17/04/2026
எழுததாளர் தீபச்செல்வன் நூல்களுக்கு நடந்தது என்ன?
என்ன நடந்தது?
-----
சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் படைப்புகளை விடுவிப்பது தொடர்பாக கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தீபச்செல்வனுடன் அவருக்கு ஆதரவாக நாங்களும் கலந்துகொண்டோம்.
முதலில் சொல்ல வேண்டியது, ஒரு எழுத்தாளர் தான் எழுதிய படைப்புகள் தொடர்பாக அதிகாரிகள் முன் இப்படி விளக்கமளிக்க நேர்வதே அநீதியாகும். ஆனால் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர் என்ற வகையில் தீபச்செல்வனுக்கு இத்தகைய கலந்துரையாடலுக்கு இணங்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
அந்தக் கலந்துரையாடலில் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதி அமைச்சரும், கலாசார அமைச்சின் செயலாளரும், இலங்கை கலை மன்றம் மற்றும் இலக்கிய உப மன்ற உறுப்பினர்கள் சிலரும், சுங்கப் பணிப்பாளர் நாயகமும் உதவிப் பணிப்பாளர் ஒருவரும் கலந்துகொண்டனர். (கலாசார அமைச்சர் கலந்துரையாடலின் நடுவில் வேறு அலுவல் காரணமாக அதிலிருந்து விலகிச் சென்றார்)
எழுத்தாளர் தீபச்செல்வனின் நான்கு படைப்புகள் குறித்து பிரச்சினை இருப்பதாக சுங்கத் தரப்பில் அறிய முடிந்தது. அதனை விடுவிப்பது குறித்து உறுதியான தீர்மானம் எதுவுமின்றி கலந்துரையாடல் முடிவடைந்தது. எழுத்தாளர் சார்பாக எங்களுக்கு பேச இடம் கிடைத்தது மிகக் குறைந்த நேரமே. அரசு சார்பாகப் பேசிய இலக்கிய மற்றும் கலை மன்றங்களின் உறுப்பினர்கள் இந்தப் படைப்புகள் குறித்து தங்கள் கருத்துகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதனை சுங்கத்திடம் சமர்ப்பிப்பதாகவும், அதை பகிரங்கப்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தனர். படைப்புகளை விடுவிப்பது குறித்த தீர்மானம் அதன் பின்னரே எடுக்கப்படும். அதற்கும் திகதி எதுவும் அறியக் கிடைக்கவில்லை.
நேற்றிலிருந்து கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த தீபச்செல்வன் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.
மீண்டும் மீண்டும், எமக்குக் கிடைத்துள்ள பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லைகளை உணர்ந்து கடும் மன அழுத்தத்துடன் நாங்களும் வீடு திரும்பினோம்.
அவ்வளவுதான். எழுதுவதற்கு இன்னும் நிறைய இருந்தாலும் பின்னர் பார்ப்போம்.
மேலதிக விபரங்கள் தீபச்செல்வன் சார்பாக இன்று அங்கு ஒன்றுகூடிய எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவின் பொது நிலைப்பாடு குறித்த அறிக்கையாக பின்னர் வெளியிடப்படும்.
සිදු වූයේ කුමක්ද ?
-----
රේගුවේ රඳවා ගත් දෙමළ ලේඛක දීපචෙල්වන්ගේ කෘති නිදහස් කිරීම සම්බන්ධයෙන් සංස්කෘතික කටයුතු අමාත්යංශයේ පැවැත්වූ සාකච්ඡාවකට දීපචෙල්වන් සමග ඔහුට සහයෝගයක් වශයෙන් අපි සහභාගි වුණෙමු.
පළමුවෙන් කිව යුත්තේ ලේඛකයෙකුට තමන් ලියූ කෘති සම්බන්ධයෙන් බලධාරීන් ඉදිරියේ මෙලෙස කරුණු දැක්වීමට සිදුවීම ම අසාධාරණයකි. එහෙත් පීඩිත ජාතියක් නියෝජනය කරන ලේඛකයෙකු වශයෙන් දීපචෙල්වන්ට මෙවැනි සාකච්ඡාවකට එකග වීම හැර වෙනත් විකල්පයක් තිබුණේ නැත.
එම සාකච්ඡාවට සංස්කෘතික කටයුතු ඇමතිවරයා ද නියෝජ්ය ඇමති වරයාද , සංස්කෘතික අමාත්යංශයේ ලේකම්වරයා ද ලංකා කලා මණ්ඩලයේ සහ සාහිත්ය අනුමණ්ඩලයේ සාමාජිකයන් කිහිප දෙනෙකුද රේගු අධ්යක්ෂක ජෙනරාල්වරයා සහ සහාකාර අධ්යක්ෂකවරයෙකු ද සහභාගි විය. ( සංස්කෘතික ඇමතිවරයා සාකච්ඡාව මගදී වෙනත් රාජකාරියක් සඳහා ඉන් ඉවත් ව ගියේය)
ලේඛක දීපචෙල්වන්ගේ කෘති හතරක් පිළිබඳ ප්රශ්න පවතින බව රේගුව පාර්ශවයෙන් දැනගන්නට ලැබුණු අතර එය නිදහස් කිරීම පිළිබඳ නිශ්චිත තීන්දුවකින් තොරව සාකච්ඡාව අවසන් කරන ලදී. ලේඛකයා වෙනුවෙන් අපට කතා කිරීමට ඉඩ ලැබුණේ ඉතා ටික වේලාවකි. රජය වෙනුවෙන් කතා කළ සාහිත්ය සහ කලා මණ්ඩලවල සාමාජිකයන් මේ කෘති පිළිබඳව ඔවුන්ගේ අදහස් දක්වන වාර්තාවක් සකස් කර ඇති බවද එය රේගුව වෙත ඉදිරිපත් කරන බව ද එය ප්රසිද්ධ කිරීමට අදහසක් නැති බව ද දන්වන ලදී. කෘති නිදහස් කිරීම පිළිබඳ තීන්දුව ගනු ලබනු ඇත්තේ ඉන්පසුවය. ඊට ද දිනයක් දැනගන්නට නොලැබිණි.
ඊයේ සිට කිලිනොච්චියේ සිට පැමිණි දීපචෙල්වන් හිස් අතින් ගෙදර ගියේය.
නැවත නැවතත්, අපට ලැබී ඇති භාෂණයේ සහ ප්රකාශනයේ නිදහස පිළිබද සීමා මායිම් දැනගෙන තදබල මානසික විඩාවකින් අපිදු ගෙදර ආවෙමු.
එපමණි. බොහෝ දේ ලිවීමට ඇතත් පසුවට කල් තබමි.
වැඩිදුර විස්තර දීපචෙල්වන් වෙනුවෙන් අද එහි එක්වූ ලේඛක සහ සමාජ ක්රියාකාරීන් පිරිසෙහි පොදු ස්ථාවරය පිළිබඳ ප්රකාශයක් ලෙස පසුව ඉදිරිපත් කෙරෙනු ඇත.
Kathyana Amarasinghe
Theepachelvan Piratheepan