Citizen News

Citizen News female

அம்பாறை அபிவிருத்திக்காக🏠 இலக்கம் 4 ×
30/10/2024

அம்பாறை அபிவிருத்திக்காக
🏠 இலக்கம் 4 ×



30/10/2024

அம்பாறை மாவட்டத்தின் நிலையினை கருத்திற்கொண்டு ஒவ்வொரு அரச அதிகாரிகளும் சிந்தனை செய்து சரியாக வாக்களியுங்கள் !



27/10/2024

♒வாக்குசீட்டு வினியோகம் ஆரம்பம்.

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு விநியோகத்திற்காக தபால் திணைக்களம் அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தினார்.

27/10/2024

♒நாகை மீனவர்க கைது

எல்லை தாண்டி வந்து பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

♒டக்ளஸின் மூன்று (அ) களின் திட்டம்.முன்னாள் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகமுமான டக்ளஸ் தேவானந்...
27/10/2024

♒டக்ளஸின் மூன்று (அ) களின் திட்டம்.

முன்னாள் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை தனது பம்பலப்பிட்டி அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது உங்களது முக்கியமான அடிப்படை திட்டம் என்ன என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

தங்களது கட்சியில் மூன்று (அ) க்கள் இருக்கின்றது .
1வது (அ) மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்.

2வது (அ) அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார வசதிகளை செய்து கொடுத்தல்.

3வது (அ) அரசியல் தீர்வு

இவை மூன்றும் மக்களின் அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இந்த மூன்று (அ) க்களையும் அடிப்படையாக வைத்து எனது தலைமையின்கீழ் எனது கட்சியினர் செயல்படுகின்றனர். இச்சந்திப்பில் தேசியப்பபட்டியல் உறுப்பினர் பாபு சர்மா மற்றும் கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் எஸ். ராஜேந்திரன், வணக்கத்திற்குரிய தேரர் கிரன்பாஸ் விஜிதகேரத் மற்றும் ஏனைய வேட்ப்பாளர்களும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர் .

27/10/2024

♒ரஷ்ய தம்பதியினர் கைது

குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதியொன்று கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹந்தானை பகுதியில் வைத்து நேற்று (26) மாலை குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

39 வயதான ஆண் மற்றும் 32 வயதான ரஷ்ய பெண் ஆகிய இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

26/10/2024

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களுக்காகக அன்றைய பாராளுமன்ற அவையில் விமல் வீரவன்சவை விளாசிய கவீந்ரன் கோடீஸ்வரன் .
#அம்பாறை

🏠 சின்னம் இலக்கம் 4 ×

அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்ற தொணிப் பொருளில் 2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கல்முனை வடக்கு தமிழ் பிர...
14/03/2024

அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்ற தொணிப் பொருளில் 2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் டி ஜே அதிசயராஜ் தலைமையில் (14) இன்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது .

குறித்த நிகழ்வின்போது கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பெண் கலைஞர்களினால் கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் செல்வி ஆர். ராகுலநாயகி, பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக வைத்தியர் புஷ்பலதா லோகநாதன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேகா தர்ஷானி எதிரிசிங்க அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைப்பாளர் கலைவாணி தயாபரன் மற்றும் கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Citizen News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citizen News:

Share