NTTV TAMIL - தமிழ்

NTTV TAMIL -  தமிழ் ' யாதும் ஊரே யாவரும் கேளீர் '
"Stay Informed. Stay Engaged."

23/04/2025

யாழ் குறிகட்டுவான் ஜட்டிக்கு வந்த சோதனை 😂😫😳

பெண்கள் கருவறைக்குள் வரக்கூடாது,  ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடாது , போப் ஆகமுடியாது,  மசூதிக்குள் வரமுடியாது என அனைத்து மத...
19/03/2025

பெண்கள் கருவறைக்குள் வரக்கூடாது, ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடாது , போப் ஆகமுடியாது, மசூதிக்குள் வரமுடியாது என அனைத்து மதக் கட்டுகளும் பெண்களுக்கு எதிரானவை என்பதை நிரூபித்து ..

அறிவியலே அனைத்தையும் மாற்றும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில்
இன்று சுனிதா வில்லியம்ஸ் சர்வேதச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக தங்கி திரும்ப வந்துள்ளார்..

இதுதான் பகுத்தறிவின் வளர்ச்சி ....

அறிவியலே அனைத்தையும் மாற்றும்.

இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும். புகைப்படத்தின் நடுவில் இர...
09/03/2025

இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும். புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு வதைக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கைதியாவார்.

இரு பக்கங்களிலும் ஆயுதம் ஏந்தியிருப்பவர்கள், அரச பாதுகாப்பு படையினருக்கு உட்பட்டவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாக தெரியும்.

இவர்கள், அற்கால காபினட் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரான போலீஸ் அதிகாரி டக்லஸ் பீரிஸின் இரு மகன்கள்.
கைது செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் கை, கால்களை உடைத்து சித்திரவதை செய்வது இவர்கள் மேற்கொண்ட ஒரு விளையாட்டு என எடுத்துக் கொள்ளலாம்.

பின்னாளில் ஆட்சி மாற்றத்துடன், டக்லஸ் பீரிஸ் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.
பின்னர் நீதிமன்றத்தின் சிறப்பு நடவடிக்கையால், அவர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, பட்டலந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும்,
சந்திரிகா குமாரதுங்க அரசின் அலட்சியம் காரணமாக, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.

டக்லஸ் பீரிஸ் பின்னர் உயிரிழந்தார்.
அவர் மகன்கள் இருவரும் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவன் அங்கே தீ விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டக்லஸ் பீரிஸின் நெருங்கிய நண்பரான அந்த காபினட் அமைச்சர், இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ஆனார்.
அந்த காலத்தில் ரணிலின் குற்றங்களை அம்பலப்படுத்த வந்த சந்திரிகா குமாரதுங்க, தற்காலத்தில் ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த மறைமுகமாக உதவி செய்தார்

அந்த காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசு, 1987ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலைப் முண்ணனியை (JVP) இரத்தமும் இரும்பும் கொண்டு அடக்க முயற்சிகள் மேற்கொண்டது.
மாத்தறையில் H.R. பியசிறி,
வட மத்திய மாகாணத்தில் நெல்சன், M.S. அதிகாரி, மஹிந்தசோம,
களுத்துறையில் ரணவக்க,
காலியில் M.S. அமரசிறி,
குருநாகலில் காமினி ஜயவிக்ரம பெரேரா,
ஹலாவத்த, புத்தளம் பகுதிகளில் பெப்டஸ் பெரேரா, ஜான் அமரதுங்க, ஜோசப் மைக்கேல் பெரேரா,
கம்பஹாவில் போல் பெரேரா,
இவர்கள் ஒவ்வொருவருக்கும் J.R. ஜெயவர்தன அரசு அதிகாரங்களை வழங்கியது.

பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அடக்குமுறையை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தது. 1987 ஆம் ஆண்டில், பட்டலந்த வதைக்கூடத்தை நிறுவியது அவரே. அதற்காக, கொழும்பிற்கு அருகில் இருந்த சில அரசியல் ஆதரவாளர்களின் கட்டளைக்கிணங்கி, எந்தவொரு தீவிர செயலும் செய்யத் தயங்காத காவல்துறையினரை தேர்ந்தெடுத்தார்.
அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக கான்ஸ்டபிள் டக்லஸ் பீரிஸ் இருந்தார்.
அவர் ஒரு மனித உருவை உடைய மிருகம் எனக் கூறலாம்.

பட்டலந்த வதைக்கூடத்தின் தலைவராக, ரணில் விக்ரமசிங்கவினால் டக்ளஸ் பீரிஸ் உயர் காவல் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
இதற்காக காவல்துறை விதிகளையும் சட்டங்களையும் முற்றிலும் மீறப்பட்டது.
இந்த பதவி உயர்வுக்கு R. பிரேமதாச, ஜோசப் மைக்கேல், ஜான் அமரதுங்க ஆகியோர் முக்கிய பங்கை வகித்தனர்.

பட்டலந்த வத்காகாரத்திற்குக் கொண்டுவரப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தேசப்பற்றுள்ள பொதுமக்களை கொலை செய்ய, ரணிலின் நேரடி கட்டளையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த கொடூர கொலைகள் மேற்கொண்ட முக்கிய நபர், இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைகளின் தந்தையான டக்லஸ் பீரிஸ்தான்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டார் என்ற ஒரே வாதத்தை வைத்து ரணிலை மாபெரும் புத்திசாலியாக சிலர் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர் நாட்டை மீட்டார் என்பதை விட நாட்டின் பல விலைமதிப்பற்ற இடங்களையும், சொத்துக்களையும் விற்று நாட்டை மீட்டார் என்று கூறுவது சாளச் சிறந்தது என நினைக்கிறேன்.

எது எப்படியோ ரணிலின் ஆரம்ப கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பல அப்பாவிகளின் இரத்தக் கறைகள் அவர் ஆடையில் பதிந்து தான் இருக்கிறது. எவ்வளவு நல்லவனாக நீங்கள் அவரை சித்தரிக்க முயன்றாலும் அவர் ஓர் சிறிய ஹிட்லர் தான்.

நன்றி: வலைத்தளம்

பூமியை விட 1.3 மில்லியன் மடங்கு பெரியது சூரியன்.பூமியை விட 1300மடங்கு பெரியது வியாழன்.சூரியனை விட betelgeuse(திருவாதிரை ...
23/12/2024

பூமியை விட 1.3 மில்லியன் மடங்கு பெரியது சூரியன்.
பூமியை விட 1300மடங்கு பெரியது வியாழன்.
சூரியனை விட betelgeuse(திருவாதிரை நட்சத்திரம் 700 மடங்கு பெரியது.
டீபன்சன் 2-18 என்ற நட்சத்திரம் சூரியனை விட 10பில்லியன் மடங்கு பெரியது .
ரீகல் நட்சத்திரம் சூரியனை விட 1,20,000 மடங்கு பெரியது.
இதுபோல் ரெட் செயின்ட் நட்சத்திரங்கள் 26 இருக்கிறது இதுவரை நாம் கண்டுபிடுத்தது.
சூரியனின் வெப்பநிலை 5500டிகிரி.
16கோடி தொலைவில் இருப்பதால் தான் நம்மால் இங்கு உயிர் வாழ முடிகிறது.
சூரியனில் இருந்து வரும் ஒளி நமது பூமியை அடைய 8.33 நிமிடங்கள் ஆகும்.
இதுல நம்ம பூமி எங்க இருக்கு எவ்வளவு சின்னதுன்னு தேட வேண்டியது தான் இருக்கு

இதுல ஒரு மூணு சென்ட் எடம் வாங்கி ஒரு லோன் போட்டு வீட்ட கட்டிட்டு இதுக பண்ற அலம்பற

உங்கள எல்லாம் பார்த்தா ஒரு பக்கம் பாவமாவும் இருக்கு சிரிப்பாவும் இருக்கு

அற்ப பதறுகள்

19/12/2024

உப்பு தட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்யும் அளவுக்கு உப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்படக்கூடிய உப்புத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

சுமார் 15 வருடங்களின் பின்னர் இலங்கையில் பொது பாவனைக்காக உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உப்பு தேவை
இந்நாட்டு மக்களின் உப்புத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னார், அலிமங்கட மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உப்பளங்களில் இருந்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

உப்பு தட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இதன்படி, நாட்டின் வருடாந்த உப்புத் தேவை 180,000 மெற்றிக் தொன்களாகும். இதில் 50வீத பொதுத்துறை நிறுவனமும், 50வீத தனியார் துறையும் உற்பத்தி செய்கின்றன. ஆனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 200,000 மெற்றிக் தொன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் உப்பு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.

70வீத உப்பு உற்பத்தி செய்யப்படும் ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான அதிக பருவத்தில் மழையுடன் கூடிய மோசமான வானிலையே இதற்கு முக்கிய காரணம். இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எதிர்பார்த்த உப்பு உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தீர்வாக 30,000 மெற்றிக் தொன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்க...
19/12/2024

முள்ளிவாய்க்கால் கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில்(19.12.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகானது திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது.

25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்
இந்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உணவுகள் வழங்கப்பட்டதோடு திருகோணமலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

19/12/2024

இலங்கை செல்வதில் பெரும் அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்..!

அண்மையில் ஈழத்தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டமையானது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து, தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஈழத்தமிழர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைசட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்களித்திருந்த தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இவ்வாறான ஒரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமையானது பல்வேறு தரப்புகளில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த பிரித்தானிய பிரஜை தொடர்பான வழக்கு, அனைத்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கைக்கு பயணம் செய்யும் விடயத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

🦀❤🐶 அழகு
19/12/2024

🦀❤🐶 அழகு

இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் ...
18/12/2024

இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள்

இதுவரை காலமாக சிறிய தவறுகள் என கருதப்பட்ட இந்த தவறுகள் ஆதாரபூர்வமாக நிருபக்கப்படுமாயின் 48 மணி நேரத்திற்குற்குள் தகுந்த தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி அறிவிப்பு

வெள்ள நிலைமைகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில்  விலங்குகளை அழைத்துச் செல்ல முடியாவிட்டால்,அவற்றில் கட்டப்பட்ட சங்கி...
27/11/2024

வெள்ள நிலைமைகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் விலங்குகளை அழைத்துச் செல்ல முடியாவிட்டால்,

அவற்றில் கட்டப்பட்ட சங்கிலியை அவிழ்த்து விட்டுச் செல்லுங்கள்.

4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்!8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டி...
19/11/2024

4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும்.

12 வயதில் உன் சாதனை என்பது
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.

18 வயதில் உன் சாதனை என்பது
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.

23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.

25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும்.

30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.

35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும்.

45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ தக்க வைத்துக் கொள்வதாகும்.

50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.

55 வயதில் உன் சாதனை என்பது
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.

60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.

65 வயதில் உன் சாதனை என்பது
நோயின்றி வாழ்வதாகும்.

70 வயதில் உன் சாதனை என்பது
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.

75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும்.

80 வயதில் உன் சாதனை என்பது
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.

இவ்வளவுதான் வாழ்க்கைச் சுற்றோட்டம்.

ஆதலால் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவனுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள்!

மறு உலக நம்பிக்கை இருந்தால் அதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்! ✍ ♥️👊

18/10/2024

சிங்கமாக இருந்தாலும் பலம் உள்ளவரைதான் மரியாதை🥹🥹🥹🥹

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTTV TAMIL - தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share