27/09/2025
🛑 #மாணவர்களின்_போதைப்பொருள் #பாவனையைக்_கட்டுப்படுத்த #பாடசாலைகள்_பொருத்தமான #பொறிமுறையை_அமுல்படுத்த #வேண்டும்_!
ஆக்கம் ✍️
ந.சந்திரகுமார் SLPS
எமது நாட்டில் அண்மைக்காலமாக மாணவர்கள் இடையே போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமை கவலை அளிக்கிறது.
மாணவர்கள் மத்தியில் புகையிலை சார்ந்த பொருட்கள்,போதை மாத்திரை, போதைப்பொருள் கலந்த பாக்கு,போதை சுவிங்கியம், இலத்திரனியல் சிகரெட் போன்ற வடிவங்களில் ஆரம்பநிலை போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகிறது.
பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பின்வரும் கண்காணிப்பு பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
1) பாடசாலை ஒழுங்கற்ற வரவு மற்றும் பாடசாலைக்கு முந்தி வந்து, தாமதித்து வீடு செல்லும் மாணவர்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.
2) இடைவேளை தவிர்ந்த ஏனைய பாடவேளைகளில் அடிக்கடி வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.
3) பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வெளியே செல்லும் மாணவர்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.
4) மாணவர்களின் வாய்க்குழி, பெருவிரல், ஆட்காட்டி விரல் போன்ற வற்றை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
4) கண்கள் சிவந்திருக்கும், வகுப்பறையில் தூங்கும், அதிகளவு வியர்க்கும், அடிக்கடி நீர் அருந்தும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.
5) திடீரென தவணை பரீட்சை புள்ளிகள் குறையும், கற்றலின் ஆர்வமின்றி உள்ள மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.
6) எழுந்தமானமாக மாணவர்களின் புத்தகப்பைகளை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
7) வகுப்பறையில் உள்ள கழிவு கூடைகளை எழுந்தமானமாக பரிசோதித்து, சந்தேகத்திற்கு இடமான ஈயத்தாள், மருந்து உட்புகுத்தி, Brand பெயர் இல்லாத டோபி உறை காணப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்.
😎 இடைவேளை நேரத்தில் பாடசாலை மதிலுக்கு வெளியே நடமாடும் நபர்களை கண்காணிக்க வேண்டும்.
9) ஐஸ் கிரீம், ஐஸ் பழம்,வேறு தின்பண்டங்களை மாணவர்களுக்கு வியாபாரிகள் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.
10) பாடசாலைகளில் மாணவர்களின் பிறந்தநாள் விழாக்களை தடை விதிக்க வேண்டும்.
11) கல்லூரி தினம்,வாணிவிழா, ஒளி விழா போன்ற மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் மது விருந்து/போதை விருந்து நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடசாலைகளில் மாணவர்களின் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
1) 5-10 பதின்ம வயது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை மாணவர் வழிப்படுத்துநராக(Student Mentor) நியமித்தது, மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்.
2) ஆசிரியர்களும் அதிபர்களும்
எந்தவொரு போதைப்பொருளையும் நுகராமல் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
3) போதைப்பொருள் வகைகள் தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்காது, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4) போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஓவியப் போட்டி, கவிதை கட்டுரை, சிறுகதை போட்டி,வீதி நாடகம் போன்றவற்றை நடத்த வேண்டும்.
5) போதைப்பொருளைப் பயன்படுத்தும் மாணவர்களை இனங்கண்டு, ஆலோசனை வழிகாட்டல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6) பாடசாலைகளில் மகிழ்ச்சியான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்க வேண்டும்.
7) ஒவ்வொரு மாதமும் வகுப்பு ரீதியாக பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை நடத்தி, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
😎 அனுமதி இல்லாமல் பாடசாலையை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை, உடனடியாக , கண்டுபிடிக்க 119 அவசர பொலிசாரின் உதவியைப் பெற வேண்டும்.
9) பாடசாலை கட்டாய வரவுக்குழுவின் உதவியுடன் பாடசாலைக்கு வரவு ஒழுங்கீனமான மாணவர்களை கண்டு பிடித்து பாடசாலைக்கு தினமும் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பு: ஆசிரியர்கள்,சட்டத்தரணிகள்,வைத்தியர், பொறியியலாளர் பெயரில் மதுபானம் விற்பனை செய்வது எமது சமூகத்தின் சாபக்கேடு.
thans internet news