மலையகம் FM

மலையகம் FM மலையக மண்ணில் இருந்து நம்மக்களின், ந?

16/10/2025
“வா மச்சா ஆடி பாப்போம் இது நம்ப ஊரு கிரிக்கெட் ஆட்டம் ” KINGDOM YOUTH CLUB மற்றும் GOLD START SPORTS CLUB இணைத்து நடந்து...
16/10/2025

“வா மச்சா ஆடி பாப்போம் இது நம்ப ஊரு கிரிக்கெட் ஆட்டம் ”

KINGDOM YOUTH CLUB மற்றும் GOLD START SPORTS CLUB இணைத்து நடந்தும் பலாங்கொடை பிரதேசதின் தெதனகலை
இளைஞர்களின் சங்கமம் என்று வர்ணிக்கப்படும் DETENAGALA PREMIER LEAGUE DPL சுற்றுபோட்டி எதிர்வரும் 10ம் மாதம் 19 ,20 ம் திகதிகளில் GOLD START SPORTS CLUB யின் உத்தியோகபூர்வமான விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது..

நுவரெலியா ஹோர்டன் சமவெளியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்  நீலக்குறிஞ்சி மலர்கள்..
13/10/2025

நுவரெலியா ஹோர்டன் சமவெளியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்..

13/10/2025

#தலவாக்கைலை விகாரையில் தீபாவளி ஆடை விற்பனை...

11/10/2025

இந்த தீபாவளிக்கு ஹட்டன் ஸ்ரீ விஷ்ணு வில் ஆடைகளை குறைந்த விலையில வாங்கலாம்...

நம்மவர்களுக்கு கௌரவம்       மலேசிய அழகுக்கலை போட்டியில் யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு ...
11/10/2025

நம்மவர்களுக்கு கௌரவம்

மலேசிய அழகுக்கலை போட்டியில்
யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக
இரு பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்தன. கண்டியைச் சேர்ந்த எல். தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

இலங்கையைச் சேர்ந்த ஏழு அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களை நயகரா சலுான் என்ட் அக்டமியின் இயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றுள்ளார். இதில் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகள் : -
இராமன் கேதீஸ்வரன்

09/10/2025

எல்லாமே தலைகீழா போணுச்சி பாடசாலை மாணவனின் வைரல் ஆகும் காணொளி..

பதுளை மாநகர சபையின் ரேஸ்கோஸ் முன்பள்ளி மாணவர்களின்  நவராத்திரி விழா கடந்த வியாழக்கிழமை ஓல்தூத்தியன்ஸ் மண்டபத்தில் நடைபெற...
07/10/2025

பதுளை மாநகர சபையின் ரேஸ்கோஸ் முன்பள்ளி மாணவர்களின் நவராத்திரி விழா கடந்த வியாழக்கிழமை ஓல்தூத்தியன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது இன்நிகழ்வில்
பதுளை மாநகர சபையின் நகர செயலாளர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

செய்தி-சந்ரா

கடந்த வாரம் நாவலப்பிட்டி கடியலென பகுதியில் சுமார் 20 அடி நீளம் உள்ள மலை பாம்பு ஒன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டது. கு...
02/10/2025

கடந்த வாரம் நாவலப்பிட்டி கடியலென பகுதியில் சுமார் 20 அடி நீளம் உள்ள மலை பாம்பு ஒன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டது. குறித்த பாம்பானது முதல் முறையாக இந்த பிரதேசத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் குறித்த பிரதேசத்தில் இல்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தார்கள்.

அதே நேரம் ஒரு சில நாட்களாக மலைப்பாம்பு குட்டிகள் அந்த பிரதேசத்தில் ஆங்காங்கே தென்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் இந்த பாம்பை போன்ற மேலும் சில பாம்புகள் இந்த பிரதேசத்தில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் அடைகின்றனர்.

Address

Hatton
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when மலையகம் FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலையகம் FM:

Share

Category

மலையகம் FM

மலையக மண்ணில் இருந்து நம்மக்களின், நமக்கான குரலாய் தரணியெங்கும் 24 மணிநேரமும் ஒலிக்கின்றது மலையகம் FM.

இப்பொழுது இணையத்தினூடாக நீங்களும் கேட்கலாம்.

https://malayagam.lk/