06/12/2025
அன்புக்குரியோரே,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் விரும்பியதை அல்லது நம்மிடம் இருப்பதை மட்டும் கொடுப்பதல்ல தர்மம் (ஸதக்கா).
பாதிக்கப்பட்டவர் எவ்வாறான தேவை உடையவராக இருக்கிறாரோ, அதைக் கொடுப்பதுதான் உண்மையான தர்மம். அந்தந்த நேரத்துக்குரிய தேவை எதுவோ, அதைக் கொடுப்பதுதான் அழகிய தர்மம்.
இந்த இக்கட்டான கட்டத்தில், இந்த ஆழமான அடிப்படை உண்மையை நாம் உணர்ந்து நடைமுறைப்படுத்துவோம்.
அதன் மூலம் நமது தர்மத்தினை உண்மையான நோக்கத்தை அடையும் ஒன்றாக, காலத்திற்குப் பொருத்தமானதாக, உண்மையான பயன் தருவதாக அமைத்துக் கொள்வோம்.
தர்மம் தலை காக்கும் என்பார்கள். நல்லெண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) கொடுக்கும் தர்மம் தலைவிதியையே மாற்றும்- இன்ஷா அல்லாஹ். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.