SNS DAWAH MEDIA

SNS DAWAH MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SNS DAWAH MEDIA, Media, Colombo.

🤲 யா அல்லாஹ்!ஃபிர்அவ்னின் கூட்டத்தினரிடமிருந்துநபி மூஸா (அலை} அவர்களுக்கு கடலை பிளந்து உதவியதைப் போல்;பலஸ்தீனிய மக்களுக்...
15/11/2023

🤲 யா அல்லாஹ்!

ஃபிர்அவ்னின் கூட்டத்தினரிடமிருந்து
நபி மூஸா (அலை} அவர்களுக்கு கடலை பிளந்து உதவியதைப் போல்;
பலஸ்தீனிய மக்களுக்கும் ஒர் பாதுகாப்பான பாதையைக் காட்டுவாயாக!!

🤲 யா அல்லாஹ்!
காஃபிர்களின் துன்புறுத்தல்களிலிருந்து
எங்கள் பாலஸ்தீன உறவுகளை பாதுகாப்பாயாக

🤲 யா அல்லாஹ்!
அவர்களுக்கு ஆரோக்கியத்தை
வழங்குவாயாக!

🤲 யா அல்லாஹ்!
அவர்களின் காரியங்களை இலகுவாக்குவாயாக

🤲 யா அல்லாஹ்!
அவர்களின் அத்தியாவசிய
தேவைகளை நிறைவேற்றுவாயாக

🤲 யா அல்லாஹ்!
அவர்களின் காரியங்களை சீர்படுத்துவாயாக!

🤲 யா அல்லாஹ்!
அவர்களின் உள்ளங்களின்
துன்பங்கள், கவலைகள்,துயரங்கள் அனைத்தையும் போக்குவாயாக!

🤲 யா அல்லாஹ்!
அவர்களின்
கஸ்ட்டங்களையும் சிரமங்களையும்
நீக்குவாயாக!

🤲 யா அல்லாஹ்!
அவர்கள் மீது கருணை காட்டுவாயாக
அவர்களுக்கு நல்லருள்புரிவாயாக

🤲 யா அல்லாஹ்!
அவர்களுக்கு அழகிய
பொறுமையை கொடுப்பாயாக

🤲 யா அல்லாஹ்!
காஃபிர்களால் கொல்லப்பட்ட (ஷஹீதாக்கப்பட்ட) எங்கள்
பாலஸ்தீன உறவுகளுக்கு
சொர்க்கத்தில் நிறந்தர வாழ்வைக் கொடுப்பாயாக

🤲 யா அல்லாஹ்!
பாலஸ்தீன பூமியில்
அமைதி சாந்தி சமாதானம்
நிலவ இறைவா அருள்புரிவாயாக

🤲 யா அல்லாஹ்!
அவர்களுக்கான எங்கள் பிராத்தனைகளை
ஏற்றுக்கொள்வாயாக

ஆமீன் ஆமீன் ஆமீன்

- Ismail Mustafa

_ _ _ _ _ 🤲 🇵🇸 _ _ _ _ _
பலஸ்தீன் தொடர்பான செய்திகளுக்கு லிங்கை கிளிக் செய்து *Follow* பண்ணுங்கள்.

https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A

31/10/2023
29/10/2023

BREAKING NEWS 🤲🇵🇸
இஸ்ரேல் வகுத்துவரும் வியூகம்!👇

காஸாவை சுற்றிவளைக்கும் இஸ்ரேலிய கூட்டுப்படையின் இரண்டாம் கட்டம் இன்றிரவு தொடர்வதாக இஸ்ரேலிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

#கனடா, #அமெரிக்கா மற்றும் #இஸ்ரேல் அடங்கிய கூட்டுப்படை வடக்கு காஸாவில் தற்போது நிலைகொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்குழுக்களை மூன்று பகுதியாக சிதறடித்து, இணையத்தளம், மின்சாரம் என்பவற்றை துண்டித்து, வானிலிருந்து குண்டு வீசி, தரைமார்க்கமாக காஸாவிற்குள் ஊடுருவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலகட்டங்களில் ஊடுருவ தயாறாகும் இஸ்ரேலிய வியூகத்தின் ஒரு அங்கமாகவே உயர்ந்த கட்டடங்கள் மீது குண்டு வீசி தகர்க்கும் அதேவேளை #புள்டோசர் கொண்டும் கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில் ஒரு #மைதானம் போன்ற #வெட்டவெளியை உருவாக்குவதன் மூலம் ஹமாஸ் போராளிகளின் #பதுங்குநிலை தாக்குதல்களில் இருந்து தப்பித்து இலகுவாக உள்ளே நுழைய முடியுமென இஸ்ரேலிய கூட்டுப்படை திட்டமிட்டுவருகிறது.

இந்நிலையில் சற்றுமுன் காஸாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் #அல்குத்ஸ் மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டுள்ளது.

ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பலம்வாய்ந்த போராட்ட குழுவான #அல்கஸ்ஸாம் படையணி இஸ்ரேல் மீது ஏவுகணை வீசியதில் மூன்று பகுதிகளில் இஸ்ரேலிய வாகனங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

லேட்டஸ்ட் வீடியோக்களுக்கு வட்சப் சனலில் இணையுங்கள்.👇
https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A

29.10.2023

Address

Colombo
00300

Website

Alerts

Be the first to know and let us send you an email when SNS DAWAH MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category