
13/05/2025
சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதில் மூலோபாய பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம், அத்துடன் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் விண்வெளி ஆகிய துறைகள் அடங்கும். சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இவை கைச்சாத்திடப்பட்டன.