21/11/2025
#மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் #கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!!
தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய #சிறைத்தண்டனை 21.11.2025ஆம் திகதி #மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.
குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்