் குத்திக் கொல்லப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு - ருஹுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் ஒரு மாணவியின் கால் செயலிழந்தது
2011 ஆம் ஆண்டு - பேராதனை பல்கலைக்கழகத்தில் புதிய மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக, மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2013 ஆம் ஆண்டு - பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மூன்று மாணவிகள், கழிப்பறையில் புதிய மாணவிகளை ராக்கிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர், ராக்கிங் செய்யும் போது, ​​புதிய மாணவிகள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
2014 ஆம் ஆண்டு - பேராதனை பல்கலைக்கழகத்திற்குள், ஒரு முன்னாள் மாணவர் தற்கொலை செய்து கொண்டார், பகிடிவதைக்கு உள்ளாகியதால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டார்
2015 ஆம் ஆண்டு - சபரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய மாணவி அமலி சதுரிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு - சப்ரகமுவா பல்கலைக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு மாணவன் சரித் தில்ஷான் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. (Translated)

Source - Social Media

😆
10/04/2025

😆

25/12/2024
தான் பெருமை மிகுந்த கிறிஸ்தவன் என்று அடையாளப்படுத்தும் ஒருவன்! தேர்தல் வந்தவுடன் எங்கு  வந்து நடிக்குறான் பாருங்கள்.
11/10/2024

தான் பெருமை மிகுந்த கிறிஸ்தவன் என்று அடையாளப்படுத்தும் ஒருவன்! தேர்தல் வந்தவுடன் எங்கு வந்து நடிக்குறான் பாருங்கள்.

22/09/2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

அனுர குமார திசாநாயக்க - 7017058 ( 50.30%)

சஜித் பிரேமதாச - 5083968 (36.44%)

ரணில் விக்ரமசிங்க - 1182234 (8.47%)

நாமல் ராஜபக்‌ஷ - 406137 (2.91%)

மற்றையவை - 260464 (1.86%)

மொத்த வாக்களிப்பு - 1 39 49861

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share