
19/09/2025
ஆசிய கோப்பை: 'சூப்பர் 4' சுற்றுக்கு இலங்கை, வங்கதேசம் தகுதி!
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கரிம் ஜனத் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இப்ராகிம் ஜத்ரன் 24 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரசூலி 9 ரன்னிலும், ஓமர்சாய் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 79 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. 7ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி உடன், ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். ரஷித் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வெலாலகே வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் முகமது நபி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்து அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்கருக்கு தூக்கினார். 4ஆவது சிக்ஸ் அடிக்கும்போது 20 பந்தில் அரைசதம் அடித்தார்.
கடைசி பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
170 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 8 பந்துகள் மீதமிருக்க, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் குசல் மெண்டிஸ். அவர் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கமெண்டிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தோல்வியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் குரூப் A இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவில்குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதற்கிடையே இன்று (செப்டம்பர் 19) ஓமன் அணியுடன் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது.