Thinakaran

Thinakaran இலங்கையின் தேசிய தமிழ் குரல்...
Thinakaran is a daily Tamil news provider in Sri Lanka. It is published by Associated Newspapers of Ceylon Limited.

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஒக்டோபர் 05, 2026பார்வையிட >>> epaper.thinakaran.lk
04/10/2026

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஒக்டோபர் 05, 2026

பார்வையிட >>> epaper.thinakaran.lk

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு திருமலையில் விழிப்புணர்வு ஊர்வலம்உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக...
04/10/2026

உலக அஞ்சல் தினத்தை
முன்னிட்டு திருமலையில்
விழிப்புணர்வு ஊர்வலம்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், திருகோணமலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (03) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட பிரதான தபால் அலுவலகத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம், பிரதான வீதி ஊடாக மத்திய பேருந்து நிலையத்தை அடைந்து, மரத்தடி சந்தி வழியாக மீண்டும் தபால் நிலையத்தை வந்தடைந்தது.

மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சோ. ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை தபால் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் முகம்மது நளீர் கலந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்ட அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதன்போது, Courier, Online வணிக சேவைகள், Cash on Delivery, Express Mail, Tracked Delivery, Utility Payment, காப்புறுதி மற்றும் Philatelic சேவைகள் உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் புதிய சேவைகள் தொடர்பில் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

1056 புதிய குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்! - டிசம்பரில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள்ப...
04/10/2026

1056 புதிய குடும்ப நல மருத்துவ
உத்தியோகத்தர்களுக்கு
நியமனக் கடிதங்கள்!

- டிசம்பரில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள்

புதிய குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் 1,056 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

ஒன்றரை வருட கால முறையான பயிற்சியை நிறைவு செய்துள்ள இந்த உத்தியோகத்தர்கள், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர்.

பொதுச் சுகாதாரத் துறையின் முக்கிய பங்காளிகளான குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களுக்கு சுகாதார சேவைகளை அவர்களுக்கு அருகிலேயே வழங்குவதிலும், தாய் மற்றும் சேய் நலப் பாதுகாப்பிலும் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தடுப்பூசி திட்டங்களையும், சிசு மரண விகிதத்தைக் குறைப்பதிலும் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் வழங்கும் பங்களிப்பு சர்வதேச ரீதியில் முன்னுதாரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மார்ச் மாதம் அரச சேவையில் இணைக்கப்பட்டவர்களுடன் சேர்த்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,071 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை” வேலைத்திட்டத்தின் கீழ், கருத்தரிப்பு முதல் முதுமை வரையிலான காலப்பகுதியில் மக்களுக்கு நெருக்கமான சுகாதார சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான பதவியுயர்வுகள், சம்பளம், பயிற்சி மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்களான சாமிக எச். கமகே, ஹர்ஷனி சிரிநாம உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் தொடருக்காக புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி📷: SLC
04/10/2026

பாகிஸ்தான் தொடருக்காக
புறப்பட்ட இலங்கை
கிரிக்கெட் அணி

📷: SLC

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது...📷:  வாசித படபெந்திகே
04/10/2026

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்டபோது...

📷: வாசித படபெந்திகே

ஆசிய விளையாட்டு போட்டிநிறைவு நிகழ்வில்வீரர்கள் அணிவகுப்பு!📷: TOI
04/10/2026

ஆசிய விளையாட்டு போட்டி
நிறைவு நிகழ்வில்
வீரர்கள் அணிவகுப்பு!

📷: TOI

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் ப...
04/10/2026

ஞானசார தேரருக்கு
நாளை வரை விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இம்மாத லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லைஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாத...
04/10/2026

இம்மாத லிட்ரோ எரிவாயு
விலையில் மாற்றமில்லை

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில்...
- 12.5kg: ரூ. 4,365
- 5kg: ரூ.1,750
- 2.3kg: ரூ.815

நீதிமன்றத்தில் ஆஜரானஞானசார தேரர்பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர...
04/10/2026

நீதிமன்றத்தில் ஆஜரான
ஞானசார தேரர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மருந்தகங்களை மூடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல – சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்அகில இலங்கை தனியார் மருந்தக உரிமைய...
04/10/2026

மருந்தகங்களை மூடுவது
அரசாங்கத்தின் நோக்கமல்ல

– சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11ஆவது வருடாந்த மாநாடு நேற்று (03) வாஸ்கடுவை சிட்ரஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

“Together for a Stronger Pharmaceutical Community”என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் ஆயிரம் தனியார் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் துறைசார் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தனியார் மருந்தக உரிமையாளர்கள் முன்வைக்கும் முன்மொழிவுகள் தொழில்சார் அணுகுமுறையுடன் முன்வைக்கப்படுவதுடன், சுகாதாரத் துறையின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக அவர்களுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மருந்துத் தயாரிப்பு முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் வரையிலான முழு செயல்முறையையும் விஞ்ஞான ரீதியாகவும் தரநிலைகளுக்கு அமைவாகவும் வலுப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இயங்கி வரும் எந்தவொரு மருந்தகத்தையும் மூடுவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனத் தெரிவித்த அவர், மருந்தகங்களின் தரத்தை மேம்படுத்தி, சுகாதார சேவையை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு உயர்தரமானதும் பாதுகாப்பானதுமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் தேவையான தொழில்சார் தகுதிகளை பூர்த்தி செய்துள்ளார்களா என்பதை உறுதி செய்யுமாறும் மருந்தக உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி, உள்ளூராட்சி வருமானத் திணைக்கள ஆணையாளர் பிரதீப் சில்வா, நுகர்வோர் அதிகாரசபை தலைவர் ஹேமந்த சமரகோன், பணிப்பாளர் அசேல பண்டார, களுத்துறை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சி. முரகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. ஏ. அனுருத்த, பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Address

Lake House, 35, D. R. Wijewardena Mawatha
Colombo
01000

Alerts

Be the first to know and let us send you an email when Thinakaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thinakaran:

Shortcuts

Share