Today Ceylon

Today Ceylon வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு
(1)

26/07/2025

Home Local news நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை Author - TODAYCEYLON July 26, 2025 0  மத்திய ,சப்ரகமுவ ...

26/07/2025

ஜெரோமிடம் சென்ற முஸ்லிம் பெண் நேரடி வாக்குமூலம்
யா அல்லாஹ் என்னை மன்னித்து விடு!
நான் அந்த பொய்யனை நபியென நம்பவில்லை

பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் பலி!இந்தியாவின் ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்...
25/07/2025

பாடசாலை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் பலி!

இந்தியாவின் ராஜஸ்தானில் பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜஸ்தானின் - ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையில் இன்று (25) காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்ததாகவும் இது தொடர்பாக முன்னர் பல முறைப்பாடுகள் வந்திருந்த நிலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25/07/2025

Home Local news ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி விடுதலையான அதுல திலகரத்னவுக்கு 7 வருட கடூழியச்சிறை ஜனாத...

25/07/2025

#தாயை_திட்டியதால்_கோபப்பட்டு_வெளியே_போனான்_மகன்..

#தனது_தாயின்_கண்ணத்தில்கை_வைத்ததால் மீண்டும் வந்து குறித்த பெண்னை புறட்டி எடுத்த நபர். அம்மாக்கு ஏசினாலே 10 கிலோ சுத்தயலால முள்ளந்தண்டை உடைக்க நினைக்கும் நமக்கு ..கண் முன்னே அடிச்சா எப்படி இருக்கும்...

25/07/2025

Home Local news Ambulance சேவையின் கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை Ambulance சேவையின் கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம.....

25/07/2025

Home Local news பொத்துவில் அறுகம்பேயில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை பொத்துவில் அறுகம்பேயில் உள்ள உணவகங்களில் திடீர் ...

Education
25/07/2025

Education

இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப் பொரி விற்பனை நிலையங்கள் மீது    திடீர் பரிசோதனை – சுகாதாரமற்ற உண...
25/07/2025

இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப் பொரி விற்பனை நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை – சுகாதாரமற்ற உணவுகள், தூய்மையற்ற பாத்திரங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன.

பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாட் மற்றும் உணவு மருந்து பரிசோதகர் ஜீவ ராஜா ஆகியோரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாட் முஸ்தபா, மேற்பார்வை சிரேஸ்ட பொதுச் சகாதார பரிசொதகர் பைலான் நளீம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவுநேர துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் கிழங்குப் பொரி விற்பனை நிலையங்கள் வியாழக்கிழமை(24) மாலை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் விசேட பொதுச் சுகாதார பரிசோதகர் சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் நான்கு குழுக்களாக இணைந்து நடத்திய இச்சோதனையில் 39 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இந்த பரிசோதனையின் போது மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட , சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தூய்மையற்ற பாத்திரங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஷீரும் கலந்து கொண்டார்.

பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  மூவர் காயமடைந்து ...
25/07/2025

பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள்64,58,22 வயதுடைய பதுளை பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து ஒக்கம்பிடி பகுதிக்கு தான நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் பதுளைக்கு திரும்பும் போது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கார் விபத்துக்குள்ளாகும் போது காரில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தனராஜா டிமேஷன்

இலங்கை முன்னாள் பிரபல அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்!கல்லோயா மற்றும் மஹாவலி அபிவிருத்தி திட்டங்களின் முன்னோடியாக திகழ்ந்த...
25/07/2025

இலங்கை முன்னாள் பிரபல அமைச்சர் பி.தயாரத்ன காலமானார்!

கல்லோயா மற்றும் மஹாவலி அபிவிருத்தி திட்டங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

89 வயதில் இன்று காலமானார்.

25.07.2025

Address

Colombo
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when Today Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Ceylon:

Share