
09/08/2025
இந்தியாவின் புனே மாவட்டத்தில் உள்ள பரமத்தி விமான நிலையத்துக்கு அருகே பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியபடி தரையிறங்கியிருக்கிறது.
இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
ரெட்பர்ட் விமானப் பயிற்சி நிலையத்துக்குச் (Redbird Flight Training Centre) சொந்தமான அந்தப் பயிற்சி விமானம், ஒரு பயிற்சி முடிந்த பிறகு தரையிறங்கும்போது சம்பவம் நிகழ்ந்தது.
“விமானத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபோது அதன் டயர்களில் ஒன்று சேதமடைந்திருந்ததை விமானி கண்டார்.
காலை எட்டு மணியளவில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி முயற்சி செய்தார்.
தரையிறங்கியவுடன் விமானத்தின் முன்பகுதியில் இருந்த சக்கரம் கழன்று வந்தது.
விமானம் ஓடுபாதையிலிருந்து தடம்புரண்டு விமான நிலையத்தின் இன்னொரு பகுதிக்குள் சென்றது,
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.