News one SL நியூஸ்1

News one SL நியூஸ்1 ALWAYS OPEN

30/07/2025

#சிறுவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்க தடை

இன்று காலை 09:00 மணி புத்தளத்தில் ஓடும் ரயிலில் தலையை வைத்து உயிரை மாய்த்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை ....
...

பெயர்  - வி.மதுஸாபிறப்பிடம்  - மன்னார்வதியுமிடம் - கிளிநொச்சி  சற்று மன ரீதியான பிரச்சினை உள்ள இவர் கடந்த 10ம் திகதியிலி...
29/07/2025

பெயர் - வி.மதுஸா
பிறப்பிடம் - மன்னார்
வதியுமிடம் - கிளிநொச்சி
சற்று மன ரீதியான பிரச்சினை உள்ள இவர் கடந்த 10ம் திகதியிலிருந்து 2025/07/10 காணவில்லை. இவரை இறுதியாக சம்மாந்துறை boc அருகாமையில் கண்டதாக தகவல் கிடைத்துள்ளது. 4வயதில் மகன் உள்ளார். அன்பான மட்டக்களப்பு - அம்பாறை வாழ் மக்களே இவரை பற்றிய தகவல் அறிந்தால் 0774922049 என்ற இலக்கத்துக்கு அறியத் தரவும்.
இதனை வேறு ஏதேனும் குறூப்களில் share செய்து இச்சிறுவனுக்கும் தந்தைக்கும் உதவுமாறு அன்பாக வேண்டுகின்றோம்... pls share

🔴Missing Alert 🚨கண்டி மருத்துவமைனை ஒன்றுக்கு செல்வதாக சென்ற பெண் திரும்பி வரவில்லை!எல்லா வசதிகளுடனும், நிம்மதியாகவும் செ...
13/07/2025

🔴Missing Alert 🚨
கண்டி மருத்துவமைனை ஒன்றுக்கு செல்வதாக சென்ற பெண் திரும்பி வரவில்லை!

எல்லா வசதிகளுடனும், நிம்மதியாகவும் செல்வமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த தெல்தோட்டை பகுதியை சேர்ந்த பாத்திமா சப்னா எனும் திருமணமான 26 வயது பெண்ணை காணவில்லை.

பல்மருத்துவரிடம் சென்று வருவதாக கூறி சென்ற மேற்படி தன் மனைவியை தேடி தேடி தனது ஆண் குழந்தை ஒன்றுடன் பரிதவித்து கொண்டிருக்கும் கணவர் பொலிஸ் நிலையத்திலும் இதுபற்றி முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி பெண் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவித்து உதவுங்கள்.

🚨காணவில்லை▪︎

கண்டி பல் மருத்துவமைனை ஒன்றுக்கு சென்றவர் திரும்பி வரவில்லை!

இவர் எல்லா வசதிகளுடனும், நிம்மதியாகவும் செல்வந்தமாகவும் வாழ்ந்து வந்த தெல்தோட்டை பகுதியை சேர்ந்த #பாத்திமா_சப்னா எனும் திருமணமான 26 வயது நிரம்பிய இளம் தாய் ஆவார்.

மனைவியை தேடித் தேடி தனது ஆண் குழந்தை ஒன்றுடன் பரிதவித்து நிற்கும் கணவர் பொலிஸ் நிலையத்திலும் இதுபற்றி முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி பெண் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக
▪︎076 657 5702
▪︎072 657 5702
என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவித்து உதவுங்கள்.

நன்றி.

12.07.2025

News one SL நியூஸ்1

11/07/2025

🔴தற்போது வவுனியா கூமாங்குளத்தில் பதட்டம் - போக்குவரத்து பொலிசார் துறத்தி சென்ற சமயத்தில் ஒருவர் மரணம் பதட்ட நிலமை தொடர்கின்றது ...
நன்றி
Vanuniya net

🔵 ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவுகிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படை...
11/07/2025

🔵 ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று (11) உத்தரவிட்டார்.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சமர்ப்பித்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, சந்தேக நபரை கைது செய்வதில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஹர்ஷன கெகுனுவெல தெரிவித்தார்.

சட்டப்பூர்வமாக மீன்வள துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மணல் அகழ்வுத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்படைத்து, அரசாங்கத்திற்கு 2.63 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியது குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

📷 அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்✍️ பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற...
10/07/2025

📷 அம்பாறையில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்
✍️ பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 55,285 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் மூலம் சுமார் 02 இலட்சத்து 65 ஆயிரத்து 736 மெற்றிக்தொன் நெல் அறுவடையாக எதிர்பார்க்கப்படுவதுடன் இது தேசிய நெல் உற்பத்தியில் இம்மாவட்டம் 12.7 வீத பங்களிப்பை செய்து வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நெல் உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாவட்டங்களிலும் அம்பாறை மாவட்டமும் முதன்மை வகிக்கின்ற நிலையில், இம்முறை மேற்கொள்ளப்பட்ட நெல் உற்பத்தியில் கணிசமானவை “சிவப்பு நாடு” இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் உலர வைக்காத நெல் ஒரு கிலோ 100 ரூபா முதல் 105 ரூபா வரை தனியார் நெல் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
News one SL நியூஸ்1

பூமியின் சுழற்சி வேகம் சற்று அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ...
10/07/2025

பூமியின் சுழற்சி வேகம் சற்று அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக காணப்படும் எனவும், இதனால் ஜூலை 09, 12 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் நேரம் சிறிது குறைவாகும் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
இது 1.3 முதல் 1.5 மில்லி விநாடி வரை குறையும் என்றும், இவ்வாறு தொடர்ந்து நடைபெறுமானால் 2029ஆம் ஆண்டில் சில விநாடிகள் நேரத்திலிருந்து கழிக்க வேண்டிய நிலை கூட உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவ்விதமான சுழற்சி வேக அதிகரிப்பு 2020ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்களாக பூமியின் உள் பகுதியிலான மாற்றங்கள், கடல் மற்றும் வளிமண்டல இயக்கங்களில் ஏற்பட்ட சிக்கலான மாற்றங்கள், சந்திரனின் ஈர்ப்பு தாக்கம், தற்போதைய உலக வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
News one SL நியூஸ்1

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு ...
10/07/2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44% ஆகும்.

வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (09) அறிவித்தார்.

இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி வீழ்ந்து காணாமல் போன 17 வயது மாணவன் இன்று(09) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
10/07/2025

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி வீழ்ந்து காணாமல் போன 17 வயது மாணவன் இன்று(09) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்கள் சிலருடன் நிழற்படம் எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே அணைக்கட்டிற்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் தமிழ்மாறன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

🔵 சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 ஆண்டுகள் சிறைபூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படு...
09/07/2025

🔵 சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 ஆண்டுகள் சிறை

பூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி அவ்வீட்டிலேயே தங்கியிருந்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி பூசாரியை குற்றவாளியாக இனங்கண்ட ​பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார, அந்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (08) விதித்தார்.

ஹொரணை, ஹிம்புட்டுஹேனவைச் சேர்ந்த கல்லுகே சுரங்க புஷ்பகுமார என்ற 44 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 500,000 இழப்பீடு வழங்கவும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு லேசான வேலைகளுடன் 24 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஹொரணை, ஹிம்புட்டுஹேன பகுதிக்கு பூசாரி போல 2021 ஆம் ஆண்டு சென்றிருந்த குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். அந்த காலப்பகுதியில் சிறுமியையும் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தி, கர்ப்பிணியாகியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட போலி பூசாரிக்கு எதிராக ​ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அடிப்படை விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், சட்டமா அதிபரினால், களுத்துறை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

News one SL நியூஸ்1

♦பிராந்திய செய்தி ஆசிரியர்கள் தேவை! எமது செய்திச்  சேவையுடன் இணைய விருப்பமுள்ளவர்கள் உங்கள் சுயவிபரக்கோவைகளை மின்னஞ்சல் ...
08/07/2025

♦பிராந்திய செய்தி ஆசிரியர்கள் தேவை! எமது செய்திச் சேவையுடன் இணைய விருப்பமுள்ளவர்கள் உங்கள் சுயவிபரக்கோவைகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்....
⃣👉 [email protected]
News one SL நியூஸ்1

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when News one SL நியூஸ்1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News one SL நியூஸ்1:

Share