Tamilradio.lk

Tamilradio.lk உலக தமிழர்களின் உண்மைக் குரல் .lk Tamilradio.lk

நுவரெலியாவில் இடம்பெறும் தேசிய வெசாக் வாரம்-2025
12/05/2025

நுவரெலியாவில் இடம்பெறும் தேசிய வெசாக் வாரம்-2025

தமது முன்னால் தலைவரும் சிறையில்!! பொலிசாருக்கு சோதனைக்கு மேல் சோதனை!!யாழில் முக்கிய கட்சிகளின் வேட்பு மனு நிராகரிப்பு!  ...
20/03/2025

தமது முன்னால் தலைவரும் சிறையில்!! பொலிசாருக்கு சோதனைக்கு மேல் சோதனை!!யாழில் முக்கிய கட்சிகளின் வேட்பு மனு நிராகரிப்பு!

தேசபந்துவும் பொலிசும் !! மஹிந்தவுக்கு வந்த சோதனை!!
19/03/2025

தேசபந்துவும் பொலிசும் !! மஹிந்தவுக்கு வந்த சோதனை!!

பெண்வைத்தியர் மீது பாலியல் அத்துமீறல்!!
11/03/2025

பெண்வைத்தியர் மீது பாலியல் அத்துமீறல்!!

"மயில் போல பொண்ணு ஒன்னுகிளி போல பேச்சு ஒன்னு"-ஆழ்ந்த இரங்கல்கள் பவதாரணி-
25/01/2024

"மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு"
-ஆழ்ந்த இரங்கல்கள் பவதாரணி-

Tamil Film: " BHARATHI"Starring : Song: mayil pola ponnu onnu...kili pola pechchu onnu....

20/12/2023
05/06/2022
11/05/2022

#மாஸ்டர் #சிவலிங்கம் எனும் இமாலய கலைச்சக்கரவர்தி மெளனித்து கொண்டார்
#இரத்தினம் #சிவலிங்கம்

மாஸ்டர் சிவலிங்கம் என அழைக்கப்படும் இரத்தினம் சிவலிங்கம் (பிறப்பு: 28 மார்ச் 1933) ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர்.

#மாஸ்டர் #சிவலிங்கம்
1) பிறப்பு - இரத்தினம் சிவலிங்கம்
மார்ச்சு 28, 1933 (அகவை 89)
மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு, இலங்கை

2) இருப்பிடம் - உப்போடை, கல்லடி, மட்டக்களப்பு

3) தேசியம் - இலங்கைத் தமிழர்
பணி - கதை சொல்லுபவர், வில்லிசைக் கலைஞர்

4) பெற்றோர் - இரத்தினம், செல்லத்தங்கம்

5) வாழ்க்கைத் துணை- மங்கையர்க்கரசி

★வாழ்க்கைக் குறிப்பு

மாஸ்டர் சிவலிங்கம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மஞ்சந்தொடுவாய் என்ற ஊரில் இரத்தினம் ஆசிரியருக்கும், செல்லத்தங்கம் என்பவருக்கும் 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்தார் சிவலிங்கம். சென் மேரீசு பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உப்போடை என்ற ஊரில் வசித்து வருகிறார். ஐம்பது ஆண்டுகளாக சிறுவர் கதைகள் சொல்லும் பணியையே அவர் தொழிலாகக் கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையில் கதை சொல்லும் கலைஞனாகவும் பணியாற்றியிருந்தார்.சென்னை சந்தனு கலைக்கல்லூரியில் ஓராண்டு கார்ட்டூன் கலையும், வில்லிசைக் கலையும் படித்திருக்கிறார்.

புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை இவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த சரவணமுத்து மாமாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.அன்றில் இருந்து இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். பின்னர் இலங்கைத் தொலைக்காட்சியிலும் இவரது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கொழும்பில் இருந்து வெளியான தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

மாஸ்டர் சிவலிங்கம் பண்டிதர் பூபாலபிள்ளை என்பவரின் மகள் மங்கையர்க்கரசி என்பவரைத் திருமணம் புரிந்தார்.

★வெளியிட்ட நூல்கள்

பயங்கர இரவு
அன்பு தந்த பரிசு
உறைபனித் தாத்தா
சிறுவர் கதை மலர்

★விருதுகள்

1) வடகிழக்கு மாகாண சபையின் சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய மண்டலப் பரிசு (1984-1991)
2) அன்பு தந்த பரிசு என்ற சிறுவர் இலக்கியத்துக்காக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2013 தமிழியல் விருதும் ரூ.15,000 பரிசும்

★பட்டங்கள்

1) நகைச்சுவைக் குமரன் - புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை வழங்கிய பட்டம்

2) வில்லிசைச் செல்வன் - வித்துவான் பண்டிதமணி வி. சீ. கந்தையா வழங்கிய பட்டம்

3) அருட்கலைத் திலகம் - கிருபானந்த வாரியார் வழங்கியது

3) வில்லிசைச் செல்வர் - அமைச்சர் செ. இராசதுரை வழங்கியது

4) கலாபூஷணம் - இலங்கை கலாசார அமைச்சு

5) கலைக்குரிசில் - மட்டு இந்து சமய அபிவிருத்தி சங்கம்

6) சிறுவர் இலக்கியச் செம்மல் - கொழும்பு தமிழ்ச் சங்கம்
இவ்வாறான இலக்கிய கலை யாம்பவானின் இழப்பானது கலை உலகிற்கு மீள்நிரப்ப முடியாதது

கலையரசர் மாஸ்டர் சிவலிங்கம் ஐயா அவர்களது ஆத்மா கலைத்தாயிடம் சேர்ந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை

யனோபன் பண்டரிநாதன்
நிறுவகர் & பிரதம நிறைவேற்று அதிகாரி
விருட்சம் அரங்க படைப்பாளிகள்
களுவாஞ்சிகுடி
மட்டக்களப்பு

11/05/2022

மட்டக்களப்பின் தனித்துவ அடையாளங்களில் ஒருவரான மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய தமிழ்ரீவி குழுமத்தின் பிரார்த்தனைகள்

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilradio.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share