Malayagam Online

Malayagam Online மலையக செய்திகள், அரசியல் செய்திகள், விளையாட்டு செய்திகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்..!

கொலன்னாவையில் இருந்து ஹட்டன் கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருளை கொண்டு சென்ற பவுச...
30/11/2025

கொலன்னாவையில் இருந்து ஹட்டன் கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு எரிபொருளை கொண்டு சென்ற பவுசர்கள்,எரிபொருளை இறக்கிய பின்னர் பல நாட்கள் ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் பல இடங்களில் பிரதான சாலையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வீதி மூடப்பட்டுள்ளதால்,கொழும்புக்கு திரும்ப முடியவில்லை என்று எரிபொருள் தாங்கி வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

பிரதான வீதிகளில் வளைவுகள் உள்ள இடங்களில் சாலையின்இரு பாதைகளிலும் மண்சரிவுகள் அகற்றப்பட்டால் மட்டுமே தங்கள் பவுசர்கள்கொழும்புக்கு தொடர முடியும் என்று எரிபொருள் தாங்கி வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

கொலன்னாவைக்குச்சென்றால் மட்டுமே எரிபொருளை மீண்டும்கொண்டு வர முடியும் என்றும், இல்லையென்றால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் எரிபொருள் தாங்கி வண்டி ஓட்டுநர்கள்தெரிவித்தனர்.

இதற்கிடையில்,சில பெட்ரோல் நிலையங்கள் இருப்பு காரணமாக எரிபொருளை விநியோகிப்பதில்லை, அதே நேரத்தில் எரிபொருள்வழங்கும் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன.

#மலையகம்

ரிவர்ஸ்டன் வீதியில் மண்சரிவு  ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சேதமடைந்த இடங்களை பார்வ...
30/11/2025

ரிவர்ஸ்டன் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சேதமடைந்த இடங்களை பார்வையிட வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

#மலையகம்

கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ் இறக்கம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் சாமிமலை பெயர் லோன் த...
30/11/2025

கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ் இறக்கம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் சாமிமலை பெயர் லோன் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (30) அன்றுகாலை வரை அவர்கள் பாடசாலை கட்டிடத்தில் இருந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை (30) அன்று காலை முதல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான காலநிலை ஏற்பட்டு உள்ளது. இப் பகுதியில் நிலைமை வழமைக்கு திரும்பி உள்ளது.

#மலையகம்

மாத்தளை, கம்மடுவ, நாகல தோட்டத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோருகின்றனர். உயிரிழந்தவர்களை மீட்க முடிய சூழ்நி...
30/11/2025

மாத்தளை, கம்மடுவ, நாகல தோட்டத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோருகின்றனர். உயிரிழந்தவர்களை மீட்க முடிய சூழ்நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

#மலையகம்

கண்டி, கம்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 19 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பிரதேச செயலாளர்...
30/11/2025

கண்டி, கம்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 19 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பிரதேச செயலாளர் தெரிவித்தார். அத்துடன், 44 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், ஏனைய அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், யாரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

#மலையகம்

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் நேற்று இரவு 10.15 மணியளவில்  ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர்...
30/11/2025

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் நேற்று இரவு 10.15 மணியளவில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர். இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோ மற்றும் ஆர்ஜென்டீனா நாட்டுப் பெண்கள் மூவர் உட்பட சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

#மலையகம்

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கு...
29/11/2025

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அந்த பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

#மலையகம்

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவ...
29/11/2025

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது.

#மலையகம்

29/11/2025

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

28/11/2025

வெள்ளம் மற்றும் கடுமையான வானிலையின் போது, ​​தயவுசெய்து உங்கள் செல்லப்பிராணிகளைப் பராமரிக்கவும், அவற்றை விட்டுவிடாதீர்கள் அல்லது தனியாகப் போராட விடாதீர்கள்.

அவற்றின் பாதுகாப்பு உங்களைச் சார்ந்தது. 🐶🐱❤️

#மலையகம்

மொனராகலை வெல்லவாய எத்திலிவெவ - மஹஆரகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் த...
28/11/2025

மொனராகலை வெல்லவாய எத்திலிவெவ - மஹஆரகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய், மகள் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த தாய், மகள் மற்றும் மகன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற வானிலை காரணமாக மரத்தின் கிளை முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#மலையகம்

நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த...
28/11/2025

நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் மூன்று மாத குழந்தை மற்றும் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

#மலையகம்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Malayagam Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malayagam Online:

Share