Gen Zee Tamil News Today

Gen Zee Tamil News Today Tamilnews For World's Concern

JOB Vacancies in Dubai, Maldives, Malaysia and New Zealand - Hotline  0772288828
30/03/2026

JOB Vacancies in Dubai, Maldives, Malaysia and New Zealand - Hotline 0772288828

Job vacancies in Maldives: Contact 077-2288828    #
26/03/2026

Job vacancies in Maldives: Contact 077-2288828

#

Vacancies in Maldives ..  contact 077-2288828
25/03/2026

Vacancies in Maldives .. contact 077-2288828

முதல் எரிபொருள் விலை அதிகரிப்புஎரிபொருள் விலை இன்றிரவு முதல் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டோ டீசல் விலை ரூ.79 அ...
21/03/2026

முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை இன்றிரவு முதல் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382 ஆகவும், சூப்பர் டீசல் விலை ரூ.90 அதிகரித்து ரூ.443 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 விலை ரூ.81 அதிகரித்து ரூ.398 ஆகவும், ஒக்டேன் 95 விலை ரூ.90 அதிகரித்து ரூ.455 ஆகவும், மண்ணெண்ணெய் விலை ரூ.60 அதிகரித்து ரூ.255 ஆகவும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் (Rotary Club of Batticaloa Heritage) பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி ...
07/03/2026

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் (Rotary Club of Batticaloa Heritage) பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.!!!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தில் நடைபெற்றது.

பின்தங்கிய மற்றும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இன்றைய தினம் தெரிவுசெய்யப்பட்ட 57 மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி டி.சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச் சார்பாக க.நவநீதன், ச.ஹரிபிரசாத், தே.நவநீதன் மற்றும் அ.கிறிஸ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து தருமாறு மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் ம...
07/03/2026

பல்கலைக்கழக வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து தருமாறு மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது மூடப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான புரன்வளவிளிருந்து திருமலை பிரதான வீதிக்குச் செல்லும் பல்கலைக்கழக வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து தருமாறு மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது "யுத்த காலத்தில் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான புரன்வளவிலிருந்து திருமலை பிரதான வீதிக்குச் செல்லும் பல்கலைக்கழக வீதியானது (தூரம் 307.41m) மக்கள் பாவனைக்காக இதுவரை திறந்துவிடவில்லை.

இந்த வீதியைத் திறந்து விடுமாறு கோரி பல்கலைக்கழக நிருவாகத்தினரிடம் பொது மக்கள் சார்பாக கிராம அபிவிருத்தி சங்கம் சமய அமைப்புக்கள் போன்ற சமூக அமைப்புக்கள் மூலம் 1994.05.14, 1996.06.30, 1998.03.15, 2001.01.05 2005.04.23, 2006.08.17, 2008.06.21, 2008.08.28, 2010.10.15, 2012.05.16, 2015.09.27. 2016.07.05, 2018.02.24, 2020.0826, 2021.02.13 2023.04.23 மற்றும் 2025.11.17 ஆகிய திகதிய கடிதங்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் எமக்கு நீதி கிடைக்கவில்லை பிரதேச சபையும் திறந்து தருவதற்கான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை இதுவரைக்கும் எவ்வித கடிதங்களும் இவர்களால் எமக்கு வழங்கப்படவில்லை.

மேலும் இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக நிருவாகத்தினரிடம் வினவிய போது பெண்கள் விடுதி அருகில் காணப்படுவதாகவும், வளாகத்திற்கு பாதுகாப்பு இல்லை எனவும் போலியான காரணங்களை சொல்கிறார்கள். பெண்கள் விடுதி பிரதான வீதிக்கு அடுத்த பக்க வளாகத்தில் புகையிரத பாதைக்கு அருகில் உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வீதியைத் திறப்பதால் பாதுகாப்பில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாகும். அத்தோடு பல்கலைக்கழக மதிலோடு இணைந்து குடியிருப்புக்களும் அமைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு இல்லை என குடியிருப்புக்களை அகற்ற முடியுமா? மேலும் இவ்வீதியை ஒருபோதும் திறக்காது மூடிவிடும் நோக்கில் வீதிக்கு குறுக்காக ஒன்றுகூடல் மண்டபம் அமைக்க பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. எனவே ஒருசில அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சுய இலாபத்துக்காக திறக்காதிருக்கும் இவ்வீதியை தாங்கள் நேரடியாக தலையிட்டு திறந்து தருமாறு கிராம பொதுமக்கள் தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*15-வது இந்துக்களின் பெருஞ்சமர்" – இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான வரலாற்றுச் ச...
26/02/2026

*15-வது இந்துக்களின் பெருஞ்சமர்" – இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான வரலாற்றுச் சமர் மீண்டும் ஆரம்பம்!*

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள, இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15-வது இந்துக்களின் பெருஞ்சமர்" (Battle of the Hindus) மாபெரும் கிரிக்கெட் போட்டி மீண்டும் களைகட்டவுள்ளது.

இம்முறை போட்டியை நடத்தும் இந்துக் கல்லூரி கொழும்பு, தனது 75-வது ஆண்டு நிறைவை (பவள விழா) கொண்டாடும் வேளையில் இப்போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இப்போட்டியானது வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பி. சரா ஓவல் (P. Sara Oval) சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த இந்துக் கல்லூரி கொழும்பின் அதிபர் திரு. இளையதம்பி இளங்கேஸ்வரன், கல்லூரியின் 75-வது ஆண்டு நிறைவில் இந்த பெருஞ்சமர் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இரு கல்லூரிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கத்தையும் விளையாட்டுத் திறனையும் வளர்க்கவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. ரத்னம் செந்தில்மாறன் தனது வாழ்த்துச் செய்தியில், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, பிராந்தியங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாளமாகும் எனக் குறிப்பிட்டதுடன், இதற்கு ஆதரவளிக்கும் ஜனசக்தி நிறுவனத்திற்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இம்முறை போட்டியில் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் களமிறங்கும் இந்துக் கல்லூரி கொழும்பு அணிக்கு முத்துக்குமார் அபிஷேக் உப தலைவராகவும், சுரேஷ் குமார் மிதுஷேகன் விக்கெட் காப்பாளராகவும் செயற்படுகின்றனர்.

இவர்களுடன் திவாகரன் யாதவ், விஸ்வநாதன் யுவராஜ், செந்தில்குமார் ஹர்ஷ மிதுமின, தவக்குமார் சந்தோஷ், ரஞ்சித் குமார் அகிலேஷ், சுரேஷ் சர்விஷ், கோடீஸ்வரன் யசூர்ஜன், கோபாலகிருஷ்ணன் தூயவன், சத்திய சீலன் சபேஷன், சௌந்தரராஜன் ஆகாஷ், ரவிராஜா தக்ஷேஸ், சசிகுமார் சதுர்ஷன் மற்றும் வெள்ளத்துரை அபினேஷ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வணிக்கு எஸ். கோபிநாத் பயிற்சியாளராகவும், கே. ரஜீவ்காந்த் பொறுப்பாசிரியராகவும் (Master in Charge) செயற்படுகின்றனர்.

மறுபுறம், எஸ். சுபர்ணன் தலைமையில் களமிறங்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எஸ். ஹரிகரன் உப தலைவராகவும், ஆர். ஆதித்யன் விக்கெட் காப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். அணியின் ஏனைய வீரர்களாக எஸ். செல்வேஜன், கே. நித்தீஸ், டி. பிரேமிகன், ஜே. பவனன், என். நேருஜன், எஸ். அபிவர்ணன், எம். டானிலாஷ், கே. துவாரகன், எஸ். அஸ்வின், பி. அனிஷ், எஸ். சிவகஜீசன், டி. பிரீத்திகன் மற்றும் ஜி. லக்ஸிகன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இவ்வணிக்கு எஸ். அலன்ராஜ் பயிற்சியாளராகவும், டி. தயாபாலன் பொறுப்பாசிரியராகவும் வழிகாட்டுகின்றனர்.

பழமை வாய்ந்த இந்த இரு கல்வி நிறுவனங்களின் கௌரவத்திற்காக நடைபெறும் இப்போட்டியைக் கண்டு களிக்க பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

*இலங்கைத் திரைத்துறையில் புதிய மைல்கல்லாக உருவாகும் "அந்தோனி": மார்ச் 13ம் திகதி 2026 இல் உலகளாவிய திரையரங்க வெளியீடு*இல...
26/02/2026

*இலங்கைத் திரைத்துறையில் புதிய மைல்கல்லாக உருவாகும் "அந்தோனி": மார்ச் 13ம் திகதி 2026 இல் உலகளாவிய திரையரங்க வெளியீடு*

இலங்கைத் தமிழ்த் திரைத்துறையை சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பாரிய முயற்சியாக, முற்றிலும் உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய, தென்னிந்தியக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள "அந்தோனி" (Anthony) திரைப்படத்தின் விசேட ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் எழில்மிகு கடற்கரைப் பின்னணியில் ஒரு மீனவனின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு காதல் மற்றும் த்ரில்லர் பாணியிலான கதைக் களத்தைக் கொண்டுள்ளது.

தனது மனைவியுடன் அமைதியான வாழ்க்கையைத் தேடும் அந்தோனி என்ற மீனவனின் வாழ்வை, வேறொரு மீனவரால் ஏற்படும் சவால்கள் எவ்விதம் மாற்றியமைக்கிறது என்பதை இப்படம் உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கிறது. 'ஓசை பிலிம்ஸ்' (Osai Films) தயாரிப்பு நிறுவனத்தின் கலைவளரி சக ரமணதாஸ் சத்தியநாதன் மற்றும் சுகந்தினி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பது இலங்கைத் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் 'கயல்' வின்சன்ட் கதாநாயகனாக நடிக்க, டி.ஜே. பானு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன் ரவீந்திரன் மற்றும் சௌமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஊடக சந்திப்பில் பேசிய படக்குழுவினர், இலங்கைத் தமிழ் சினிமாவை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் வணிக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தமது நோக்கம் எனத் தெரிவித்தனர்.

குறிப்பாக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் நிலப்பரப்புகளை மிக அழகாகப் பதிவு செய்துள்ளதாகவும், கடினமான சூழல்களிலும் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ் மொழியில் பிரதானமாக உருவாகியுள்ள "அந்தோனி" திரைப்படம், அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மலையாளம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* ச. ஞான பிரசாந்தன்

Aandavar and super star rocks
23/02/2026

Aandavar and super star rocks

என்னத்தச் சொல்ல......
22/02/2026

என்னத்தச் சொல்ல......

19/02/2026

Head office of KAILASHA

Address

Main Street
Colombo
00100

Alerts

Be the first to know and let us send you an email when Gen Zee Tamil News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share