Muslim Vanoli

Muslim Vanoli 1st Islamic Tamil Radio Station

06/09/2026

காசாவிலிருந்து உலகை மெய்சிலிர்க்க வைக்கும் குரல்..!

Video: سلمى أحمد من غزة / فلسطين




www.muslimvanoli.com

05/09/2026

பிரிட்டனில், தான் ஓட்டிச்சென்ற காரில் இருந்தவர்கள் தன்மீது நாயை ஏவியபோது, ​​ஒரு முஸ்லிம் வெளிப்படுத்திய எதிர்வினை…!

www.muslimvanoli.com

04/09/2026

புறம் பேசாதீர்கள்…!

04/09/2026
காஸாவில் நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை...!காஸா நகரில் போரினால் மருத்துவமனை அழிக்கப்பட்ட நிலையில் நோயாள...
04/09/2026

காஸாவில் நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை...!

காஸா நகரில் போரினால் மருத்துவமனை அழிக்கப்பட்ட நிலையில் நோயாளிகளிடம் அதிக வாடகைச் சுமையைத் தவிர்க்கும் பொருட்டு மருத்துவர் ஒருவர் மேற்கொண்டு வரும் சேவை குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.

ரிஸ்க் சுஃப்யான் அபோ ஹலிமா என்ற மருத்துவர் கடுமையான கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரு சிறிய கூடாரத்திற்குள் பல் மருத்துவச் சிகிச்சையை வழங்கி வருகிறார்.

காஸாவில் நிலவும் கடுமையான கட்டிடத் தட்டுப்பாடு மற்றும் வாடகை உயர்வைத் தவிர்க்கும் வகையில் இந்த மாற்று ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் ஏழை நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் மருத்துவச் சேவையை வழங்குவதையும் நோக்காகக் கொண்டு அவர் தனது மருத்துவ உபகரணங்களையும் பாதுகாப்பாகப் பராமரித்தும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு கட்டடம் ஒன்றை கண்டுபிடிப்பதுதான் வெளிப்படையான தீர்வாக இருக்கும் ஆனால் காஸாவில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளதுடன்இ எஞ்சியுள்ள சில இடங்களும் வாடகைக்குக் கூட முடியாத அளவுக்கு மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைக்கோள் மையத்தின் (UNOSAT) தரவுகளின்படி காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் ஐந்தில் நான்கு பங்குக்கும் அதிகமான கட்டிடங்கள் இஸ்ரேலின் தாக்குதல்களால் முற்றிலுமாகவோ அல்லது கடுமையாகவோ சேதமடைந்துள்ளன.

இந்தநிலையில், ஐந்தில் ஒரு பங்கு கட்டிடங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.

அத்துடன் கட்டுமானப் பொருட்கள் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடை காரணமாக பழுதுபார்ப்பதும் சாத்தியமற்றதாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.muslimvanoli.com

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்ட போதிலும் தமது நில...
18/08/2026

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்ட போதிலும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற 9 முஸ்லிம் சகோதரிகளும் பாராட்டப்பட வேண்டியர்வர்கள்.

இனவாத பிரச்சாரங்கள், அதிகாரிகளின் அச்சுறுத்தல் நிலவிய போதும் தமது உரிமையை விட்டுக் கொடுக்காமல், கலாசார உடைக்கு விடைகொடுக்காது நின்ற அந்த 9 முஸ்லிம் பெண் சகோதரிகளுக்கும் முஸ்லிம் சமூகம் நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம். முஸ்லிம் சட்டத்தரணிகள் கட்டணம் வசூலிக்காது ஆஜராக வேண்டும்.

அந்த 9 முஸ்லிம் பெண் சகோதரிகளுக்கும் சம்பளம் அல்லது வேறு தாமதங்கள் ஏற்படின் பள்ளிவாசல் நிர்வாகங்கள், ஊரில் உள்ள பணக்காரர்கள், சமூக அமைப்புக்கள் தமது உதவிகளை வழங்குதல் வேண்டும்.

www.muslimvanoli.com

18/08/2026

நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்யலாமா?

“எவர் நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில், அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ, அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.”

ஸஹீஹ் முஸ்லிம் : 4454

நன்றி.!
மௌலவி. அஷ்ஷேஹ்: அப்துல் ஹமீட் (ஷரயி)



www.muslimvanoli.com

05/07/2026

இன்று மாலை ஜெர்மனியில் இருந்து விஷேட  நேரலை…!உங்கள் முஸ்லிம் வானொலியில்www.muslimvanoli.com
04/07/2026

இன்று மாலை ஜெர்மனியில் இருந்து விஷேட நேரலை…!
உங்கள் முஸ்லிம் வானொலியில்

www.muslimvanoli.com

Address

Union Place
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Vanoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Vanoli:

Shortcuts

Share

Category