Students Publication 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
நாங்கள் இலங்கையின் தமிழ் மொழி மூலமான நூல் வெளியீட்டாளர்களின் வரிசையில் பிரதான இடத்தை வகிக்கின்றோம்.
சிறந்த மொழிப் பாவனையுடன்கூடிய, புதுமையான, காலத்திற்கு தேவையான நூல்களை வெளியிடும் பதிப்பகமாக; ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் மனங்களில் எங்கள் நாமத்தைப் பதித்துள்ளோம்.
தமிழ் மொழி மூலம் நூல்கள் வெளியிடும் வெளியீட்டகங்களுக்கு மத்தியில்
#சிறந்தவிற்பனை நாமத்தைப் பெற்ற புத்தகங்களை வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம்.
தமிழ் நூல் வெளியீட்டாளரும், மொத்த விநியோகஸ்தருமான Students Publication இலங்கைத் தீவு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தரமான புத்தகங்களை கிடைக்கச் செய்வதை பிரதான குறிக்கோளாகக்கொண்டு செயற்படுகின்றோம்.
நாங்கள் மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். இதற்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் இளம் குழுவொன்று வாசகர்களின் மனதைக் கவரக்கூடிய அவர்களின் திறனை, அறிவை மேம்படுத்தக்கூடிய புத்தகங்களை சேகரித்து விநியோகிக்க அயராது உழைக்கின்றது.
தமிழ் மொழிமூல வெளியீடுகளில் முதன்மையான கவனம் இருக்கும் அதேபோல, ஆங்கில மொழிமூல புத்தகங்களையும் தேர்வு செய்து வெளியிடுகின்றோம்.
எங்களுடைய பரந்த தனித்துவமான, மாணவர்களை மையப்படுத்திய வெளியீடுகள் மூலம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பங்களித்து வருகின்றோம்.
எங்களுடைய பிரதான எதிர்பார்ப்புகள்
மாணவர்களின் பல்வகைப்பட்ட கற்றல் தேவைகளுக்கும் தரங்களுக்கும் ஏற்ற புத்தகங்களை வெளியிடுதல்.
வாசிப்பதற்கும் கற்பதற்குமான ஆசையை மாணவர்களுக்கு மத்தியில் வளர்த்தல்.
இளம் மனங்கள் தங்களின் முழு அடையாளத்தையும் வெளிபபடுத்துவதற்கு ஊக்குவித்தல். (எங்களுடன் இணைந்திடுங்கள் தமிழ் இலக்கிய உலகை சுவைத்திடுங்கள், சுவைக்கச் செய்திடுங்கள்)