HI TV Tamil

HI TV Tamil நாளும் புதுப்புது விடயங்களுடன்...

ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு நிராகரிப்பு- இதுவரை அவர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லைHI TV TAMIL NEWSஇலஞ்ச ஒழிப்பு ஆ...
18/07/2025

ராஜித சேனாரத்னவின் முன் பிணை மனு நிராகரிப்பு
- இதுவரை அவர் வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லை

HI TV TAMIL NEWS

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வு தொழிற்பாடுகளை சட்டத்துக்கு முரணாக வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கிய விவகாரம் தொடர்பிலேயே ராஜித தேடப்பட்டு வருகிறார்.

இது தொடர்பில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்தே அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Grand Slam Chess: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தாHI TV TAMIL NEWSலாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தரவரிசைய...
18/07/2025

Grand Slam Chess: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

HI TV TAMIL NEWS

லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4ஆவது சுற்றில் பிரக்ஞானந்தாவுடன், உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரான மேக்னஸ் கார்ல்சன் மோதினார். இந்த சுற்றில் 39ஆவது நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

இதன் மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்தச் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டுசட்டோரோவ், ஜவோகிர் சிந்தரோவ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கால் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.

அமெரிக்க வரியை குறைக்க இன்று முக்கிய கலந்துரையாடல்HI TV TAMIL NEWSஅமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்ப...
18/07/2025

அமெரிக்க வரியை குறைக்க இன்று முக்கிய கலந்துரையாடல்

HI TV TAMIL NEWS

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் குறித்த அரசு அதிகாரிகளுக்கு இடையில் ஓன்லைன் முறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலகளாவிய வரியை விதிக்க முடிவு செய்தார்.

குறைந்தபட்ச விகிதம் 10% ஆக இருந்ததுடன், இது சில நாடுகளுக்கு மிக அதிகமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது.

இந்த புதிய வரிக் கொள்கையை உலகெங்கிலும் உள்ள நாடுகள் கடுமையாக எதிர்த்ததுடன், இந்த வரி நீக்கப்படாவிட்டால் வலுவான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாக சீனா கூறியது.

ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஒன்றாக எதிர்ப்பதாக கூறியிருந்தது.

அத்தகைய சூழலில், இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.

இலங்கை இது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி, அமெரிக்கா இலங்கை மீதான வரியை 30% ஆகக் குறைத்து, புதிய வரி முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.

எனினும் அந்த 30% மேலும் குறைக்க அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடலை நடத்த முடிவு செய்தது.

அதன்படி, நிதி அமைச்சு செயலாளரின் தலைமையில், குறித்த அதிகாரிகளின் பங்கேற்புடன், ஒன்லைன் முறையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடல்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சின் நிலையான விசாரணை பணியகம் முன்னெடுப்புHI TV TAMIL NEWSசஜி...
18/07/2025

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்
- அமைச்சின் நிலையான விசாரணை பணியகம் முன்னெடுப்பு

HI TV TAMIL NEWS

சஜித் பிரேமதாச அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையில் அவ்வமைச்சின் நிலையான விசாரணை பணியகத்திடம் இவ்விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வீடமைப்புத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து அமைச்சு மட்டத்திலான விசாரணைகளை முன்னெடுக்க கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில், தேர்தலை மையப்படுத்தி அதற்கான விளம்பரங்களுக்கு பல கொடி ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் கைதுHI TV TAMIL NEWSஇணையவழி ஊடாக நபரொருவரின் வங...
18/07/2025

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் கைது

HI TV TAMIL NEWS

இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவன் வவுனியா - புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றஙில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலிHI TV TAMIL NEWSமுன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந...
18/07/2025

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

HI TV TAMIL NEWS

முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது.

உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் மரணம் முற்றுகையின் கீழ் பொதுமக்கள் மருத்துவஉதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாங்கள் துயரடைகின்றோம் சம்பந்தப்பட்ட தரப்பினரை வாழ்க்கையின் புனிதத்தினையும் அதனை பாதுகாப்பதற்கான தளத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பத்துபேர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன எறிகணை சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அல் அஹ்லில் அராபிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்ப்ராஹிம்சகல்லா கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

தேவாலயம் தாக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டதாக சகல்லா கூறினார். "நான் ஆம்புலன்ஸில் ஏறி நேராக தேவாலயத்திற்குச் சென்றேன்" என்று அவர் மேலும் கூறினார். "இந்த இஸ்ரேலியஇராணுவம் திமிர்பிடித்தது - அது கிறிஸ்தவரா அல்லது முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை அது ஒரு தேவாலயமா மசூதியா வீடா அல்லது ஒரு பள்ளியா என்பது கூட கவலையில்லை. நாங்கள் ஒரு கொடூரமான போரின் நடுவே வாழ்கிறோம்.

21 மாத காலப் போரின் போது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த தேவாலய வளாகத்தையும் ஷெல் தாக்குதல் சேதப்படுத்தியது.

தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த 75 வயது கிறிஸ்தவரான அட்டாலா டெர்சி கூறினார்: “நான் சில நிமிடங்கள் வெளியே இருந்த பிறகு வகுப்பறைக்குத் திரும்பியபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து வெடிப்பின் சத்தம் இவ்வளவு தீவிரமாக இருந்தது இதுவே முதல் முறை

ஏப்ரல் மாதம் இறப்பதற்கு முன்பு முன்னாள்பரிசுத்த பாப்பரசர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியல் ரோமனெல்லியை ஒவ்வொரு மாலையும் அழைப்பார். ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் காசாவில் பேரழிவுப் போரை தூண்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகுஇ அக்டோபர் 9 2023 அன்று அவர் வழக்கத்தைத் தொடங்கினார்.

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை வயலில் விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் விசாரணைHI TV TAMIL NEWSகுருணாகல், மாவத்தகம,...
18/07/2025

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை வயலில் விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் விசாரணை

HI TV TAMIL NEWS

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று வியாழக்கிழமை (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் இந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இந்த குழந்தையின் தாய் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், குழந்தையின் தாயை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிரிவி கமராக்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம்- கவனயீர்ப்பில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்HI TV TAMIL NEWSமொரவெவ ப...
17/07/2025

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம்
- கவனயீர்ப்பில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

HI TV TAMIL NEWS

மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலகத்தில் இன்று (17) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற இருந்த நேரத்தில் மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல வருட காலமாக மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கின்றபோது, சிலர் நகர் பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளதாகவும், எனவே முறையான இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “NPP அரசே இடமாற்றத்தில் இடம்பெறும் பாராபட்சங்களை நிறுத்து”, “நியாயமான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்து”, “இடமாற்றத்தில் தொழிற்சங்கத்தின் ஒருதலைபட்ச தலையீட்டை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வருகைதந்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன உட்பட அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்து தமக்கு நியாயமான தீர்வினை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தை நடாத்துவதற்கு இடமளிக்குமாறும் தங்களுடைய கோரிக்கைக்கு சிறந்த தீர்வினை பெற்று தருவதாகவும், இது தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அத்துடன் நேற்றைய தினம் (16) கோமரன்டகடவல பிரதேசத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்புHI TV TAMIL NEWSகண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமி...
17/07/2025

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

HI TV TAMIL NEWS

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் வியாழக்கிழமை (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

எஹெலேபொல வளவின் ஒரு பகுதியாக இருக்கும் மலைநாட்டு இராஜ்ஜியத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள் மற்றும் கலைகள் இங்கு மெழுகைப் பயன்படுத்தி மீளுருவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள் மாத்திரமன்றி பண்டைய உணவகமும் நிறுவப்பட்டுள்ளன.

வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர சங்கராஜ தேரர், வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர், மன்னர் விமலதர்மசூரிய , குசுமாசன தேவி, மொனரவில கெப்பட்டிபொல , தேவேந்திர முலாச்சாரி, ஆளுநர் ராபர்ட் பிரவுன்ரிக், எஹெலேபொல மகாதிகாரம், குமாரிஹாமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட வரலாற்றில் முக்கியமான 35 நபர்களின் உயிரோட்டமான மெழுகு உருவங்கள் இங்கு மீளுருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பெருமையையும் கண்ணியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கண்டிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகமானது மலைநாட்டு இராஜ்ஜியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வரலாற்றை தற்போதைய தலைமுறையினருக்கு துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடிய இடமாக இருக்கும்.

கம்பளையில் வசிக்கும் அதுல ஹேரத் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளதோடு ஸ்ரீ தலதா மாளிகையின் எஹெலேபொல வளவு அருங்காட்சியக விசேட திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சியம் மகா பீடத்தின் மல்வது அனுநாயக்க தேரர்களான நியங்கொட விஜிதசிறி தேரர், திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், அஸ்கிரிய அனுநாயக்க தேரர்களான வெந்டருவே உபாலி தேரர், ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால்காந்த, ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைHI TV TAMIL NEWSதேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சி...
17/07/2025

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

HI TV TAMIL NEWS

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.



மேலும், தேயிலையின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.



இரத்தினபுரி பிரதேச செயலகத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுடன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார்.



இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



கடந்த காலங்களில் தேயிலைத் தொழிற்துறையை முன்னேற்றுவதாகக் கூறி, சர்வதேச நாடுகளில் விளம்பரங்களை வெளியிடுவதற்காக மட்டும் 196.5 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.



உலக வங்கியிடமிருந்து 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்தத் திட்டங்களுக்காக முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோர் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.



இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலையின் பெயரை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.



சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இலங்கை தேயிலை சபை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன, இரத்தினபுரி பிரதேச செயலாளர் கே.எஸ். நிசாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

60 வயதில் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றின் அதிரடி அறிவிப்புHI TV TAMIL NEWSஅரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் க...
17/07/2025

60 வயதில் கட்டாய ஓய்வு குறித்து நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

HI TV TAMIL NEWS

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி - பறவைகள் சரணாலய உரிமையாளர் கைதுHI TV TAMIL NEWSநாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திற...
17/07/2025

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் இறக்குமதி - பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது

HI TV TAMIL NEWS

நாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரை இன்று (17) காலை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

நாராஹென்பிட்ட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 250 மில்லியன் பெறுமதியுடைய அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.

இதன்போது, 40 மற்றும் 50 வயதான மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த பறவைகள் சரணாலயத்தின் முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when HI TV Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share