Alai TV

Alai TV The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

காத்தான்குடி - தேசிய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “உண்மையின் ஒளிக்குரல்” உயர்விருது வழங்கி கௌரவிப்பு!தேசிய ஊடகங்களில் பணிய...
15/04/2026

காத்தான்குடி - தேசிய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “உண்மையின் ஒளிக்குரல்” உயர்விருது வழங்கி கௌரவிப்பு!

தேசிய ஊடகங்களில் பணியாற்றி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள் “உண்மையின் ஒளிக்குரல்” எனும் உயர்விருதால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட ரீதியாகச் செயலாற்றி வரும் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் டி.எல். ஜௌபர் கான், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்த்தீன், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ, ஊடகவியலாளர் எஸ். சஜீத் ஆகியோர் விருதுகளும் சான்றிதழும் வழங்கி கௌரவங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பாடும்மீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, சிரேஷ்ட உறுப்பினர் லயன்ஸ் சடாற்சரராஜா ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

மேலும், 306 D10 லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன்ஸ் க. லொகேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

20 ஆண்டுகால சமூகப் பணியை நிறைவு செய்துள்ள பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் இந்த விழாவில், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

15.04.2026

சற்று முன்னர் நாவற்குடா ஊர்வீதி தேவாலயம் அருகில் மதில் ஒன்றுடன் மோதி காத்தான்குடி இளைஞர்கள் இருவர் ஆபத்தான நிலையில் வைத்...
15/04/2026

சற்று முன்னர் நாவற்குடா ஊர்வீதி தேவாலயம் அருகில் மதில் ஒன்றுடன் மோதி காத்தான்குடி இளைஞர்கள் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

- எம்.பஹத் ஜுனைட்-
15.04.2026

மார்க் ஸக்கர்பேக்கின் AI நகல்: மெட்டா ஊழியர்களுக்காகப் புதிய முயற்சிமெட்டா நிறுவனம் தனது தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக...
15/04/2026

மார்க் ஸக்கர்பேக்கின் AI நகல்: மெட்டா ஊழியர்களுக்காகப் புதிய முயற்சி

மெட்டா நிறுவனம் தனது தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க்கின் அச்சு அசலான மெய்நிகர் (AI) உருவத்தை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்டாவின் 'சூப்பர் இன்டெலிஜன்ஸ் லெப்ஸ்' மூலம் உருவாக்கப்படும் இந்த AI நகல், நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 79,000 ஊழியர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த AI தொழில்நுட்பம் ஸக்கர்பேர்க்கின் குரல், பேசும் விதம் மற்றும் நிறுவனத்தின் உத்திகள் குறித்த அவரது கருத்துகளைக் கொண்டு மிக நுணுக்கமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கும் தலைமைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஊழியர்களுக்காக உருவாக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் சமூக வலைதளப் பிரபலங்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்களது ரசிகர்களுடன் தொடர்புகொள்ளும் ஒரு கருவியாகவும் விரிவாக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மெட்டாவேர்ஸ் (Metaverse) திட்டத்தில் சில சவால்களைச் சந்தித்த மெட்டா, தற்போது மிகவும் யதார்த்தமான AI கதாபாத்திரங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், பணியிடத்தில் வேகத்தை மேம்படுத்தவும் இத்தகைய 'AI CEO'க்கள் உதவும் என்று மெட்டா எதிர்பார்க்கிறது. தொழில்நுட்பத் துறையில் பெரும் போட்டிகளுக்கு மத்தியிலும், சட்ட ரீதியான சவால்களுக்கு இடையிலும் மெட்டா நிறுவனம் இந்த அதிரடித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் காத்தான்குடி ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு..!ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின...
14/04/2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் காத்தான்குடி ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைறூஸ் அவர்களுக்கும் காத்தான்குடி பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (14) அல் பஜ்ர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஊடகவியலாளர்களின் சமூகப் பொறுப்புக்கள் , ஊடக ஒழுக்கங்கள், செய்தி சேகரிப்பின்போது எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும்,ஊடக ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மதியன்பன் மஜீட், எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ், எம்.எச்.எம்.அன்வர்,எம்.எஸ்.எம்.ஜவ்பர் மற்றும் இளம் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

- எம்.பஹத் ஜுனைட்-
(ஊடகவியலாளர்)

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தமிழ் சிங்கள புத்தண்டு நிகழ்வு..!B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)தமிழ் சிங்கள புது வருடத்தையொட்டி ...
14/04/2026

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தமிழ் சிங்கள புத்தண்டு நிகழ்வு..!

B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)

தமிழ் சிங்கள புது வருடத்தையொட்டி சம்பிரதாயபூர்வமாக பால் பொங்கி உனவு பரிமாறும் நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (14) இடம் பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி AMRN. அழகக்கோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிகளவான பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

பாரம்பரியத்தை பறைசாற்றும் உணவு வகைகள் பரிமாறப்பட்டதுடன் நிலையப்பொறுப்பதிகாரியினால் புத்தாண்டு வாழ்த்துரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றபிரிவு மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி மாதுசாந்த(IP), பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி M.ரஹீம்(SI), சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேக்கர(SI) மற்றும் பொலிஸ் உபதேசக்குழு செயலாளர் B.M.பயாஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி மண்முனை பகுதியில். 20 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட புதைகுழிவிடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி போலீசா...
13/04/2026

ஆரையம்பதி மண்முனை பகுதியில். 20 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட புதைகுழி

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடி போலீசார் பாரிய வேட்டை
20 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் வீடொன்றின் வளவினுள் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று பாரிய அளவிலான தோண்டும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் குறித்த வளவு பாரிய அளவில் 20 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெய சுந்தரவின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி போலீஸ்மா அதிபர் பிரதீப் களுப்பானவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்னவின் ஆலோசனையில் வாழைச்சேனை பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜரூள் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் ஆயுத தேடுதல் இடம்பெற்றது.

பொலிசார், கே.ரவிச்சந்திரன் தலைமையிலான சொகோ தடயவியல் பொலிஸ் பிரிவினர், குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உட்பட பலரும் இச் சோதனை நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தனர். ஜேசிபி இயந்திரங்கள் ஊடாக பாரியளவிலான குழி தோண்டப்பட்ட போதிலும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாரிய அளவிலான 20 அடி ஆழமுள்ள குழி மூடப்பட்டது .

காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவத்தின் போது பெருமளவிலான படையினரும்,பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதுl

12/04/2026

காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான
ஜௌபர்கான்,நூர்த்தீன்,சஜீ,சஜீத் ஆகியோர் மட்டு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அதி உயர்ந்த கௌரவம்..!

🔸காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!காங்கேயனோடை முகைடீன் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்ட...
12/04/2026

🔸காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..!

காங்கேயனோடை முகைடீன் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிட அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் இன்று (12) நடைபெற்றது.

இதன்போது, மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள றுஸ்வின் அவர்களின் நியமனம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும், பள்ளிவாசலின் மேல்தள கட்டிடப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷனின் அனுசரணையுடன் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றுஸ்வின், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நப்ரீஸ், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

-- ஊடகப்பிரிவு

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.
11/04/2026

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கல்லடி கடற்கரை சுத்தப்படுத்தும் Clean Srilanka வேலைத்திட்டம்..!B.M. பயாஸ்(ஊட...
11/04/2026

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கல்லடி கடற்கரை சுத்தப்படுத்தும் Clean Srilanka வேலைத்திட்டம்..!

B.M. பயாஸ்(ஊடகவியலாளர்)

காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ்
கல்லடி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (11.04.2026) காலை 7.00 மணியில் இருந்து 10.30 மணி வரை இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AMN. அழகக்கோன்(IP) அவர்களின் வழிகாட்டுதலில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் பெருமளவான பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நந்தன(IP), மாவட்ட பொதுமக்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பஸ்நாயக்க(CI), மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார(CI)
சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேக்கர(SI), பெருங்குற்றபிரிவு பொறுப்பதிகாரி ரஹீம்(SI) மற்றும் பொலிஸ் உபதேசக்குழு செயலாளர் B.M. பயாஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் வினோத்  காந்த் அவர்களின் சேவைகளை பாராட்டி "தேச கீர்த்தி ,த...
10/04/2026

பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் வினோத் காந்த் அவர்களின் சேவைகளை பாராட்டி "தேச கீர்த்தி ,தேசமானிய விருது வழங்கி கௌரவிப்பு)

Sl.NiH.COUNCiLஅமைப்புகளினால் கொழும்பு .
பொது நூலககோட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இவ் கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இவ்விருதானது மட்டக்களப்பு மாவட்ட பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் வினோத் காந்த் அவர்களின் சமூக வேலைத்திட்டங்களை பாராட்டி தேசமானிய, தேச கீர்த்தி விருது வழங்கி கெளரவிப்பட்டார்.
இவர் பத்மநாபா அறிவாற்றல் கழகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கல்வி, விளையாட்டு இன ஐக்கியம் சார்ந்த வேளை திட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பவர் என்பதும் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை ,உட்பட பல்வேறுபட்ட படுகொலை நினைவு தின நிகழ்வுகளை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வருடா வருடம் கொக்கட்டிச்சோலை பகுதியில் முன்நின்று நடத்துகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு காத்தான்குடியில் ஆரம்பம்..!மட்டக்களப்பு...
10/04/2026

மட்டக்களப்பு மாவட்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு காத்தான்குடியில் ஆரம்பம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (09) மற்றும் இன்று (10) காத்தான்குடி ஹோட்டல் பீச்வேயில் (Hotel Beachway) நடைபெறுகிறது. சமத்துவத்திற்கும் நீதிக்குமான நிலையம் (CEJ) நடாத்தும் இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை, மட்டக்களப்பு மாவட்டத்தில் IWARE நிறுவனம் ஒழுங்கு செய்து நடத்துகின்றது.

தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான இக்கருத்தரங்கில் சட்டத்தரணி ராதிகா குணரத்தின அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்குகிறார். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு, போலீஸ் உத்தியோகத்தர்கள் உரிய முறையில் சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கோடு அளிக்கப்படும் இப்பயிற்சியில் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த 30 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். டிஜிட்டல் தளங்களில் இடம்பெறும் வன்முறைகளைக் கையாளுவதில் போலீஸ் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Alai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share