Areb News tamil

Areb News tamil ArebNews- Tamil| News Casting media

last night's shooting in Kotahena were shot dead when they snatched weapons of policemen and attempted to escape, after ...
22/02/2025

last night's shooting in Kotahena were shot dead when they snatched weapons of policemen and attempted to escape, after being taken to Crow Island in Mattakkuliya to show police their hideout. One policeman who was wounded has been hospitalised.

29 Deputy Minsters appointed : Full list!A total of 29 Deputy Ministers of the National Peoples’ Power (NPP) government ...
21/11/2024

29 Deputy Minsters appointed : Full list!

A total of 29 Deputy Ministers of the National Peoples’ Power (NPP) government were sworn in before President Anura Kumara Dissanayake today.

Accordingly, the newly appointed Deputy Ministers are as follows;


Bodu Bala Sena (BBS) General Secretary Ven. Galagodaaththe Gnanasara Thero has been sentenced to four years of rigorous ...
28/03/2024

Bodu Bala Sena (BBS) General Secretary Ven. Galagodaaththe Gnanasara Thero has been sentenced to four years of rigorous imprisonment for the defamatory comments made against Islam 8 years ago.

இன ஓர்மங்களை உரசும் இரண்டாம் சமர்சுஐப் எம் காசிம் ஜனாதிபதித் தேர்தலுடன் களைகட்டிய அரசியல்வாடை நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்வ...
28/11/2019

இன ஓர்மங்களை உரசும் இரண்டாம் சமர்

சுஐப் எம் காசிம்

ஜனாதிபதித் தேர்தலுடன் களைகட்டிய அரசியல்வாடை நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்வரை வீசிக் கொண்டே இருக்கப்போகிறது. ராஜபக்‌ஷக்களை வீழ்த்துவதற்கான சமரில் தோற்றுப்போன எதிரணியினர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலாவது அதிகாரத்தை எட்டிப் பிடிப்பதற்கான எத்தனங்களில் இறங்கியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்க் கட்சித் தலைமைப் போட்டிகள் கட்சியைப் பிளவுபடுத்தாதுவிட்டால் மாத்திரமே இவர்களின் எத்தனங்கள் முன்னேற வாய்ப்புண்டு. இல்லா விட்டால் பாராளுமன்றத்தில் பெரமுன சாதாரண பெரும்பான்மையை இலகுவில் பெற நேரிடும்

சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரை குறிப்பாக புதிய ஜனநாயக முன்னணியிலுள்ள தமிழ், முஸ்லிம்
தனித்துவ தலைமைகளுக்கு இம்முறை நடைபெறவுள்ள தேர்தல், வௌியேறப்போகும் இறுதி மூச்சை தடுத்து நிறுத்துவதற்கான வாழ்க்கைப் போராட்டமாகவே இருக்கப்போகிறது. புதிய ஜனாதிபதியின் உரையும் அவர் பதவியேற்ற ருவன்வெலிசாய இடமும் இரு தேசிய இனங்களுக்கான கௌரவப் பார்வைகளாவே பார்க்கப் படுகின்றன. தமிழ் மன்னனான எல்லாளனை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய துட்டகைமுனுவின் பெருமைகள் பொதிந்த இடத்தில் பதவியேற்பு நிகழ்ந்தமை திராவிட, ஆரிய இனங்களுக்கான அதிகாரச் சமர்களின் சிந்தனைத் தொடர்ச்சியாகக் கருதப்பட இடமளிக்கப்படக் கூடாது. அவ்வாறு இடமளிப்பது வடக்குச் சித்தாந்தத்தையும் தென்னிலங்கைச் சித்தாந்தத்தையும் மேலும் துருவப்படுத்தவே செய்யும். இந்நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளை இரு தலைமைகளும் கண்டறிவதனூடாகத்தான் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்கு உயிரூட்ட முடியும். இல்லாவிட்டால் பேச்சளவில் இக்கோட்பாடு கிடப்பில் கிடக்க,வடக்குத் தெற்கு வேற்றுமைவாதம் ஒவ்வொரு தேர்தல்களிலும் உணர்வு ரீதியாக வௌிப்படுவதைத் தவிர்க்க முடியாது. எனினும் இவ்வேற்றுமைவாதங்களை,இருதரப்பும் அரசியல் பிழைப்புக்கான மூலதனமாகப் பாவிக்க விரும்புவதே எமது நாட்டுக்குப் பிடித்த தீராத நோயாகியுள்ளது.

உண்மையில் தமிழர் தரப்பு நியாயங்களைப் புரிய மறுக்கின்ற தென்னிலங்கைச் சித்தாந்தவாதிகள் ஒன்றைப் புரிந்து கொண்டால் போதுமானது.வடக்கின் நியாயங்கள் புரிந்து கொள்ளப்படாததால் யுத்தமொன்றுக்கே செல்ல நேரிட்டது. இந்த யுத்தத்தில் பாரியஇழப்புக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த சமூகத்திற்கு தனிஈழம் இல்லாவிடினும் தனி சம அதிகாரம் வழங்குவதிலுள்ள சமரசங்களைப் புரிவதே போதுமானது. புரியும்படியும், நம்பும்படியும் தமிழ் தலைமைகள் நடந்து கொள்ளவில் லையே,என்ற கேள்வியை எழுப்பிவிடாதீர். ஏனெனில் இந்த நம்பிக்கைகளில்தான் தமிழர் அரசியல் வாழ்வின் ஐம்பதாண்டு காலம் கடந்துவிட்டது. இனிவரும் காலங்களை வாய்த்தர்க்கம், வாக்குவாதங்களில், ஏட்டிக்கு போட்டியாக கடத்தாது பொருத்தப்பாடு, இணக்கப்பாடு, பொதுமைப்பாட்டு அரசியலுக்கு அழைத்துச் செல்வதே பொருத்தமாக இருக்கும்.

'போர்க்குற்றச்சாட் டுள்ளவர் ஜனாதிபதியானாலும் சர்வதேசத்தில் விடமாட்டோம்' எனக் கர்ஜிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச பலத்தை எவரும் அறியாமலில்லை. இவ்வாறான கர்ஜிப்புக்கள் பொதுத் தேர்தலுக்கான உசுப்பேற்றல்களே என்பது ராஜபக்‌ஷக்களுக்குத் தெரியாமலுமில்லை.இந்த உசுப்பேற்றலில் அதிக ஆசனத்தைப் பெற்று பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷ அரசைப் பேரம்பேசம்பேசலுக்கு அழைப்பதுதான் இவர்களின் திட்டம்.

ஆனால் இதுவல்ல பிரச்சினை.இவ்வாறான கர்ஜிப்புக்கள் தென்னிலங்கையை,விழிப்பூட்டி திராவிடத் தமிழர்களை விரோதிகளாக நோக்கும் நிலைமைகளை ஏற்படுத்தும். இந்நிலைமைகள் தமிழர்களுக்கு சம அதிகாரப்பங்கீடு வழங்குவதை ராஜபக்‌ஷக்கள் விரும்பினாலும் தென்னிலங்கையே எதிர்க்கும் அபாயச்சூழலையே ஏற்படுத்தும். தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் இது பற்றிச்சிந்திப்பதே சிறந்தது.

மறுபுறம் முஸ்லிம் தரப்புக்கள் என்ன செய்யப் போகின்றன?. சஜித்பிரேமதாசவை வேட்பாளராக்கும் முதற்போடுகாயைத் தானே எறிந்ததாக தோள் நிமிர்த்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் கலகெதர கோட்டையே கைநழுவிப் போயுள்ள விபரீதம் தலைமையை சற்று அளவுக்கதிகமாக உஷாரக்கியுள்ளது.
தோல்வியில் சளைக்காத மு. கா தலைமை இம்முறை அதிரடி வேகத்தில் இறங்கியிருப்பது ராஜபக்ஷக்களின் இன ஓர்மை அரசியலுக்கான பதிலீட்டுக்காய்களை நகர்த்துவதற்கான வியூகமாகவே பார்க்கப்படுகின்றது

வெற்றி பெருமிதத்தில் தேசிய காங்கிரஸ் திளைத்திருக்க, இந்த அலைகளுக்குள் அலையும் வாக்காளர்கள் திசை திரும்பினால் தனித்துவ காங்கிரஸ்களின் இருப்புக்கள் சவாலா குமா?இத்தனைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அம்பாரையில் தனித்துக் களமிறங்கும் களப் பரீட்சையில் இறங்கவுள்ளதாம்.சமூக சவால்களை எதிர்கொள்ள ஓரணியில் திரண்டு புனித உம்ராவுக்கும் சென்று வந்த தலைமைகள் பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் பிரிந்து போட்டியிடுமானால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமையை தேசிய காங்கிரஸ் கேள்விக்குறியாக்கலாம். இக் கேள்விகளை கிளறிவிட்டுக் காய்பறிக்க காத்திருக்கும் தேசிய காங்கிரஸுக்கு கனிகள் கொடுப்பது போன்றே இச்செயற்பாடுகள் அமைந்து விடலாம். எதைச் சொல்லி இத் தலைமைகள் எதிர்கால வியூகங்களை நிலைப்படுத்துவர்.

ஆதரவளித்த வேட்பாளரும் தோற்றாயிற்று.எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் தீர்மானித்தாயிற்று.வாக்காளர்களை உணர்ச்சியூட்ட உள்ள வழியென்ன?தனித்துவமா?தனி அலகா?நிர்வாக மாவட்டமா? இவற்றில் எதை எதை எடுத்தாலும் தென்னிலங்கையில் ராஜபக்‌ஷக்களின் கோட்டைகள் தலை நிமிரவுள்ள யதார்த்தத்தில் எதைக்கோருவது?.
அண்மைய தேர்தலில் சமூக உரிமை பற்றி அடக்கி வாசித்த இத் தலைமைகள், ராஜபக்ஷக்களை வீழ்த்துவதற்கான அர்சியல் சமரில் சறுக்கினாலும் அடுத்த வாய்ப்புக்கு வழி திறக்கும் வகையில் பிரச்சாரங்களை முடுக்கி விடும்.

இத்தனைக்கும் பாராளுமன்றத்தில் பலத்தை நிரூபித்து பேரம்பேசலில் ஜனாதிபதியைப் பணிய வைப்போம் என்று சொல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிபிளவு படாமல் ஒற்றுமையாய் பயணிப்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது.

இறுக்கமாக நகரும் தேர்தல் களம்;கோட்டைகளைச் சாய்ப்போருக்கே வெற்றி சாத்தியம்-சுஐப் . எம். காசிம்-சர்வதேசமே எதிர்பார்க்கின்ற...
13/11/2019

இறுக்கமாக நகரும் தேர்தல் களம்;கோட்டைகளைச் சாய்ப்போருக்கே வெற்றி சாத்தியம்

-சுஐப் . எம். காசிம்-

சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும்.தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களங்கள் இறுக்கமாக நகர்கின்றன.இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸக்களும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும் பிரச்சாரங்களால் ராஜபக்ஷக்களுக்கு தென்னிலங்கையும் பிரேமதாஸக்களுக்கு சிறுபான்மைத் தளங்களும் சாதகமாகவுள்ளன.நல்லாட்சி அரசின் நாலரை வருடக் கெடுபிடிகளை ஞாபகமூட்டி ரணிலின் அரசாங்கத்தைக் கேலி செய்யும் மஹிந்தராஜபக்ஷ,ஈஸ்டர் தாக்குதலை கையிலெடுத்திருப்பது தென்னிலங்கையில் பல வியூகங்களை இழையோட வைத்துள்ளன.

ஜனநாயக தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளை பிரிவினைவாதமாகக் காட்டி தென்னிலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துவது,பெளத்தர்கள் அதிகளவு விரும்பும் தலைமைக்கு எதிராகச் செயற்படாமல் நெருக்குவாரங்களைக் கட்டவிழ்ப்பது,கடும்போக்கர்களின் கண்காணிப்பில் ராஜபக்ஷக்களின் கோட்டைகளை சுற்றிவைளைப்பதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கை கொடுத்துள்ளதையே காணமுடிகிறது . இந்தக் கள நகர்வுகள் ஜனநாயக தேசிய முன்னணிக்கு பெரும் தலையிடியாகிறது.

இவ்வினவாத வியூகங்களுக்குச் சமனான வாக்குகளைப் பெற்றேயாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சிறுபான்மையினரின் தளங்களைக் கையகப்படுத்துவதன் தீவிரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படுத்திற்று.இதனால் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ராஜபக்ஷக்களின் ஒரு தசாப்த ஆட்சியை,தங்களது தளங்களில் நினைவூட்டி,அவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கொடுமையாளர்களாகவும் காட்டி இவர்களின் செயற்படு தளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

தெற்கு,வடக்குத் தளங்களின் எழுச்சிகளை அலையும் வாக்காளர்கள்
(floating) புரிவதைப் பொறுத்தே வெற்றி,தோல்விகள் அமையலாம்.உண்மையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அங்குள்ள சுமார் 18 இலட்சம் வாக்குகளும் தென்னிலங்கையிலுள்ள பெரிய மாவட்டங்கள் ஒன்றுடன் சமப்படக் கூடியதே.உதாரணமாக கொழும்பு அல்லது குருநாகல் மாவட்டங்கள் ஒன்றுக்குச் சமனான வாக்குகளே அவை.எனவே சிறுபான்மைக் கோட்டைகளை மட்டுமன்றி தென்னிலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளை அதிகப்படியாகப் பெறும் தேவை இத்தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

மேலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் முஸ்லிம் தனித்துவ தலைமைகளுடனும் இல்லை.இங்குள்ளோரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானிகள். இவர்கள் முஸ்லிம் தலைமைகள் கோரும் நிர்வாக அலகு,அதிகார எல்லைகளைப் பிரிவினையாகப் பார்ப்பவர்கள்.தனித்துவத் தலைமைகளை ஆதரிப்பது தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் தங்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துமென அதிகளவு அஞ்சும் மக்களும் இவர்கள்தான் .

மேலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த கொதி நிலைகள் இந்நிலைமைகளின் விபரீதங்களை இரட்டிப்பாக்கியுமுள்ளது. எனவே எவ்விதக் கோரிக்கைகளையும் முன்வைக்காது அல்லது தாம் வைத்த கோரிக்கைகளை வெளிப்படுத்தாதுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் ராஜதந்திரத்தில் இம்மக்களின் பீதியைப் போக்குவதற்கான தந்திரங்கள் உள்ளதாகவும் எண்ணத் தோன்றுகிறது. ஏன்? 13 அம்சக் கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதே! இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ராஜதந்திரம் என்றும் சிலர் கோருகின்றனர்.இதுதான் சிந்திக்கத் தூண்டும் விடயம் தென்னிலங்கையில் தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம். இதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையிலே மூலதனமாக்க முயற்சிக்கின்றனர்.

இம்முயற்சிகளைத் தவிர்க்கவே முஸ்லிம் தலைமைகள் இவ்வியூகத்தைக் கையாண்டிருக்கலாம். மேலும் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதால் தமிழர் தரப்பிலிருந்தான அச்சுறுத்தல்களை தென்னிலங்கை கடும்போக்கர்கள் கண்டு கொள்ளவில்லை.இருந்த போதும் புலிகளை உயிரூட்டுவதற்கான முயற்சிகளாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் நோக்க வைக்கப்படுவதையும் சிறுபான்மையினர் அவதானிக்க வேண்டும் ."முப்பது வருடப் போரில் புலிகளால் செய்ய முடியாததையா கூட்டமைப்பினர் சாதிக்கப் போகின்றனர். தமிழர்களே அபிவிருத்தி அரசியலுக்காக தம்மோடு இணையுங்கள்"என ராஜபக்ஷக்கள் அழைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தளங்களைத் தகர்க்கும் முயற்சிகள்தான்.எனினும் இவைகள் பாறைகளில் எறியப்பட்ட பந்துகளாகுமா?அல்லது பசுமரத்தாணிகளாகுமா?எதிரே வரவுள்ள நாட்களே இதற்கு விடை பகரவுள்ளன.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடாத்திய எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்று உஷாரடைந்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கைத் தளங்களை மேலும் கெட்டியாக்கின.

இதனால் ராஜபக்ஷக்களின் குடும்பத் தகராறுகளை தென்னிலங்கைச் சந்திகளுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகள் புதிய ஜனநாய முன்னணிக்கு இருக்கவில்லை. குடும்ப ஆட்சி,ஊழல் மோசடிகள்,வாரிசு அரசியலைப் பிரச்சாரம் செய்யும் புதிய ஜனநாய முன்னணி தென்னிலங்கையில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதும் சிறுபான்மையினர் தளத்திற்குள் நுழைந்துள்ள மஹிந்தவின் ஏஜெண்டுகளை முற்றாகக் களைவதும்தான் சஜித்தின் வெற்றியைச் சாதகமாக்கலாம்.

இல்லாவிட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற 36 இலட்சம் வாக்குகளுடன் தோழமைக் கட்சிகளால் கிடைக்கும் வாக்குகளைக் கூட்டுவதுடன் நின்று விட நேரிடும்.எனவே ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் வடக்கு, தெற்கு தளங்களைத் தகர்க்கும் வீதாசாரத்திலே வெற்றிகள் அமைந்திருக்கும்.சந்திரிக்காவின் வருகை ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும் அதிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதை அவதானிக்கும்போது,வீரியமுள்ள தலைவி கிடைத்ததற்கான மகிழ்ச்சி என்பதை விடவும் வெளிநாடுகளின் ஆதரவுகளைப் பெறலாமென்ற நம்பிக்கையே அவர்களைத் தைரியப்படுத்தியுள்ளன.

மறு பக்கம் வெளிநாடுகளின் தலையீடுகள்,டயஸ்பொராக்களின் அழுத்தங்களுக்கு எதிராகப் பேசும் ராஜபக்ஷக்களை இது தைரியமூட்டியுமுள்ளது. எனவே இத்தேர்தலென்பது எவரும் கணிப்பிட முடியாத,எதிர்வு கூற இயலாத மிக இறுக்கமான தேர்தலாகவேயுள்ளது. வெளிவரவுள்ள முடிவுகளே சகலரது எதிர்பார்ப்புக்கும் பதிலளிக்கும்.

வரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம்.வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா?-சுஐப்.எம்.காசிம...
29/10/2019

வரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம்.

வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா?

-சுஐப்.எம்.காசிம்-

காலவோட்டத்திற்கேற்ப தேர்தல் களத்தை எவ்வாறு நகர்த்துவதென்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது. வடக்கின் தொடுவாயிலிருந்து ஆரம்பித்த எமது பயணம் தென்னிலங்கையின் மூலை முடுக்குகளையும் ஆழ ஊடுருவி நோக்கியதால், கள யதார்த்தங்களை கணிப்பிட இயலுமாயிற்று.இந்தக் கணிப்பீடு வெற்றி தோல்வி பற்றியதல்ல.முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்குள் ஊடுருவியுள்ள அச்சம் கலந்த ஆதங்கம், அடிப்படைவாதத்தின் அசல்,நகல் பற்றிய தௌிவுகளில் எமது சமூகத்தின் கணிப்பீடுகளை இக்கள விஜயத்தில் காண முடிந்தது.

ராஜபக்ஷக்களின் தென்னிலங்கை எழுச்சிக்குள் இயைந்து செல்வதா? அல்லது சிறுபான்மை உணர்வுகளுடன் ஒன்றித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா? என்ற கலக்கம்,மயக்கங்களில் எமது மக்கள் இருக்கின்றனர். நள்ளிரவையும் தாண்டி அதிகாலை இரண்டு மணி, மூன்று மணி வரை எமது வருகைக்காக வீதிகளில் காத்து நின்ற தென்னிலங்கை முஸ்லிம்களின் மனங்கள்,மக்கள் காங்கிரஸ் தலைமையை தைரிய மூட்டியது.மட்டுமல்ல "தருணம் தப்பினால் தலையிலடி" என்ற பதற்றத்தில் உறைந்திருந்த குருநாகல் உள்ளிட்ட தென்னிலங்கையின் நீண்ட பரப்பிலுள்ள முஸ்லிம்களுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வழிகாட்டல்கள் நிம்மதியளிப்பதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம் சமூகத்தலைமைகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒற்றுமைதான் பலம் சேர்க்கும் என்ற நியதியில் பெருந்தேசியத்துக்குள் ஒளிந்துள்ள முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடுகள் கவலையளிப்பதையும் அம்மக்களின் விரக்தி உணர்வுகளில் நான் கண்டு கொண்டேன். ராஜபக்‌ஷக்களின் விசுவாசிகளாவதற்காகவே இவர்களில் சிலர் முஸ்லிம் சமூகத்தின் அபிமானிகளாகத் தங்களைச் சுயம்வரம் சூடிகொண்டனர்.நல்லாட்சியிலும் சரி, கடந்தகால பொல்லாத ஆட்சியிலும் சரி முஸ்லிம்களுக்கு எதிராக அவிழ்க்கப்பட்ட அத்தனை அட்டூழியங்களையும் தடுப்பதற்கான பாதுகாப்பு அரணாகச் செயற்பட்டது யார்?ராஜபக்ஷக்களுக்காக குரல் கொடுக்கும் ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்,முன்னாள் அமைச்சர்களும் அப்போது எங்கிருந்தனர்/?இதுதான் இவர்களின் மனச்சாட்சிகளைத் துளைத்தெடுக்கின்றன.இது மாத்திரமல்ல நட்ட நடுநிசியிலும் காரிருளிலும் விழிகள் திறந்து கிடக்கும் கடும் போக்கர்களின் களங்களைத் தாண்டி சமூகத்துக்குள் ஊடுருவிப்பணிபுரிந்த அங்கீகரிக்கப்பட்ட சமூகத் தலைமைகள் இன்றுவரைக்கும் ஓயாது உழைக்கின்ற உணர்வும் ஓர்மையும் சமூகத்திரட்சியில் ஒருங்கிணைந்து கடும்போக்கர்களின் கடைசிச் சந்தர்ப்பத்தை தோற்கடிப்பதற்காகவே.இந்தத் தேர்தலின் தோல்வி பௌத்த கடும்போக்கர்களின் செருக்குத்தனத்தையும் ஏனைய மதத்தினர் மீதான கேலித்தனத்தையும் வாழ்விழக்கச் செய்யும்.மாறாக இவர்களின் வெற்றி தென்னிலங்கை முஸ்லிம் சமூகங்களின் சுதந்திர இருப்புக்கு அடிமைச்சாசனம் எழுதி,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் இருப்புக்களை பெரும்பான்மை இருப்புக்குள் விழுங்கிவிடும்.இந்த யதார்த்தத்தின் எதிரொலிகளே முழு முஸ்லிம் பரப்பிலும் பட்டுத் தெறிக்கின்றன.


சமூகத்தின் எந்த வீடுகளைத் தட்டினாலும்,எந்த வாசல்களுக்குச் சென்றாலும் ராஜபக்‌ஷயுகங்களின் கொடுங்கோல் வடுக்கள் வீரவரலாறுகளாகப் பதியப்பட்டுள்ளதையே என்னால் காணமுடிந்தது. அப்படியென்ன கொடுமை,கொடுங்கோல் அந்த யுகத்தில் என்றும் சிலர் நினைப்பதுண்டு.எந்தச் சொத்துக்களுக்கும் ஈடாகாத,எதற்கும் விலைபோகாத முஸ்லிம்களின் மத உணர்வுகள்,நம்பிக்கைகளில் ஏற்படுத்தப்பட்ட காயங்களே அவை.புலிகளின் வீழ்ச்சியில் முஸ்லிம் சமூகம் நிம்மதியடைந்தமை உண்மை,கிழக்கின் விடுவிப்பில் முஸ்லிம்களின் காணிகள் மீளக்கிடைத்தமை உண்மை, வடக்கில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்தமை உண்மை இதற்கான நன்றிக் கடன்கள் ராஜபக்‌ஷக்களுக்குரியதுதானே என்ற கேள்விகளும் நியாயத்திலிருந்துதான் பிறக்கின்றன.ஆனால் இவற்றை சரிப்படுத்திய நியதிக்குள் 2013 இல் ஆரம்பான கெடுபிடிகள் உள்வாங்கப்பட்டுவிட்டதே.நல்லாட்சியிலும் இதே சாயலுடன் கெடுபிடிகள் நடக்கவில்லை என்பதற்கில்லை.எனினும் தலைமைகள் தப்புச் செய்யாதென்ற நம்பிக்கை இம்மக்களை வழிநடத்துகிறதென்பதே உண்மை.

குருநாகல் மாவட்டத்தின் கிராமங்களான கலேகம, தோறக்கொட்டுவ,பானகமுவ, தல்கஸ்பிட்டிய, ஹொரம்பா, திவுரும்பொல, தித்தவெல்கல, சியம்பலாகஸ்கொட்டுவ,மற்றும் கண்டி மாவட்ட மக்களின் மன உணர்வுகளைத் தொட்டுச் சென்ற வாடைகள் வாடுவதற்கிடையில், வடக்கு நோக்கி அமைச்சரின் பரிவாரங்கள் பறந்த வேகத்தில் மரங்கள்,பொந்துகளுக்குள் ஔிந்திருந்த பறவைகளும் தூக்கம் கலைத்து தலைகளை வௌியில் நீட்டின.

உண்மையில் புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் நிலவும் அரசியல் சூழல் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதுதான்.இதற்கு வித்திட்ட ராஜபக்‌ஷக்களுக்கு இப்பிரதேச மக்கள் விசுவாசத்தை வௌிப்படுத்த வேண்டியது வரலாற்றுக் கடமைதான் . ஆனால் தென்னிலங்கையிலுள்ள தமது சகோதரர்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமானால் ராஜபக்‌ஷக்களை நிராகரிக்கும் தவிர்க்க முடியாத வரலாற்றுப் பொறுப்புக் குள் வடக்கு,கிழக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகின்றனர்.

அடிப்படைவாத்தின் ஊற்றுக்களைத் துடைத்தெறிந்தால் ஏனைய கட்சிகளிலுள்ள இனவாதிகளையும் தோற்கடித்து விடலாம் என்பதற்கான தெரிவையே தனித்துவ தலைமைகள் தேர்ந்தெடுத்துள்ளன.இந்தத் தெரிவில் எத்தனை முஸ்லிம்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்பதை எதிர்வரும் தேர்தல் நிரூபிக்கப் போகிறதென்பதே உண்மை.எனினும் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் தியாக உணர்வை தென்னிலங்கை முஸ்லிம் சமூகம் உணர வேண்டிய கடப்பாடுகளுக்கும் திணிக்கப்படுகின்றனர்.கிழக்கில் தனி நிர்வாக அலகு, அம்பாரை கரையோர மாவட்டக்கோரிக்கைகளை பிரிவினைவாதமாகக் கருதி கிழக்கு முஸ்லிம்களுடன் உடன்படாதிருப்பதை தவிர்த்துக் கொள்வதே அது. இதைப்பிரிவினைவாதமாக காட்டும் ராஜபக்‌ஷக்களை தோற்கடித்து விட்டால் தென்னிலங்கை முஸ்லிம்களும் தௌிவு பெற வேண்டும்.

26/10/2019

52 நாள் சூழ்ச்சிக்கு இன்று ஒரு வயது!!

இலங்கை வரலாற்றில் 2018 ஒக்டோபர் 26, ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் அடிபணியவைக்கலாம் என நினைத்திருந்த ராஜபக்ஸக்கள், 19 வது திருத்தத்தின் அடிமுடி தெரியா ஜனாதிபதி மைத்திரியோடு ஒட்டி உறவாடி சூழ்ச்சியில் இறங்கிய கறைபடிந்த நாள்.

நடுநிலமை வகித்த குமாரவெல்கம போன்றோர் இவர்களின் இந்த அதிகாரக்கதிரையின் வெறியை காறி உமிழ்ந்த நாள். இலங்கையின் பாராளுமன்றம் சர்வதேசத்தின் முன்னால் தலைகுனிந்து நின்ற நாள். சபாநாயகரின் ஆசனம் மதிப்பிழந்து தலைகீழே கவிழ்த்து வீழ்த்த வழிகோலிய நாள்.

1994-2015 வரை ஐக்கிய தேசிய கட்சியும் சுமார் 21வருடங்கள் இந்த நாட்டிலே தேர்தல் தோல்விகளை இடைக்கிடைதவிர்ந்து தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளது. ஆனால் இவ்வாறான புரட்சிகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டது கிடையாது. ஜனநாயகவழியிலே மக்களின் ஆணைக்கு அடிபணிந்தே எதிரணி வரிசையில் இருந்து வந்திருக்கின்றது.

ஆனால் 2015 ல் பதவியிழந்த ராஜபக்ஸக்களால் மூன்றரை வருடங்களேனும் அதிகாரமின்றி இருக்கமுடியாது என்பனை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்திவிட்ட சூழ்ச்சியாக கடந்த ஒக்டோபர் புரட்சி அமையப்பெற்றிருந்தது.

முஸ்லிங்கள் தொப்பி புரட்டிகள் என்றும், அதிகாரத்துக்காக அலைபவர்கள் அவர்களுடைய தலைமைகள் என்றும் நினைத்த ராஜபக்ஸக்கள்; முஸ்லிங்களை வைத்து எந்த ஆட்சி மாற்றத்தையும் சாதகமாக்கிக்கொள்ளலாம் என இடைபோட்டமைக்கு பாடம்புகட்டிய புரட்சியாகவும் அது அமைந்திருந்தது.

சூழ்ச்சியின் சுவடுகள் மங்கி மறைவதற்குள் ஈஸ்டர் தாக்குதல் அரங்கேறியிருந்தது. இவைகளை மையப்படுத்தியதாக ஜனாதிபதி தேர்தலும் வந்திருக்கின்றது. சிந்திப்போம்!!

அதிகாரத்தை அடாத்தாக பிடிக்க முற்பட்ட ராஜபக்ஸக்களின் மொட்டுக்கா எமது வாக்குகள்? அல்லது மத நிந்தனைகள் தவிர்த்து ஜனநாயக வழியில் ஆட்சியை செய்ய விரும்பும் சஜித் அணியின் அன்னத்துக்கா??

ஷிபான் BM.

அரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே! அரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழ...
16/10/2019

அரச ஊழியருக்கும், ஆசிரியர்க்கும் ஐ.தே.க ஆட்சி வரப்பிரசாதமே!

அரச ஊழியன் வேலைக்கேற்ற சம்பளம் பெற்று தலைநிமிர்ந்து நடக்க வழிகோலியது இன்றைய ஐ.தே.கா ஆட்சியே. 2015ல் அரச ஊழியனின் அடிப்படை சம்பளத்தில் 10000/- அதிகரிப்பானது ஒவ்வொரு அரச ஊழியனும் ஐ.தே.கா அரசு நிலைத்திருக்க வாக்களிக்க போதுமானது.

இந்த நாட்டை 10 வருடங்கள் ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ஸ 2010 ஜனாதிபதித்தேர்தலிலே சரத் பொன்சேக்கா அரச ஊழியனுக்கு 10000/- அதிகரப்பதாக கூறவே; “எப்படி இந்த 10000/- சம்பள அதிகரிப்பு சாத்தியம்? எனக்கேட்டு 5000/- கூட்டுவதாக வாக்குறுதியளித்து கடைசியில் 2500/- மாத்திரமே மகிந்தரால் கூட்டப்பட்டது” என்பது வரலாறு.

10 வருடத்தில் மகிந்தவால் முடியாமல் போன விடையத்தினை வெறும் நான்கே வருடத்தில் ஐ.தே.கா செய்து முடித்ததனை ஒவ்வொரு அரச ஊழியனும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய தேவை உள்ளது.

மகிந்த அரசிலே இந்த நாட்டின் எதிர்கால சந்ததிக்காக மாடாய் உழைத்து ஓடாய் தேயும் ஆசிரியர் வர்க்கத்தினை நோக்கி மகிந்தவின் கல்வி அமைச்சராகவிருந்தவரும் பொருளியல் ஆசிரியருமாகிய பந்துல குணவர்த்தனா; “ஆசிரியரின் குடும்ப செலவுக்காக வெறும் 2500/- போதுமானது” எனக்கூறி ஆசிரிய வர்க்கத்தை கொச்சை படுத்தியதும்; அந்த நேரத்திலே ஐ.தே.கா வரிசையிலே இருந்த தயாசிறி ஜயசேகர “உங்களிடம் பொருளியல் படித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” எனக்கூறியதையும் எந்த ஆசிரியனும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இந்த ஆட்சியிலே, யாருக்கும் தெரியாமலேயே 2016/3ம் இலக்க சுற்று நிருபத்தின் ஊடாக இலங்கை ஆசிரியர் சேவை தர அடிப்படையின் பிரகாரம் 2019/2020ம் ஆண்டு சம்பள அதிகரிப்பு நிகழவுள்ளது. (உதாரணமாக SLTS-1 ஆசிரியருக்கு வருடமொன்றுக்குள் சுமார் 7000/- வரையான சம்பள அதிகரிப்பும் இடம்பெற உள்ளது)

நிதிச்சட்டம் 1 : 4.5 என்ற அமைப்பில் உள்ள சம்பள முரண்பாட்டின் மூலம் ஆசிரியருக்கான சம்பள அதிகரிப்புக்களை மேற்கொள்ள முடியாத நிலை நம் நாட்டிலே முன்னர் காணப்பட்டது. ஆனால் அண்மைய பேச்சுவார்த்தைகள் மூலம் ஆசிரியர் சேவை ஒன்றிணைந்த சேவைக்குள் கொண்டுவரப்பட்டு சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதும் இந்த ஐ.தே.கா ஆட்சியிலேதான்.

சம்பளம் கூட்டி வாழ்க்கை செலவைக் குறைத்தது ஐ.தே.கா அரசின் நல்லாட்சியே! மாறாக மகிந்தரின் ஆட்சி சம்பளம் குறைத்து வாழ்க்கை சுமையை ஏற்றியிருந்தது என்பது மேலேயுள்ள நிழ்ல்படத்தினூடே தெளிவாகும்.

ஆகவேதான் அரச ஊழியர்களே!ஆசிரியர்களே! பகுத்தறிவிருந்தால் சிந்தித்து நோக்குங்கள். எதிர்வரும் சஜித் அரசின் ஆட்சி அரச ஊழியனுக்கு வரப்பிரசாதமே!

வாலிபத் தங்கம் சஜித்தா ? வயதான சிங்கம் கோட்டாவா ? உங்கள் தெரிவு???

ஷிபான் BM.

ஹிஸ்புல்லாஹ் ஒட்டகத்துக்கு பதிலாக ஓணானை தெரிவு செய்திருக்கலாம்..!!சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் அரசியலின் கதாநாயகனாக ...
14/10/2019

ஹிஸ்புல்லாஹ் ஒட்டகத்துக்கு பதிலாக ஓணானை தெரிவு செய்திருக்கலாம்..!!

சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் அரசியலின் கதாநாயகனாக பார்க்கப்பட்ட முன்னை நாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இன்று காமடியனாக நோக்கப்படுகின்றார்.

அரசியலில் தான் நிற்கும் பக்கத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்பதுதான் விதி. அதற்காக சதிகார இனவாத கும்பலுக்குள் சங்கமமாதல் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இவர் 8வது ஜனாதிபதி தேர்தலை ஊகத்தின் அடிப்படையில் நோக்கி; எவருக்குமே அளிக்கப்படும் வாக்குகளில் 50% எட்டமுடியா நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிங்களே இருக்க வேண்டும் என உசுப்பேத்தி மடையர்களாக்கும் கைங்கரியத்தை செய்ய வெளிக்கிட்டிருக்கின்றார்.

A,B,C,D,E என்ற 5 வேட்பாளர்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், அளிக்கப்பட்ட வாக்குகளில் எவரும் 50% வாக்குகளை பெறாதவிடத்து , இரண்டாம் சுற்றுக்காக A,B, என்பனவே தெரிவு செய்யப்படும் என்பதனை கூறும் இவர், C,D,E என்பவை கழித்து ஒதுக்கப்படும் என்பதனை சொல்ல மறுக்கின்றார்.

இரண்டாம் சுற்றுக்கான C ,D,E என்பவற்றுக்குள் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சியின் வாக்குகள் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படுமே தவிர மற்றையவை அல்ல. ஆகவே அந்த இடத்தில் C இருந்தால் அதனுடைய இரண்டாவது விருப்பத்தெரிவு மாத்திரமே கவனத்தில் கொள்ளப்படுமே தவிர ஏற்கனவே கழிக்கப்பட்ட D,E இனது அல்ல; என்பதனை ஹிஸ்புல்லாஹ் விழுங்குகிறார்.

இந்த தேர்தலை பொறுத்தவரை துரதிஸ்டவசமாக கோத்தாவோ, சஜித்தோ அளிக்கப்பட்ட வாக்குகளில் 50% எட்டவில்லை எனில் தீர்மானிக்கும் சக்தியாக மாறவிருப்பது பெரும்பான்மை இனத்தின் மூன்றாவது சக்தியான அனுர குமார திசாநாயக்க அணியே தவிர வேறொருவர் அல்ல.

முஸ்லிங்கள் எவரும் அனுர குமார அணிக்கு வாக்களிக்க கூடாது எனவும் ஹிஸ்புல்லாஹ் வினயமாக வேண்டிக்கொண்டார். அனுரகுமாரவுக்கு வாக்களிக்கும் முஸ்லிங்கள் இரண்டாவது தேர்வாக சஜித்தையே தெரிவு செய்வார்கள் என்ற அச்சம் அவருள் குடிகொண்டுள்ளது. ஹிஸ்புல்லாஹ் அதனை விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது.

ஆகவேதான் ஹிஸ்புல்லாஹ் சூழ்ச்சி செய்கின்றார். சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் ஆதரிக்கும் சஜித் பிரேமதாஸ 50% விகிதம் எனும் மைல்கல்லை எட்டிவிடாது இருப்பதற்காக, புழுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு சிறுபான்மை முஸ்லிங்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியிலேயே ஹிஸ்புல்லாஹ் இறங்கியுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் ஹிஸ்புல்லாஹ்வின் அறிவிப்பு கோட்டா எனும் இனவாதிகளின் தோட்டாவை நோக்கியதாகவே இருக்கப்போகின்றது. ஹிஸ்புல்லாஹ் ஒட்டகத்துக்கு பதிலாக ஓணானை தெரிவு செய்திருக்கலாம்.

ஷிபான் BM.

கிழட்டு ரெஜிமெண்ட்; மொட்(டை)டு கனவு!! இலங்கை அரசியல் வரலாற்றில் யுத்த வெற்றியை தொடர்ந்து மகிந்தவின் கிழட்டு ரெஜிமண்ட் யு...
12/10/2019

கிழட்டு ரெஜிமெண்ட்; மொட்(டை)டு கனவு!!

இலங்கை அரசியல் வரலாற்றில் யுத்த வெற்றியை தொடர்ந்து மகிந்தவின் கிழட்டு ரெஜிமண்ட் யுகம் தனிச் சிங்கள பெரும்பான்மை அரசை நிறுவ எடுத்த முயற்சிகளும் அதற்காக இனவாதத்தினை கையில் எடுத்தமையும் வரலாற்றுக்கறை.

காலவோட்டத்தின் வேகம் 2015ல் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களும் தலைமைகளும் முடிவெடுத்து மைத்திரியை அரியணையேற்றி அழகு பார்த்ததும், பின்னர் மைத்திரி 52 நாள் ஒக்டோபர் புரட்சியை அடுத்து நெருப்புக்கொள்ளியால் தன் தலையை தானே சொறிந்து கொண்டு இன்று பட்டமரமாகிப் போனமையும் அறிந்ததே.

இந்த தோரணையில் சிறுபான்மை எனும் புள்ளியில் பொறிவைத்த ஈஸ்டர் தாக்குதலும், தாக்குதலுக்கான விடையாக இனவாதிகள் 52 நாள் ஒக்டோபர் புரட்சியை வீழ்த்திய முஸ்லிம் அரசியல் தலைவர்களை குறிகாட்டியதும், கடைசியில் குறிகாட்டிகள் குழியில் வீழ்ந்ததும் எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று.

கிழட்டு ரெஜிமெண்ட் காவலர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்பன்வில, அத்துரலிய ரத்ன தேரோ, விஜயதாச ராஜபக்ஸ, மதுமாதவ அரவிந்த கூட்டணி முஸ்லிங்களின் மீது சுமத்திய அபாண்டங்களும் முஸ்லிங்களின் வாக்கு எமக்கு இனிமேல் தேவையில்லை என மார்தட்டியதையும், தேசிய கொடியில் சிறுபான்மையை அங்கீகரிக்காமையையும் இன்னும் எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது முதலில் வந்தது ஜனாதிபதி தேர்தல் என்றவுடன், அவர்கள் நிலை தடுமாறி முஸ்லிம் வாக்குகளுக்காக மதுமாதவ அரவிந்தவை பணி நீக்கி, உதய கம்மன்விலவை அனுராதபுர ஆரம்ப கூட்டத்திலே அனுமதியாது , அனுராதபுரத்திலே அதாவுல்லாவை கிழக்கின் தலைவராக்கி, ஹிஸ்புல்லாவை தனியே ஒட்டகத்தில் நிறுத்தி, அரங்கேற்றும் நாடகங்கள் சொல்லில் அடங்காதவை.

இத்தனைக்கும் நடுவே, பெயர் சொல்லும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களின் ஏகோபித்த குரலாகவும், ஏழைகளின் தலைவன் ரணசிங்க பிரேமதாஸவின் மகனாகவும் , பழம் பெரும் கட்சி ஐ.தே.கா வினை தூசு தட்டி சுமக்கக்கூடிய இலங்கையர் விரும்பும் இளையவர் சஜித் தேர்தலில் போட்டியிடுவதானது பெளத்த மகா சங்கங்களை மாத்திரமன்றி நாட்டில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் வேண்டும் அத்தனைபேரின் வேண்டுதலாகவும் இருக்கின்றது.

இலங்கையிலே, படித்த பெரும்பான்மையின மக்கள் இனவாதிகள் அல்ல. கிழட்டு ரெஜிமண்ட் கால கொள்ளைகளும் கொலைகளும், ஊடக நசுக்குதல்களும், குடும்ப ஆட்சியும், நடுநிலை சிந்தனாவாதிகள் மனங்களிலே பசுமரத்தாணிகளாகப் பதிந்தவை.

எழுதிவைத்துக்கொள்ளுங்கள்; இத்தனையையும் தாண்டியும், கிழட்டு ரெஜிமெண்ட் வெற்றி பெறுவதென்பது வெறும் மொட்(டை)டு கனவே தவிர வேறொன்றில்லை.

ஷிபான் BM .

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Areb News tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share