Tamil Virucham

Tamil Virucham News / media

30/06/2023

பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த திருவிழா

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று பிற்பகல்  மட்டக்களப்பு கல்முனை பிரதான பாதையில்  மட்ட...
07/06/2023

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு கல்முனை பிரதான பாதையில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரை அதே திசையினூடாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மோதித்தள்ளியதில் கார் குடை சாய்ந்ததுடன் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பஸ்ஸினது முன்பகுதியும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின்போது காரில் பயணித்தோர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்...
07/06/2023

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது

தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான 03 சொகுசு கார்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சுங்கத்தி...
07/06/2023

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான 03 சொகுசு கார்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 சொகுசு கார்களும் வெவ்வேறு பாகங்களாக கொண்டுவரப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை பரிசோதித்த போதே சுங்க அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

துபாயிலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவே சுங்க திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மற்றும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், வௌிநாட்டு மதுபானங்கள், ஒலிவ் எண்ணெய், வௌிநாட்டு சிகரட்டுகள் என்பனவும் குறித்த கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை - (ச்)செத்தம் வீதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் பெயரிலேயே கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது....

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது.ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் இரும்பு விலை 50 வீதத்தா...
07/06/2023

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் இரும்பு விலை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் ஓஷத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

மட்டக்களப்பில்  டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலை...
05/06/2023

மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) இடம் பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குப் பரவலை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதுடன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டமாக காணப்படுவதனால் அதிகமாக டெங்கு நுளம்பு பரவக்கூடிய பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்தல் மற்றும் டெங்கு பரவக்கூடிய வகையில் பேணியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் பராமரிப்பின்றி காணப்படும் இடங்கள் மற்றும் வீடுகளிற்கு பொலிசாரின் உதவியுடன் சென்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பாடசாலை மாணவர்கள் அவர்களது வீடுகளில் மேற்கொள்வார்களாயின் கட்டுப்படுத்த முடியும் என துறை சார் நிபுணர்கள் கருத்து தெரிவித்ததுடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக ஒரு ஆசிரியரை நியமித்து கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.

இதன் போது டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர், வைத்தியர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், துறைசார் நிபுணர்கள்,முப்படை அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள்,கல்வி பணிப்பாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

தேசிய  சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளும் உலக சுற்றாடல் தினமுமான இன்று (05)   காத்தான்குடி பிரதேச சுற்றாடல் முன்னோடி பாடசா...
05/06/2023

தேசிய சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளும் உலக சுற்றாடல் தினமுமான இன்று (05) காத்தான்குடி பிரதேச சுற்றாடல் முன்னோடி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றும் சுற்றாடல் விழிப்புணர்வு ஊர்வலம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கோட்டக் கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றது.

"காத்தான்குடி வாவிக்கரையோரத்தினை அண்மித்துக் காணப்படும் வீதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்வூர்வலம் காத்தான்குடி வாவிக்கரை வீதியின் தெற்கிலிருந்து, மட்டக்களப்பு நகர் நோக்கி காத்தான்குடி பழைய கல்முனை வீதி ஊடாக சென்று காத்தான்குடி மஸ்ஜித் குபா பள்ளி வாயலை சென்றடைந்தது.

இவ்வூர்வலத்தில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மற்றும் ஆரையம்பதி மாவிலங்கைத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவிகள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் விளைவுகளை தெளிவூட்டுவதுடன் பாதுகாப்பு பெறும் வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.

இம்மாணவிகளில் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டம் என்பதன் கீழ் தரம் ஆறிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு தரத்திலும் தமது சுற்றாடலுக்கான பங்களிப்புக்கான பதக்கங்களைப் பெற்று, சுற்றாடல் தொடர்பாக ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்குக் காத்திருப்பவர்கள் எட்டு மாணவிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பிராந்திய சுற்றாடல் அதிகாரி ரஜனி பாஸ்கரன், மற்றும் ஆசிரியர்கள், பிரதேச நலன் விரும்பிகள் என பலர் பங்கேற்றனர்.

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து அவர்களது பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாகக் கூறப்படும்...
05/06/2023

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து அவர்களது பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரிடமிருந்து 7 கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம்கார்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை கைதுசெய்ததையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கம்பஹா, கஸ்பேவ, ராகம, வெயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹாகொட கேகாலை, அநுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்...

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

குற்றச்செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக சமர்ப்பிக்...
05/06/2023

குற்றச்செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட தவறாக நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய சட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் படி கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் மாத்திரமே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் இது பாரதூரமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

தவறானசெயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினரை பதவிநீக்குவதற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு அவ்வாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது ஆனால் நாங்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை உரிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரெசன்டில் உள்ள வீடொன்றை வசிப்பதற்கு வழங்கியுள்ளதுமகிந்த ர...
04/06/2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரெசன்டில் உள்ள வீடொன்றை வசிப்பதற்கு வழங்கியுள்ளது

மகிந்த ராஜபக்ச முன்னர் வசித்த இல்லத்தையே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளது.

ஸ்டன்மோர் கிரசன்டில் உள்ள வீட்டை கோட்டாபய ராஜபக்சவிற்காக பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அரசாங்க தலைவர்கள் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது- ஏனென்றால் அந்த பங்களா வெளிவிவகார அமைச்சிற்கு என ஒதுக்கப்பட்டிருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே தற்போது அவருக்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரசன்ட் வீட்டை வழங்கியுள்ளது.மலலசேகர மாவத்தை சத்தம் மிகுந்ததாக காணப்படுவதால் அவர் புதிய இடத்தை கோரியிருந்தார்.

எனினும் அவரது பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை 100க்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் அவரது பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ளது...

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பாதுகாப்பு த...
04/06/2023

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை(05) நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சிறுவர் குற்றவாளிகளை உடனடி...
04/06/2023

சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சிறுவர் குற்றவாளிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஜெனீவா குழு இலங்கைக்கு வழங்கிய பரிந்துரைகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் புதிய திருத்தங்களுக்கமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

தற்போது சிறைச்சாலையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நீதி அமைச்சுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 37 பேர், சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதும் தெரியவந்தது...

#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்

Address

Colombo
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Virucham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share