07/10/2026
உள்நாட்டு செய்தி
****************
‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கு கணனிமயமாக்கப்பட்ட டொமோகிராபி ஸ்கேன் (CT Scan) இயந்திரம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்டதாகவும்,குறித்த தொகையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இயந்திரம் வழங்கப்படவில்லை என்னும் நிலையில், அரச நிதியை குற்றவியல் முறையில் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் பொது சொத்து சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு இன்று (07) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனைதொடர்ந்து, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
🇱🇰