Ponmaalai pozhuthu - Sooriyan fm

Ponmaalai pozhuthu - Sooriyan fm This is love Zone
(our access code is FM 103.6/103.4)

ஏதேதோ நினைவுகள் நெஞ்சம் நிறைத்திருக்க,காதல் வலி மட்டும் உள்ளம் உருக்கி நிற்க,தேடலும், துயரும் மட்டுமே தம் நிலையென்றாக நி...
27/03/2022

ஏதேதோ நினைவுகள் நெஞ்சம் நிறைத்திருக்க,
காதல் வலி மட்டும் உள்ளம் உருக்கி நிற்க,
தேடலும், துயரும் மட்டுமே தம் நிலையென்றாக நினைத்திருக்கும் காதலான உறவுகளோடு இன்றும் காற்றலை கதை பேசும் இருமணிநேரம்....
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

ஈரிரு விழிகளின் ஈர்ப்பில் இதயங்கள் கட்டுண்ட நொடியில் காதலாகிக் கசிந்துருகிய இதயங்கள், காலம் செய்த கோலத்தால் கலங்கும் உள்...
20/03/2022

ஈரிரு விழிகளின் ஈர்ப்பில் இதயங்கள் கட்டுண்ட நொடியில் காதலாகிக் கசிந்துருகிய இதயங்கள், காலம் செய்த கோலத்தால் கலங்கும் உள்ளத்தின் தவிப்போடு காற்றலையை துணைக்கு அழைத்து இணைந்திடும் இருமணிநேர மாலைப்பொழுது....
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

காதல் தந்து கடந்துபோன உறவின் தூரம் இன்னும் தொலைவானதால் துயர் சுமக்கும் இதயங்களின் வலியை இசையும் கவியும் இணைந்து சொல்லும்...
13/03/2022

காதல் தந்து கடந்துபோன உறவின் தூரம் இன்னும் தொலைவானதால் துயர் சுமக்கும் இதயங்களின் வலியை இசையும் கவியும் இணைந்து சொல்லும் இருமணிநேரம் இன்றும் மாலையில்...!
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

எண்ணங்கள் ஏதேதோ கனவுகளில் திளைத்திருக்க... உள்ளமோ உயிர்கொண்ட காதல் வலி உணர்ந்திருக்க... நேசம் தந்து தொலைவான உறவின் நினைவ...
06/03/2022

எண்ணங்கள் ஏதேதோ கனவுகளில் திளைத்திருக்க... உள்ளமோ உயிர்கொண்ட காதல் வலி உணர்ந்திருக்க... நேசம் தந்து தொலைவான உறவின் நினைவு சுமந்து.. காற்றலையைத் தன் தனிமைக்குத் துணையழைத்துக் காத்திருக்கும் சொந்தங்களோடு கதைபேச......!!!🥰🥰

கசியும் விழிநீர் தலையணைக்குள் ஒளித்துக்கொள்ள..வாழும் நாட்களும், காத்திருக்கும் காலமும் காதல் தந்த உறவுக்காகவே என்று நித்...
27/02/2022

கசியும் விழிநீர் தலையணைக்குள் ஒளித்துக்கொள்ள..
வாழும் நாட்களும், காத்திருக்கும் காலமும் காதல் தந்த உறவுக்காகவே என்று நித்தம் மூளையோடு யுத்தம் நடத்தும் மனம் கொண்ட உள்ளங்களோடு இன்றும் கவியும் கானங்களும் கதைபேசும் இருமணிநேரம்...
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

கனவுகளில் ஆயிரம் வண்ணங்கள் சேர்த்து, இதயத்தில் வாழ்வின் எண்ணங்கள் கோர்த்து, ஊடலால் வந்த தேடல் தினம் தொடர்கதையாய்ப்போன உள...
20/02/2022

கனவுகளில் ஆயிரம் வண்ணங்கள் சேர்த்து, இதயத்தில் வாழ்வின் எண்ணங்கள் கோர்த்து, ஊடலால் வந்த தேடல் தினம் தொடர்கதையாய்ப்போன உள்ளங்களோடு இசையாய், கவியாய் இதமாய்க் கதைப்பேச இன்றும் இருமணிநேரம்....
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

தேடித் தேடி விழி பூத்துப்போக....தீராது தொடரும் கண்ணீர் வழிந்தோட...வாழ்வின் கனவுகள் கோடி சுமந்து உள்ளம் வலி காண, காற்றலைய...
13/02/2022

தேடித் தேடி விழி பூத்துப்போக....
தீராது தொடரும் கண்ணீர் வழிந்தோட...
வாழ்வின் கனவுகள் கோடி சுமந்து
உள்ளம் வலி காண, காற்றலையைத் தூதனுப்பக் காத்திருக்கும் நெஞ்சங்களோடு இன்றும் கவியும் கானங்களும் சங்கமிக்கும் இருமணிநேரம்....
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

எண்ணங்கள் நேசம் தந்து விட்டுச் சென்ற உறவின் பின் செல்ல.. உள்ளமோ உயிரான உறவின் நினைவில் கலந்திருக்க.. நீளும் நாட்களின் எத...
06/02/2022

எண்ணங்கள் நேசம் தந்து விட்டுச் சென்ற உறவின் பின் செல்ல.. உள்ளமோ உயிரான உறவின் நினைவில் கலந்திருக்க.. நீளும் நாட்களின் எதிர்காலக் கனவுகளில் நெஞ்சம் நிறைத்துக் காத்திருக்கும் காற்றலைக் சொந்தங்களோடு இன்றும்......
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

உள்ளம் மறைக்கும் காதலை உயிரோடு சுமந்து, உணர்வு காணும் வலியால் வழியும் விழிநீர் மறைத்து, கனவுகளும் காத்திருப்பும் தொடர் க...
30/01/2022

உள்ளம் மறைக்கும் காதலை உயிரோடு சுமந்து, உணர்வு காணும் வலியால் வழியும் விழிநீர் மறைத்து, கனவுகளும் காத்திருப்பும் தொடர் கதையாகிப்போன உறவுகளோடு மெல்லக் கதை பேசும் இதமான மாலையில், இன்றும் இருமணிநேரம்.....!
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

கண்களில் தேக்கிய கனவுகள் உள்ளத்தை உருக்க, நெஞ்சத்தில் நிறைந்த காதல் நினைவுகளில் கலக்க, காத்திருப்பு எனும் ஒன்றே வாழ்க்கை...
23/01/2022

கண்களில் தேக்கிய கனவுகள் உள்ளத்தை உருக்க, நெஞ்சத்தில் நிறைந்த காதல் நினைவுகளில் கலக்க, காத்திருப்பு எனும் ஒன்றே வாழ்க்கையாகிப்போன உறவுகளோடு கவியோடு இணைந்த கானங்கள் காதல் பேசும் மாலையில் இருமணிநேரம்.....
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

கனவுகள் ஆயிரம் கண்களில் சுமந்து, விழிகளில் கசியும் துளிநீர் மறைத்து, வேதனை கொண்ட நெஞ்சத்தின் வலியை உள்ளே மறைத்து வெளியே ...
16/01/2022

கனவுகள் ஆயிரம் கண்களில் சுமந்து, விழிகளில் கசியும் துளிநீர் மறைத்து, வேதனை கொண்ட நெஞ்சத்தின் வலியை உள்ளே மறைத்து வெளியே சிரித்து காத்திருப்பு ஒன்றே வாழ்க்கை என்றாகிப்போன உறவுகளுடன் இன்றும் மாலையில் இசையால் கதை பேச....
"காற்றலையில் காதலுக்காய் ஓர் தூது"
பொன்மாலைப்பொழுது🥰🥰

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ponmaalai pozhuthu - Sooriyan fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ponmaalai pozhuthu - Sooriyan fm:

Shortcuts

Share

Category