Viralvibe-Tamil

Viralvibe-Tamil Hot News & Updates from all around the World- உடனுக்குடன் செய்திகள் மற்றும் தகவல்கள் உலகெங்குமிருந்து

  | Qualifier 2 போட்டி ரத்தானால் யாருக்கு வாய்ப்பு?     |
01/06/2025

| Qualifier 2 போட்டி ரத்தானால் யாருக்கு வாய்ப்பு?

|

பெண் அடித்துக் கொலைஅம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்,...
31/05/2025

பெண் அடித்துக் கொலை

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.

இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிநாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்...
21/05/2025

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

நாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு 3,050 மெட்ரிக் தொன் உப்பை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் மாதாந்திர உப்புத் தேவை 15,000 மெட்ரிக் தொன் என்பதுடன், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன் ஆகும்.

மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு ம...
15/05/2025

மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவு

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்ததோடு அதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கினார்.

மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணகுலசூரிய, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர, சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பொலிஸாரை தாக்க முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடுகடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார...
15/05/2025

பொலிஸாரை தாக்க முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது, தெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளை நபரொருவர் வாளால் தாக்க முயன்றபோது, ​​அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

பின்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த நபர் 30 வயதுடையவர் என்றும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இந்திய நபருக்கு 3 வாரம் சிறை தண்டனைஅவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சிங்கப...
15/05/2025

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இந்திய நபருக்கு 3 வாரம் சிறை தண்டனை

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

இதில் பயணம் செய்த 20 வயது இந்திய வாலிபரான ரஜத் என்பவர் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பின்பக்கம் இருந்தபடி, பணிப்பெண்ணை பிடித்த அவர், அப்படியே கழிவறையை நோக்கி அவரை தள்ளி சென்றுள்ளார்.

இதனால், அந்த பணிப்பெண் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் பயந்தும் போயுள்ளார். அந்த வாலிபரின் செயலால் மனவருத்தம் மற்றும் கலக்கம் அடைந்திருக்கிறார். விமானம் சாங்கி விமான நிலையம் சென்றடைந்ததும் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இதுபற்றிய வழக்கு விசாரணையின்போது, துணை அரச சட்டத்தரணி லாவ் கூறும்போது, வர்த்தக விமான பயணம் என்பது அதிக நெருக்கடியான சூழலை கொண்டது. நெருங்கிய அளவில் தொடர்பு இருக்கும்போது, விருப்பமில்லாத உடல் தொடர்பை கண்டறிவது என்பது கடினம் என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் நடந்த விடயங்களை ரஜத் ஒத்துக்கொண்டார். அவருக்கு விசாரணை முடிவில் நீதிமன்றம் 3 வாரம் சிறை தண்டனை அளித்துள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸ் வெசாக் பந்தல் பிரதமரால் திறந்துவைப்புமகா பிரஜாபதி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வெசாக் பந்தலின் ...
13/05/2025

கொழும்பு கிராண்ட்பாஸ் வெசாக் பந்தல் பிரதமரால் திறந்துவைப்பு

மகா பிரஜாபதி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வெசாக் பந்தலின் திறப்பு விழா, நேற்று (12), வெசாக் பௌர்ணமி போயா தினத்தன்று, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நடைபெற்றது.

இந்த வெசாக் பந்தல் ஸ்ரீ வைஷாக்ய சம்புத்தாலோக சங்கத்தால் 54ஆவது முறையாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாபெரும் வசூல் வெற்றி பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்- அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் வசூலை கடக்கும் என எதிர்பார்ப்பு...
13/05/2025

மாபெரும் வசூல் வெற்றி பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்
- அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் வசூலை கடக்கும் என எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருக்கிறது.

மே 1ஆம் திகதி சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவராஜ் கணேசன் தயாரித்து, அவரே தமிழகத்தில் வெளியிட்டார். இந்த சின்னப் படத்துக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார் என்று பலரும் பேசினார்கள்.

தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் நாளில் ரூ.2 கோடி வசூல் செய்த இப்படம், 11ஆவது நாளில் ரூ.6 கோடிக்கும் (இந்திய மதிப்பில்) அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.35 கோடிக்கும் (இந்திய மதிப்பில்) அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும், சசிகுமார் நடிப்பில் ‘குட்டிப்புலி’ படமே அதிக வசூல் செய்த படமாக இருந்தது. தற்போது அதனை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் முறியடித்திருக்கிறது.

கேரளா மற்றும் கர்நாடகாவிலும் நல்ல வசூல் செய்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் 1 மில்லியன் டொலர் வசூலை கடக்கும் என்று கூறுகிறார்கள்.

இப்படியான வசூலின் மூலம் தயாரிப்பாளருக்கு 2 மடங்கு இலாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

R.I.P
21/04/2025

R.I.P

🔴 இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலன் விபத்து ; 2 பேர் உயிரிழப்பு
27/03/2025

🔴 இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலன் விபத்து ; 2 பேர் உயிரிழப்பு

🔴  அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கான நியாயமான வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்- போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாண...
26/03/2025

🔴 அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கான நியாயமான வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்
- போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்
- தடுத்து நிறுத்திய பொலிஸார்

நடிகர் மனோஜ் காலமானார்..!
25/03/2025

நடிகர் மனோஜ் காலமானார்..!

Address

123/1, Sea Street, Colombo/11
Colombo
00100

Alerts

Be the first to know and let us send you an email when Viralvibe-Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viralvibe-Tamil:

Share