Asian News

Asian News Welcome to the official page of Asian News.

Watch Asian News anytime and anywhere on https://asiannews.lk/

Our Instagram Page: https://www.instagram.com/asiannews.lk/

Join Through Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KAACFnt4C0j4O4zz8JUe6s

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சந்தேகம்;            பஷில் ராஜபக்சவை நெருங்கும் ஆபத்து!முன்னாள் அமைச்...
22/11/2025

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சந்தேகம்;
பஷில் ராஜபக்சவை நெருங்கும் ஆபத்து!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்தன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, அவரது மனைவியின் சகோதரி அயூமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸா கலப்பத்தி மற்றும் முதிதா ஜெயக்கொடி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பசில் ராஜபக்ஷ மற்றும் அயூமா கலப்பத்தி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, மேலும் அவர்களின் பிணைத்தாரர்கள் மட்டுமே அவர்கள் சார்பாக ஆஜராகியுள்ளனர்.

பசில் ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, தனது கட்சிக்காரரின் மருத்துவ நிலையை உறுதிப்படுத்தும் பல மருத்துவ அறிக்கைகள் அடங்கிய ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கையர் தினம் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்....!!எஸ் ஜே புஹாது இவ்வாண...
22/11/2025

இலங்கையர் தினம் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்....!!

எஸ் ஜே புஹாது

இவ்வாண்டு டிசம்பரில் நடைபெற இருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினம் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் இங்கு வினவப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளாலும் இந்த நிகழ்ச்சித் திட்டம் பெரிதும் பாராட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவிற்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் பேசப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்...!எஸ் ஜே புஹாது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சே...
22/11/2025

பாராளுமன்றத்தில் பேசப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்...!

எஸ் ஜே புஹாது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் எதிர்கால மேம்பாடு தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் 2026 ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதன் போது தொடந்தும் உரையாற்றகையில் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தொடர்பாக எதிர்காலத்தில் மேம்படுத்த வேண்டிய திட்டங்களை முன் வைத்துள்ளார்கள்.

முஸ்லிம் மக்கள் அதிகமாக கேட்கின்ற ஒரு நிகழ்ச்சியான முஸ்லிம் சேவை நிகழ்ச்சி ஆகும்.

ஆனால் இன்று இந்த முஸ்லிம் சேவை நிகழ்ச்சியானது முற்றுமுழுதாக விளம்பர சேவை நிகழ்ச்சியாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த விளம்பரத்தின் மூலம் நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டித் தருவதாக இருப்பதால், முஸ்லிம் சேவை நிகழ்ச்சிக்கான நேரத்தை அதிகரிக்கச் செய்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவரை நேரடியாக சந்தித்து நல்ல பல ஆலோசனைகளை எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்கள்.

அந்த ஆலோசனைகளை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு இந்த விடயத்தையும் ஹேண்ட் சாட்டில் உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப் எம்.பி., எம் எஸ்.உதுமா லெப்பை எம்.பி, ஆகியோரும் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றினர்.

இதில் இம்ரான் மஹ்ரூப் எம்.பி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. ஆகியோர் அண்மையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி உதித கயாஷான் குணசேகரவிடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கையளித்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான முயற்சிகளை எடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம் பி எம் பைரூஸ், ஸ்தாபக போஷகர் முன்னாள் தலைவர் என்.எம். அமீன், செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.எம். சுஹைல், தேசிய அமைப்பாளர் ரிப்தி அலி , அங்கத்தவரும் பாராளுமன்ற ஊடகப்பிரிவு அதிகாரியுமான நுஸ்கி முக்தார் ஆகியோருக்கு நன்றிகள்.

பதில் பிரதம நீதியரசராக அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) ...
22/11/2025

பதில் பிரதம நீதியரசராக அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் கைதுமட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு...
21/11/2025

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் கைது

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான, 350கிரான் தங்க நகை, காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற வழக்கு சான்று பொருள் பொறுப்பாளர் நேற்றைய தினம் ( 20 ) களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் இன்றைய தினம் ( 21 ) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிஜ்ரி 1447  ஜுமாதல் ஆகிரா  மாதத்திற்கான தலைப்பிறை இன்று  தென்படவில்லை..!ஹிஜ்ரி 1447  ஜுமாதல் ஆகிரா  மாதத்திற்கான தலைப்ப...
21/11/2025

ஹிஜ்ரி 1447 ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படவில்லை..!

ஹிஜ்ரி 1447 ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பிறைக் குழு தலைவர் மெளலவி MBM ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்
ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் நாளை ( 22) மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜுமாதல் ஆகிரா மாதம் ஆரம்பமாகின்றது என
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பிறைக் குழுத் தலைவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிறைக்குழு செயலாளர் மெளலவி அஷ்ஷெய்க் மபாஹிம் உள்ளிட்ட உலமா சபை உறுப்பினர்கள்,

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமட் வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் இலங்கை வளிமண்டல திணைக்கள அதிகாரி மொகமட் ஸாலிகீன் , மற்றும் ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள் , தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

21/11/2025

The Ministry of Education has announced the cut-off marks for admission to schools for Grade 6 in 2026 based on the results of the 2025 Grade 5 Scholarship Examination.

According to the Education Ministry, the cut-off marks for admission to schools for Grade 6 in 2026 can be accessed via the ministry’s official website: www.moe.gov.lk.

The allocated school can be checked through the portal: https://g6application.moe.gov.lk.

Download

Web site created using create-react-app

கப்பல் கட்டுவது துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்கல்லை - நாமல்“ துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் கட்டுவதி...
21/11/2025

கப்பல் கட்டுவது துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்கல்லை - நாமல்

“ துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் கட்டுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், கடல் கொந்தளிக்கும். இன்னோரன்ன சவால்களும் வரும்.

கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா ஆரம்பம் !நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாப...
21/11/2025

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா ஆரம்பம் !

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204 வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மனாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் இன்று (21) வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெற்று ஏழு அடுக்கு மினராவில் கொடியேற்றி வைக்கப்பட்டது.

இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி ராத்திப் மஜ்லீஸ், ஜியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விசேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றதோடு. இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடி இறக்கும் நிகழ்வும் இடம்பெறும்.

மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் கந்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கொடியேற்றும் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ.எம். பிர்னாஸ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் , கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் உறுப்பினர் ஏ.எம் ரியாஸ் (பெஸ்டர்), கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ் அமீர் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம் மஜீட், நிர்வாக உத்தியோகத்தர் ஏ,சி.எம் பழீல் கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப்பின் செயலாளர் எம்.எச்.எம் முபாரிஸ், பொருளாளர் எம்.ரிப்னாஸ் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், மற்றும் கல்முனை தரவை பிள்ளையார் கோவில் ஆலய நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான வெட்டுப் புள்ளி வெளியீடு!2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் ச...
21/11/2025

2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான வெட்டுப் புள்ளி வெளியீடு!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, தரம் 6 இல் பிரபலமான பாடசாலை களுக்கு அனுமதி வழங்குவதற்கான வெட்டுப் புள்ளியை கல்வி அமைச்சு வெளியீடு செய்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்புதமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக...
21/11/2025

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு

தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 21.11.2025ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த சிறுமியை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிச்சென்று தனது வீட்டிற்க்கு அழைத்து சென்று கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.

குறித்த சிறுமி, பின்னர் பாடசாலையில் பாலியல் விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்கள் எனவும், அவ்வாறு நடந்தால் சொல்லவேண்டும் என ஆசிரியர் சொன்னார்கள் என்றும், பின்னர் சிறுமி சோகமாக இருப்பதை பார்த்து காரணம் ஆசிரியர் கேட்டதாகவும், சிறுமி நடந்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததாகவும். அதனைதொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீதிபதி TJ பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அரச சட்டத்தரணி MAM லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்

தடம்புரண்ட மற்றொரு ரயில். ரயில் போக்குவரத்து பாதிப்புமிரிஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 02.05 மணிக்கு சீ...
21/11/2025

தடம்புரண்ட மற்றொரு ரயில். ரயில் போக்குவரத்து பாதிப்பு

மிரிஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 02.05 மணிக்கு சீக்ரகாமி ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதை தொடர்ந்து, கரையோர ரயில் மார்க்கத்தில் காலி-மாத்தறை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Address

Colombo
32340

Alerts

Be the first to know and let us send you an email when Asian News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian News:

Share