01/02/2026
பொத்துவிலில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 தொடக்கம் 35 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக களுத்துறையிலிருந்து மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசுவதுடன், அக்காலப்பகுதியில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.