Kandy Metro News

Kandy Metro News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kandy Metro News, Media/News Company, Colombo.

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் தற்போது மின்சார ச...
18/09/2025

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் தற்போது மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு மருங்கில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நோயாளிகளை ஏற்றிச்சென்ற  ஆம்புலன்ஸ் விபத்து. உள்ளே இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடிப்பு.தெனியாய பிரதேசத்தில் இருந்து மா...
18/09/2025

இரு நோயாளிகளை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் விபத்து. உள்ளே இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடிப்பு.

தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, 2 நோயாளிகளை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் , ​​விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் விபத்தின் போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

17/09/2025

ஒரு பொண்ணு ஸ்கூட்டர் ஓட்டுறதப் பாத்தா யானைகள் கூட பயப்படும்.

விழலுக்கு இறைத்த நீரான கதை கத்தார் நாடானாது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து மிகவும் உத்தரவாதம் மிக்க நான்கு ...
17/09/2025

விழலுக்கு இறைத்த நீரான கதை

கத்தார் நாடானாது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து மிகவும் உத்தரவாதம் மிக்க நான்கு வான் பாதுகாப்பு ராடார்களை கொள்வனவு செய்திருந்தது.

அவையாவன:
🔘அமெரிக்க பேட்ரியாட் PAC-3
🔘நோர்வே NASAMS-2
🔘பிரிட்டிஷ் ரேபியர்
🔘பிரெஞ்சு-ஜெர்மன் ரோலண்ட்

இந்த வான் பாதுகாப்பு அமைப்புக்கள் அனைத்தையும் கொள்முதல் செய்ய, பராமரிக்க, மற்றும் அவைகளை இயக்கும் இயக்குநர்களுக்குப் பயிற்சியளிக்க மட்டும் சுமார் 19 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவளித்துள்ளது. ஆனால் கடைசியில்
அவைகளுக்காக இறைத்த இந்தக்
காசுகள் அனைத்துமே, இஸ்ரவேல் அழுத்திய ஒரு பாட்டினின் மூலம் இசகு பிசகாகி வீணாகிப் போயுள்ளன.

மேற்கு நாடுகள், அரபு நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யும் ஆயுதங்கள் அனைத்தும்
கிஞ்சித்தும் பயனற்றவை என்பதை இதன் நாம் அறிந்துகொள்ள முடியும். அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் சாவியை இவர்களுக்கு அவர்கள் வழங்கவும் மாட்டார்கள்.

இதனால்தான் பாகிஸ்தான் நாடானது இந்தியாவுடனான தனது போர்களில் அமெரிக்க ஏவுகணைகளுக்குப் பதிலாக சீன ஏவுகணைகளை நம்பி வாங்குகிறது.

😎😎😎

✍ தமிழாக்கம் / imran farook

இன்றைய போட்டி நடைபெறுமா இல்லையா??பாக்கிஸ்தானின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுமா??தற்போதி ICC இன் அவசர கூட்டம் நடைபெறுகி...
17/09/2025

இன்றைய போட்டி நடைபெறுமா இல்லையா??

பாக்கிஸ்தானின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுமா??

தற்போதி ICC இன் அவசர கூட்டம் நடைபெறுகின்றது..

17/09/2025

Pakistan 🇵🇰 vs UAE 🇦🇪

🏟️ Dubai | 🕗 8.00pm (Tonight)

17/09/2025

நாட்டுல Threewheel க்கு அடுத்து எங்க பாத்தாலும் BYD தான் ஓடுது 🇱🇰🔥😂

 #காசாவைச் சேர்ந்த ஒரு சகோதர ஊடவியலாளர் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.காசாவில் நாங்கள்  மரணத்திற்கு அஞ்சுவதில்லை. எங்கள் உ...
17/09/2025

#காசாவைச் சேர்ந்த ஒரு சகோதர ஊடவியலாளர் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

காசாவில் நாங்கள் மரணத்திற்கு அஞ்சுவதில்லை. எங்கள் உடலுக்கு முன்பாக, எங்கள் மனதை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறோம். என் வார்த்தைகள் உங்களைச் சென்றடைந்தால், உங்கள் இதயத்திலிருந்து எங்குளுக்காக பிரார்த்தியுங்கள். எங்களுக்கு அது தேவை. நாங்கள் காசாவை விட்டு வெளியேற மாட்டோம்....🤲

17/09/2025

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராத் கொஹ்லியை இலங்கையின் பெத்தும் நிஸ்ஸங்க முந்தியுள்ளார்.

அதிக சத்தத்துடன் வேகமாக பறந்த மோட்டர் சைக்கிள்கள் வவுனியா பொலிசாரால் மடக்கி பிடிப்பு!பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத...
16/09/2025

அதிக சத்தத்துடன் வேகமாக பறந்த மோட்டர் சைக்கிள்கள் வவுனியா பொலிசாரால் மடக்கி பிடிப்பு!

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று நடவடிக்கை எடுத்தனர்.

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டர் சைக்கிள்கள்கள் சிலவற்றை இளைஞர்கள் செலுத்தி வருவதுடன், அப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர், அப் பகுதியில் வசிப்போர், மாணவர்கள் என்போருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் வவுனியா மாநகர சபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டத்தையடுத்து பூங்கா வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டர் சைக்கிள்களை செலுத்திய சாரதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மோட்டர் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
Parameswaran Kartheeban

16/09/2025

ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு இன்று (15.09.2025) சென்ற
இபோச பஸ் சாரதியின் பொறுப்பற்ற செயல்...
தொலைபேசியில் உரையாடியபடியே ஒற்றை கையால் பஸ்ஸை செலுத்தி சென்றுள்ளார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர்வரை அவர் இவ்வாறு பஸ்ஸை செலுத்தி சென்றார் என பயணி ஒருவர் தெரிவித்தார்.

( நாட்டில் வீதி விபத்துகளால் நாளாந்தம் குறைந்தபட்சம் 8 பேராவது பலியாகின்றனர். எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. எனவே, பொதுநலன் கருதியே இக்காணொளி பகிரப்படுகின்றது.)

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானில் வைத்து தாக்கப்பட்டு இருந்தும் கூட ஒரு தடவையேனும் பாகிஸ்தான் கிர...
16/09/2025

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானில் வைத்து தாக்கப்பட்டு இருந்தும் கூட ஒரு தடவையேனும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் தனது எதிர்ப்பினை தெரிவித்ததோ அல்லது பகிஷ்கரித்ததோ கிடையாது.

மாறாக இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் முழுமையாக ஓரங்கட்டப்படுவதை தவிரத்து இருந்தது. இலங்கையின் இந்த செயற்பாட்டினை இன்றும் பாகிஸ்தானிய மக்களும், ஆதரவாளர்களும் இன்றும் நன்றியுடன் நினைவு கூறி வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி ஈட்டி இருந்தும் பாகிஸ்தான் அணியுடன் குறைந்தது கைலாகு கொடுப்பதை தவிர்த்து தங்களது எதிர்ப்பினை காட்டி இருந்தார்கள். இது மிகவும் மோசமான செயற்பாடகவே உலகில் உள்ள எல்லோராலும் விமர்சிக்கப்படுகிறது.

இலங்கை சிறிய நாடுதான் ஆனால் நாங்கள் அன்பிலும், பண்பாட்டிலும் இந்தியாவை விட பலமடங்கு உயர்ந்தவர்கள்!

Irshad Ismail

Address

Colombo
20000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandy Metro News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share