Sl Alert News

Sl Alert News News 1st

06/05/2019
  #சாகிர்_நாயக்_இன்_Peace_Tv_இலங்கையிலும்_நிறுத்தப்பட்டது!! இந்தியாவை சேர்ந்த மார்க்க போதகரான வ் சாகிர் நாயக் இன் Peace ...
01/05/2019



#சாகிர்_நாயக்_இன்_Peace_Tv_இலங்கையிலும்_நிறுத்தப்பட்டது!!

இந்தியாவை சேர்ந்த மார்க்க போதகரான வ் சாகிர் நாயக் இன் Peace Tv எனப்படும் இஸ்லாமிய நிகழ்ச்சி களை கொண்ட தொலைக்காட்சி இலங்கையின் முன்னணி தொலை க்காட்சி சேவையை வழங்கும் dialog tv மற்றும் slt peo tv யில் நிறுத்தப்பட்டது.

இந்த peace tv ஏற்கனவே இந்தியா மற்றும் பங்களா தேஷ் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 #தமிழ்_முஸ்லிம்_மக்களிடையிலான_உறவை_சீர்குழைக்க_சிலர்_முனைகின்றனர்.  #ஹிஸ்புல்லாஹ் பொய்யான, கீழ்தரமான செய்திகளை வெளியீட்...
10/01/2019

#தமிழ்_முஸ்லிம்_மக்களிடையிலான_உறவை_சீர்குழைக்க_சிலர்_முனைகின்றனர். #ஹிஸ்புல்லாஹ்

பொய்யான, கீழ்தரமான செய்திகளை வெளியீட்டு தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தியிலே காணப்படும் நல்லுறவை சீர்குழைக்க சிலர் முனைவதாகவும் அதிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஆளுனரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

அவ்வாறு செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி நானோ, என்னுடைய அதிகாரிகளோ கோரவில்லையெனவும், இச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இவ்வாறான கீழ்தரமான செய்திகள், கீழ்தரமானவர்களின் நடவடிக்கைகளிலிருந்து மக்களை அவதானமாக இருக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 #இனவாதிகளின்_முஸ்லிம்களுக்கெதிரான_வெறியாட்டம்_தொடர்ந்த_வண்ணம். #ஏறாவூரில்_பதட்டநிலை ————————————————————————————————மட்...
10/01/2019

#இனவாதிகளின்_முஸ்லிம்களுக்கெதிரான_வெறியாட்டம்_தொடர்ந்த_வண்ணம்.
#ஏறாவூரில்_பதட்டநிலை
————————————————
————————————————
மட்டக்களப்பு பெற்றோலிய கோப்ரேஷனில் பணி புரியும்
ஏறாவூர் ஐயங்கேணியை சேர்ந்த சஹீத் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும்வேளை இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்,

இவ்வினவாத தாக்குதல் நேற்று இரவு சவுக்கடி முகத்துவார வீதியில் புற்று நோய் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது,
5 பேர் கொண்ட கும்பலே தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்,

அவரின் தலைப் பகுதியை குறி வைத்தே தாக்குதல் நடந்துள்ளது அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார்
அவரது நெஞ்சுப்குதியும் கட்டையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது,

கீழே விழுந்தவர் வாகனத்தை கை விட்டுவிட்டு அவர்களின் தாக்குதலை எதிர்கொண்டு எப்படியோ முயற்சி செய்து
முஸ்லிம்களது பிரதேசத்திற்குள் நுழைந்து உதவி கேட்டுள்ளார்
அதன் பிறகே வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் ,

அவரது இருசக்கர வாகனத்தின் ஒரு பகுதியும் எரியூட்டப்பட்டுள்ளது,,

சகோதர சமூகத்தவரின் அரசியல் தலைமைகள் தங்களது சமூகத்தை மென்மேலும் பாரிய படு குழியை நோக்கியே நகர்த்திச் செல்கிறார்கள்,

ஒரு சில இனவாதிகளால் மொத்த சமூகமும் விளைவுகளை
சந்திக்கும் அபாய நிலையின் வெளிப்பாடுதான் இத்தாக்குதல்,

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அப்பாவி ஒருவரின்
உயிரோடு விளையாடியிருக்கிறார்கள்,

விட்டிருந்தால் பைக்கோடு சேர்த்து அவரையும் கொழுத்தியிருப்பார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
இறைவன் பாதுகாத்துவிட்டான்,

மட்டக்களப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான
கௌரவ அலிசாஹிர் மௌலானா , கலாநிதி ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்ற அரசியல் தலைமைகளுக்கு
தகுந்த பதவிகளும் பொருப்புகளும் கொடுக்கப்பட்டதின் பிறகு இதுபோன்ற இனவாத தாக்குதல் நடைபெறுவதால்
இது அரசியல் பலி வாங்கலே அன்றி வேறில்லை,

பொன்னையன் மயூரனின் தலைமையில் கடந்த 2 ஆம் திகதி கொம்மாதுரையில் வயோதிபருக்கு எதிராக நடந்த மனிதாபிமானமற்ற செயலும்,
கடந்த 6 ஆம் திகதி ஏறாவூர் தும்புத்தொழிற்ச்சாலை வீதியில் மாடு கொண்டுவந்த 3 முஸ்லிம்கள் தாக்கப்பட்டு பணம்,மொபைல் போன் உட்பட களவாடப்பட்ட சம்பவமும்,
நேற்று 8 ஆம் திகதி நடந்த கொலை முயற்ச்சியும்
பாரிய சதித்திட்டத்தினூடாகவே
நடைபெற்றிருக்கிறது,
இவைகளுக்குப் பின்னாள் பாரிய அரசியல் கூலிப்படை ஒன்று செயற்படுகிறது என்பதுதான் உண்மை,

இவ்விரு சம்பவங்களும் முஸ்லிம்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளது
அமைதியாக இருப்பதால் அடங்கிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை
எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை இனவாத பயங்கரவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்,

மயூரனின் தலைமையில் நடந்த ஈனச்செயலையும்
மாடு கொண்டு வந்த முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும்
எமது அரசியல் தலைமைகள் கண்டுகொள்ளாமல் விட்டதன்
விளைவுதான் நேற்றையை கொலை முயற்ச்சி என்பதை யாரும் மறுக்கமுடியாது,

அரசியல் தலைமைகள், புத்தி ஜீவிகள் வாய்மூடி இருக்காமல்
இச்சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து
இனவாதிகள் கைது செய்யப்படும் வரை முழு மூச்சாக
செயற்பட வேண்டும்,

இன முறுகலை ஏற்படுத்த முயற்சி செய்யும் பயங்கரவாதிகளுக்கு
விடுதலை கிடைக்காத வண்ணம்
தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்....

 29/12/2018 #சிங்கள_முஸ்லிம்_சமூகத்திடையே_மோதலை_ஏற்படுத்த_ரணில்_அரசாங்கம்_முயற்சி_செய்கிறார். நாட்டிற்குள் சிங்கள – முஸ்...
29/12/2018


29/12/2018
#சிங்கள_முஸ்லிம்_சமூகத்திடையே_மோதலை_ஏற்படுத்த_ரணில்_அரசாங்கம்_முயற்சி_செய்கிறார்.

நாட்டிற்குள் சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் மோதல்களை தோற்றுவிக்க தற்போதைய அரசாங்கம் முயல்வதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”திகனவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அரசியல் பின்னூட்டல் காணப்படுவது தெளிவாகியுள்ளது. இது அரசாங்கம் எவ்வாறு சிங்கள- முஸ்லிம் சமூகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த திட்டமிடுகிறது என்பதை எடுத்தக் காட்டுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறார். இத்தருணத்தில் நாட்டை ஒரு நெருக்கடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசாங்கம் விரும்புகிறது.

அதனடிப்படையில், மாவனெல்லையில் அண்மையில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் காணப்படுகிறது என்பது தெளிவாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

          2⃣0⃣1⃣8⃣•1⃣2⃣•2⃣9⃣ ீடுகள்_கொண்ட_லயன்_குடியிருப்பில்_தீ_விபத்துஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ்...
29/12/2018



2⃣0⃣1⃣8⃣•1⃣2⃣•2⃣9⃣

ீடுகள்_கொண்ட_லயன்_குடியிருப்பில்_தீ_விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள 4 ஆம் இலக்க குடியிருப்பில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து காரணமாக 24 குடியிருப்புகள் எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (29) காலை 6.15 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த லயன் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதுடன் குடியிருப்பில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்கள், ஹட்டன் பொலிஸார், நோர்வூட் பிரதேச சபை மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, நுவரெலியா மாவட்ட தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 24 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச காரியாலயம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் தீயினால் சேதமடைந்த பொருட்களின் பெறுமதி மதிப்பிடபடவில்லை எனவும் தீயிற்கான காரணம் கண்டறியப் படவில்லை எனவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)

  #மன்னிப்புக்_கோரிய_சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தே...
29/12/2018


#மன்னிப்புக்_கோரிய_சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சபையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியமை சட்டத்துக்கு முரணானது என்றும், பெரும்பான்மைவாதச் சிந்தனையின் வெளிப்பாடு என்றும் கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கு அமைவாக, சபாநாயகரின் அறையில் சந்திப்பு நடைபெற்றது.

“மஹிந்த ராஜபக்ஷவை அவசரப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தமை தவறு. அதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். உங்களுடன் (கூட்டமைப்புடன்) கலந்துரையாடாமல் அறிவித்தமைக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.

நான் இந்தப் பதவியிலிருந்து விலகவேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கின்றேன்” என்று சபாநாயகர் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள், நாடாளுமன்றச் சம்பிரதாயங்களுக்கு அமைவாகச் செயற்படுமாறு சபாநாயகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

  #பாலமுனை_வைத்தியசாலையை_குறைசொல்லி_இனி_யாரும்_அரசியல்_செய்ய_முடியாது; - #ஹக்கீம் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாலமுனை ...
29/12/2018



#பாலமுனை_வைத்தியசாலையை_குறைசொல்லி_இனி_யாரும்_அரசியல்_செய்ய_முடியாது; - #ஹக்கீம்

கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாலமுனை வைத்தியசாலை மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரிய அபிவிருத்திகள் செய்யப்படும். இனி, இந்த வைத்தியசாலையை வைத்து யாரும் அரசியல் செய்யமுடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பாலமுனையில் நிர்மாணிக்கப்படும் சுகாதார சிகிச்சை நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், நடைபெற்ற கூடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

பாலமுனை வைத்தியசாலையை குறைசொல்லி அரசியல் செய்தவர்களை நாங்கள் கண்கூடாக கண்டோம். இந்நிலமையை மாற்றுவதற்கு பைசால் காசிம் மேற்கொண்ட உபாயம் நல்லதொரு வழியை சமைத்திருக்கிறது. மாகாண சபையின் கீழுள்ள இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வைத்தியசாலை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்.

சுமார் இரண்டு மாத அரசியல் இழுபறியின் பின்னர் நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் ஆட்சியமைத்துள்ள நிலையில், எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் மூலம் அடுத்த தேர்தலுக்கிடையில் பாரிய அபிவிருத்திகளை செய்யவேண்டிய எதிர்பார்ப்பில் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர்.

குறுகிய காலத்துக்கு மாத்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகள் மூலம் சேவை செய்வதற்கு எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். கட்சியின் மத்திய குழுவுடன் இணைந்து, ஒவ்வொரு பிரதேசங்களிலும் எங்களுக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி வாய்ப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், தனது சொந்த மாவட்டமான அம்பாறையிலும், அதற்கு வெளியிலுள்ள மாவட்டங்களிலும் அவருடைய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளார். அதேபோல, எச்.எம்.எம். ஹரீஸும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் என்ற புதிய இராஜாங்க அமைச்சை பாரமெடுத்துள்ளார். அவரது அமைச்சர் வஜிர அபேவர்த்தன, எல்லா இடங்களிலும் பாரிய அபிவிருத்திகளை செய்வதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எஸ்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், மாகாசபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், அட்டாளைச்சேனை தவிசாளர் எம். அமானுல்லா, கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

*🌏🇱🇰 🇱🇰🌏*28/12/2018                  *_________________*_நாளைய தினம் (29/12/18)மாவனல்லை நகரில் பெரும்பான்மையினரால்  ஒரு ...
28/12/2018

*🌏🇱🇰 🇱🇰🌏*

28/12/2018


*_________________*
_நாளைய தினம் (29/12/18)மாவனல்லை நகரில் பெரும்பான்மையினரால் ஒரு எதிர்ப்பு பேரனி எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த்துள்ளதால். இயன்றவரை பெண்கள் சிரார்கள் பயணங்களை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாரும்... முக்கியமான ஆவனங்கள் நகை போன்றவைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளவும் சுற்று பிரதேசங்களில் இருந்து மாவனல்லை வருபவர்களுக்கும் இதனை அறிவிக்கவும்...

*✍Admin..*

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sl Alert News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share