Sooriyan Fm News

Sooriyan Fm News You can now obtain the latest news from anywhere in the world through sooriyan News

You can now obtain the latest news from anywhere in the world through sooriyan News, the internet and sms through its unbiased and comprehensive news reports backed with the reliability of journalists, newscasters and a renowned reporter base.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ம...
12/10/2026

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு இன்று (12) ஆரம்பகட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12/10/2026

சாண்டா கிளாரிட்டா காட்டுத் தீ! - வான்வழி மூலம் தீயணைப்பு நடவடிக்கை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அரசியலில் களமிறங்குவது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கம் ...
12/10/2026

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அரசியலில் களமிறங்குவது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

2031 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவின் அரசியல் வருகை இருக்குமா என்ற கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,"நயன்தாரா தற்போது தாயாகியுள்ளார். குழந்தையையும் குடும்பத்தையும் கவனிப்பதிலும், வீட்டை ஒழுங்காகப் பார்த்துக் கொள்வதிலுமே இப்போது தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிறைவுமே தற்போது போதுமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சினிமா மற்றும் அரசியலைத் தாண்டி தனது குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளை வளர்ப்பதற்கும் நயன்தாரா முன்னுரிமை அளித்து வருவதை விக்னேஷ் சிவனின் இந்தப் பதில் தெளிவாக உணர்த்தியுள்ளது

யாழ்ப்பாணம், கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.க...
12/10/2026

யாழ்ப்பாணம், கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கொக்குவில் பிரம்படியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்ப்பாண மாநகர முன்னாள் மேயர் வி. மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

12/10/2026

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சாமர சம்பத் முன்னிலை

சிக்குவாரா முன்னாள் இராஜாங்க அமைச்சர்?

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைய...
12/10/2026

முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஷஷி வீரவன்ச என அழைக்கப்படும் ரணசிங்க முதியன்சேலாகே ஷிர்ஜா உதயந்தியின் தண்டனை தொடர்பான நடவடிக்கைகளை இந்த மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் பிரதிவாதி மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பான நடவடிக்கைகளின் பதிவுகளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதிவாதி தரப்புக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு வழக்கு இன்று (12) மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்ததால், வழக்கை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷஷி வீரவன்ச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், குறித்த தீர்ப்பை 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12/10/2026

மருதானையில் நடந்த தில்லாலங்கடி திருட்டு!

முச்சக்கரவண்டியில் வந்து கையடக்க தொலைபேசியை திருடிச்சென்ற நபர்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இன்று முற்பகல் தமது பணிகளிலிருந்து விலகி அலுவல...
12/10/2026

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இன்று முற்பகல் தமது பணிகளிலிருந்து விலகி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுவதற்குப் போதிய வசதிகள் இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

மழை பெய்யும் நாட்களில் அலுவலகத்திற்குள் மழைநீர் கசிவதால் கணினிக் கட்டமைப்புகள் சேதமடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினிகளைப் பாதுகாப்பதற்காக அவற்றை அகற்றிவிட்டு, மழை நின்ற பின்னர் மீண்டும் பொருத்தும்போது மின்சாரக் கசிவு ஏற்படுவதாகவும், இதனால் தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 140 பாடசாலைகள் இயங்குகின்றன.

அங்கு பணியாற்றும் சுமார் 3,500 ஆசிரியர்களின் சம்பளத் தயாரிப்பு மற்றும் கோப்புகளைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுப்பதற்காக சுமார் 70 அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்.

எனினும், இவ்வளவு பணிகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட அலுவலகத்தில் இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஹட்டன் பகுதிக்கு அருகில் புதிய வலயக் கல்வி அலுவலகமொன்றை அமைப்பதற்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை ஆரம்பகட்டத் திட்டமிடல் பணிகள்கூட நிறைவுசெய்யப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்குத் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், அலுவலகத்தில் சுமார் 35 பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்ற போதிலும், அவர்களுக்காக ஒரேயொரு கழிப்பறை மாத்திரமே உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது அலுவலகப் பணிகளுக்காக வருகை தரும் சந்தர்ப்பங்களில், அலுவலகத்திற்குள் கடும் நெரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, புதிய வலயக் கல்வி பணிமனையை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தியாவது, தற்போதைய அலுவலகத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியிடம் வினவினோம்.

ஹட்டன் நகருக்கு அண்மையில் புதிய வலயக் கல்வி பணிமனையை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 60 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்குப் பொருத்தமான காணியை அடையாளம் கண்டு, அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அறிவிக்குமாறு ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், வலயத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கூட்டமொன்றின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

12/10/2026

🔴 LIVE : 'ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் – காவி உடை மீது கை வைக்காதீர்கள்’ மூன்றாம் நாள் பாதயாத்திரை கேகாலை - வரகாபொல

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கு...
12/10/2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனுவை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Address

35th Floor, East Tower, World Trade Center, Colombo.
Colombo
00100

Alerts

Be the first to know and let us send you an email when Sooriyan Fm News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share