Vaan Malai Media

Vaan Malai Media Media Vision

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்புகாத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று ...
04/07/2025

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-வான் மழை news-

04/07/2025

பேருந்து கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 0.55 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
-வான் மழை news-

கடந்த அரசாங்களின் போது அமைச்சராக பதவி வகித்த S.M.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக்குழு...
04/07/2025

கடந்த அரசாங்களின் போது அமைச்சராக பதவி வகித்த S.M.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக்குழுவால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமான செயற்பட்ட அரசியல்வாதிகளில் இருவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-வான் மழை news-

04/07/2025

இலங்கை கிரிக்கட் துறையின் ஜாம்பவான்களாக போற்றப்படும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் மீது தீவிர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னிலை சோசலிச கட்சியினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

விடத்தல்தீவு பிரதேசத்தில் சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோர் சுற்றுச் சூழலுக்கு பாதகம் ஏறப்டுத்தக் கூடிய வகையில் சுமார் 400 ஏக்கர் காணியில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
-வான் மழை news-

04/07/2025

வவுனியா (Vavuniya) நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க (Upali Samarasinghe) தலைமையில் வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
-வான் மழை news-

04/07/2025
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது  அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர்  என்பவர் தலைமையிலான காடையர்கள் நேற்று (...
03/07/2025

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான காடையர்கள் நேற்று (02) இரவு தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா என்பவரும், இன்னுமிருவரும் மப்றூக் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே, மப்றூக் மீது றியா மசூர் என்பவர் தாக்குதல் நடத்தியதாக, தனது பொலிஸ் முறைப்பாட்டில் மப்றூக் கூறியுள்ளார்.
-வான் மழை news-

03/07/2025

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வான் மழை news-

காசாவில் யுத்த நிறுத்தம்?அமெரிக்கா ஜனாதிபதியினால் காசாவிற்கு 60 நாள் கொண்ட யுத்த நிறுத்தம் ஒன்றிணை மேற்கொள்ள இஸ்ரேல் மற்...
03/07/2025

காசாவில் யுத்த நிறுத்தம்?

அமெரிக்கா ஜனாதிபதியினால் காசாவிற்கு 60 நாள் கொண்ட யுத்த நிறுத்தம் ஒன்றிணை மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும் ஹமாஸ் இதனை நிராகரித்தால் காசா பெரும் அழிவை சந்திக்கும் எனவும் அமெரிக்கா ஜனாதிபதி எச்சரிக்கை ஒன்றிணையும் விடுத்துள்ளார்.
-வான் மழை news-

எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு அநுர தரப்பு கூறும் காரணம்ஜுன் மாதம் தொடக்கத்திலும் ஜுன் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் அதி...
02/07/2025

எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு அநுர தரப்பு கூறும் காரணம்

ஜுன் மாதம் தொடக்கத்திலும் ஜுன் மாத இறுதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பே எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஏதுவானது என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நடைமுறையே பின்னபற்றப்படுகிறது. மாதத்தின் தொடக்கத்தில் விலை குறைவடைந்தால் அதன் பலனை மாத இறுதியில் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறே விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அரசாங்கத்தில் இறக்குமதியின் போது ஏற்படுத்தப்பட்ட மோசடி இன்றும் எம்மை பின் தொடந்து வருகிறது.

அவர்கள் சென்றாலும் அவர்களால் எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் ஏற்படுத்தப்பட்ட நட்டத்தை நாம் சரி செய்யும் போது இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-வான் மழை news-

02/07/2025

இப்படியும் ஓன்று இருக்குது....

இலங்கைக்கு சொந்தமான தீவுகள் 90 இருக்கிறது.

இலங்கை ஒரு தீவு என்றாலும், நம் நாட்டைச் சுற்றி பல சிறிய தீவுகள் உள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான குடியிருப்புகள் கூட உள்ளன. அவற்றில் சிலவற்றை நீங்கள் பார்வையிடலாம்.

இன்று நாம் இலங்கையைச் சேர்ந்த தீவுகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

இதில், உங்களுக்கு தீவின் பெயர் மற்றும் தீவு எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் மிகப்பெரிய தீவு மன்னார் தீவு, மற்றும் மிகச்சிறிய தீவு கக்குதீவு ஆகும். மன்னார் தீவு 130 கிமீ பெரியது, அதே சமயம் கக்குதீவு 0.01 கிமீ பெரியது.

1) அம்பாந்ததீவு தீவு - புத்தளம்
2) அனலைதீவு தீவு - யாழ்ப்பாணம்
3) ஆவாரம்பட்டித்தீவு - கிளிநொச்சி
4) பார்பெரின் தீவு - காலி
5) எலும்பு தீவு - மட்டக்களப்பு
6) எருமை தீவு - மட்டக்களப்பு
7) சேப்பல் தீவு - திருகோணமலை
😎 சிறுதீவு தீவு - யாழ்ப்பாணம்
9) கிளப்பன்பர்க் தீவு - திருகோணமலை
10) டெல்ஃப்ட் தீவு - யாழ்ப்பாணம் ✅
11) யானைத்தீவு - திருகோணமலை
12) எலிசபெத் தீவு - திருகோணமலை
13) எழுவைதீவு தீவு - யாழ்ப்பாணம்
14) டச்சு விரிகுடாவில் உள்ள எருமைதீவு தீவு (எரமுதீவு . எரமதிவு) - புத்தளம்
15) எருமத்தீவு (1) தீவு - கிளிநொச்சி
16) கல்கொடியன தீவு - மாத்தறை
17) கன் துவா தீவு - மாத்தறை
18) கிரேட் பாஸ்ஸ் ரீஃப் - ஹம்பாந்தோட்டை
19) ஹேனாதீவு (ஹவடிவு) தீவு - புத்தளம்
20) இப்பந்தீவு தீவு (டச்சு விரிகுடாவில்) - புத்தளம்
21) இரணைதீவு வடக்கு தீவு - கிளிநொச்சி
22) இரணைதீவு தெற்கு தீவு - கிளிநொச்சி
23) கச்சத்தீவு - யாழ்ப்பாணம்
24) காகதீவு தீவு - புத்தளம்
25) காக்கரதீவு தீவு - யாழ்ப்பாணம்
26) காக்கத்தீவு தீவு - கிளிநொச்சி
27) கல்லியடித்தீவு - மன்னார்
28) கனந்திதீவு தீவு - யாழ்ப்பாணம்
29) கன்னத்தீவு - யாழ்ப்பாணம்
30) கரடித்தீவு - புத்தளம்
31) காரைதீவு தீவு (கல்பிட்டி வடக்கு முனை) - புத்தளம்
32) காரைதீவு தீவு (காரைநகர்) - யாழ்
33) காரைதீவு தீவு (புங்குடுதீவு) - யாழ்
34) காரைதீவு தீவு மற்றும் பட்டலங்குண்டுவ - புத்தளம்✅
35) ஊர்காவற்துறை தீவு - யாழ்ப்பாணம்✅
36) கிளாச்சித்தீவு - மன்னார்
37) குறிகட்டுவான் தீவு - யாழ்ப்பாணம்
38) குருசடித்தீவு - யாழ்ப்பாணம்
39) லிட்டில் பாஸ்ஸ் ரீஃப் - ஹம்பாந்தோட்டை
40) லிட்டில் சோபர் தீவு - திருகோணமலை✅
41) மண்டைதீவு தீவு - யாழ்ப்பாணம்
42) சதுப்புநில தீவு - திருகோணமலை✅
43) மன்னார் தீவு - மன்னார்✅
44) மந்தீவு தீவு - மட்டக்களப்பு
45) மந்தீவு தீவு - யாழ்ப்பாணம்
46) மந்தீவு தீவு (புத்தளம்) - புத்தளம்
47) மரிப்புடுதீவு தீவு - புத்தளம்
48) மட்டுத்தீவு - புத்தளம்
49) நதித்தீவு - திருகோணமலை
50) நடுதுரிட்டி தீவு - யாழ்ப்பாணம்
51) நயினாதீவு (நாகதீபா) தீவு - யாழ்ப்பாணம்✅
52) நசுவன்தீவு தீவு - மட்டக்களப்பு
53) நெடுந்தீவு தீவு (புத்தளம் தடாகம்) - புத்தளம்
54) நெகியான்பிட்டிதீவு தீவு - யாழ்ப்பாணம்
55) நில்வெல்ல தீவு - மாத்தறை✅
56) நோர்வே தீவு - திருகோணமலை
57) ஒட்டகரென்தீவு தீவு - புத்தளம்
58) பாலைதீவு தீவு - யாழ்ப்பாணம்
59) பாலதீவு தீவு - கிளிநொச்சி
60) பரேவி துவா - மாத்தறை
61) பரிதித்தீவு - யாழ்ப்பாணம்
62) பெரிய அரிச்சல் தீவு - புத்தளம்
63) பெரியதீவு தீவு - மட்டக்களப்பு
64) பெரியதீவு தீவு - புத்தளம்
65) புறா தீவு - திருகோணமலை✅
66) தூள் தீவு (காக்கை தீவு) - திருகோணமலை✅
67) புளியந்தீவு தீவு - மட்டக்களப்பு
68) புளியந்தீவு தீவு - யாழ்ப்பாணம்
69) புளியந்தீவு தீவு - மன்னார்
70) புல்லுப்பிட்டி தீவு - புத்தளம்
71) புங்குடுதீவு தீவு - யாழ்ப்பாணம்
72) பூவரசந்தீவு தீவு - யாழ்ப்பாணம்
73) சுற்று தீவு - திருகோணமலை
74) சல்லித்தீவு - மட்டக்களப்பு
75) சல்லியம்பிடி தீவு - புத்தளம்
76) சீனிகம தேவாலய தீவு - காலி✅
77) சேரைத்தீவு தீவு - மட்டக்களப்பு
78) சின்ன அரிச்சல் தீவு - புத்தளம்
79) டச்சு விரிகுடாவில் உள்ள சின்ன எருமைதீவு தீவு - புத்தளம்
80) சிறியதீவு தீவு - மட்டக்களப்பு
81) மென்மையான தீவு - திருகோணமலை
82) சோபர் தீவு - திருகோணமலை✅
83) சோமதிதீவு - புத்தளம்
84) தப்ரோபேன் தீவு - மாத்தறை
85) துருத்துப்பிட்டி தீவு - யாழ்ப்பாணம்
86) உடையூர்புதி தீவு - புத்தளம்
87) உறைதீவு - யாழ்ப்பாணம்
88) வெல்ல தீவு - புத்தளம்
89) யாக்கினிகே துவா - மாத்தறை
90) யோர்க் தீவு - திருகோணமலை
91) பர்பரியன் தீவு - பேறுவலை

இந்த குறிப்பேடு ✅ அடையாளம் அடிக்கடி சுற்றுலா பயணிகள் செல்லும் தீவுகள். செல்வதற்கு அனுமதி பெற வேண்டும்.
-வான் மழை news-

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaan Malai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share