Dronenews

Dronenews Welcome to the DRONENEWS page. Tune in for the latest news in Tamil /Sinhala/English from Sri Lanka and around the world.

ஜனாஸா அறிவித்தல் சிரேஷ்ட ஊடக வியலாளருமான திரு நௌஷாத் முகைதீனின் அன்புத் துணைவியார் சற்று நேரத்திற்கு முன் இறை அழைப்பை ஏற...
18/08/2025

ஜனாஸா அறிவித்தல்

சிரேஷ்ட ஊடக வியலாளருமான திரு நௌஷாத் முகைதீனின் அன்புத் துணைவியார் சற்று நேரத்திற்கு முன் இறை அழைப்பை ஏற்றுள்ளார் - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூகீன்.

அன்னாரின் ஜனாஸாவை இன்று(18) பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர்.

No 30
Temple Avenue ,
Colombo 10
(ஆனந்தா கல்லூரி நீச்சல் தடாகத்திக்கு பின்புறம்)

நல்லடக்கம் சம்மந்தமான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

யடிநுவர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலங்களாக மீட்பு.யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது...
29/07/2025

யடிநுவர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலங்களாக மீட்பு.

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் விருந்துபசாரத்தில் கௌரவிக்கப்பட்ட தாய் சங்க தலைவர் !நூருல் ஹுதா உமர்கல்முனை சட்டத்தர...
27/07/2025

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் விருந்துபசாரத்தில் கௌரவிக்கப்பட்ட தாய் சங்க தலைவர் !

நூருல் ஹுதா உமர்

கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி ஒன்றில் இன்று (27) நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் அவர்களின் விருந்துபசார நிகழ்வுக்காக கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரின் அழைப்பை ஏற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி. ராம கமலன், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜே. ட்ரொட்ஸ்கி, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஏ.எம்.எம். றியாழ், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எம்.எஸ். எம். சம்சுதீன், உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர்கள், தற்போதைய செயலாளர் ஏ.ஜீ.பிரேம் நவாத், உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையே நல்லுறவை பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய்ச் சங்கத்தின் தலைவரின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாக இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் உரைகளில் கருத்துரைகள் முன் வைக்கப்பட்டதுடன் சட்டத்தரணிகளின் நலனோம்புகை விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் புதிதாக தலைமை பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் ஆளுமைகள் தொடர்பிலும் பேசினர்.

இங்கு பேசிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தனது பல்கலைக்கழக காலத்தின் தோழியான தற்போதைய கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பரின் ஆளுமைகள், திறமைகள் பற்றி சிலாகித்து பேசியதுடன் இலங்கையின் நீதித்துறையில் சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பில் உரையாற்றினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய தலைவரைக் கெளரவிக்கும் முகமாகவும், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அரிக்கா காரியப்பரைக் கெளரவிக்கும் முகமாகவும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தப்பட்டது.

26/07/2025

குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் கணவர்கள் சொல்வதை கேட்காமல் பிடிவாத மாக எனக்கு வருத்தம் இல்லை என கூறிவிட்டு வைத்தியம் பார்க்காமல் இருப்பார்கள் அவர்களின் மண்டைக்கு அழகாக செல்லும் பாசையில் இந்த வைத்தியர் சொல்கிறார் ஆகையால் இந்த வீடியோ பதிவை கட்டாயம் பார்த்து விட்டு உங்கள் மனைவிக்கோ மகளுக்கோ அம்மாவிற்கு தங்கைக்கோ உடனடியாக பகிருங்கள்

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு!2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கெரம்போர்ட் விளையாட்டு உபக...
29/05/2025

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிப்பு!

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கெரம்போர்ட் விளையாட்டு உபகரண கொடுக்கல் வாங்கல் முறைகேட்டில் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,
முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடல்=======================(பாறூக் ஷிஹான்,சர...
09/03/2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடல்
=======================

(பாறூக் ஷிஹான்,சர்ஜுன் லாபீர்)

அம்பாறை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடும் நிகழ்வு இன்று(09) அக்கரைப்பற்று தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.

அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான இச் சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ரீதியான பிரச்சனை MN சம்பளக் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தொழில் கடமை ரீதியான விடயங்கள் மேலும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தனியான சேவைப் பிரமானக் குறிப்பை உருவாக்குதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் எடுத்து வைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத் தருவதாக இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சட்டத்தரணி அனுராத செனவிரத்தன,செயலாளர் வசந்த லங்கதிலக்க, தேசிய இணைப்பாளர் துமிந்த கண்டம்பி,அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் ,செயலாளர் எம்.ஐ.எம் இஹ்லாஸ்,இணைப்பாளர் எல்.எம் சர்ஜுன் உட்பட மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

05/03/2025
சம்மாந்துறை பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தினை முன்னெடுத்தல்=======================(சர்ஜுன் லாபீர்)"கிளீன...
21/02/2025

சம்மாந்துறை பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தினை முன்னெடுத்தல்
=======================
(சர்ஜுன் லாபீர்)

"கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தினை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை பிரதேசத்தில் செயற்படுத்தும் பொருட்டு அதனை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(20) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அந்த வகையில் எதிர்வரும் 26ம் திகதி சம்மாந்துறை பிரதேசம் பூராக ஆரம்பிவித்து வைக்கப்படவுள்ளது குறிப்பாக கல்லரிச்சல் பிரதேசம்,
மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம்,அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் ஆகிய மூன்று இடங்களிலும் பிரதானமாக கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் நடைபெறவுள்ளன.

இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் டாக்டர் கமல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி முனாஸீர்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ரிசாட் எம் புஹாரி,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ,கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத்,வீரமுனை இரானுவ முகாம் பொறுப்பதிகாரி கேப்டன் டி.டி.பி.விஜேயசேன,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

07/02/2025

Address

Colombo
0200

Alerts

Be the first to know and let us send you an email when Dronenews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share