True Ceylon News

True Ceylon News First & Fastest Online Tamil News

28/08/2026

"இயக்கம் வளர்த்த தேக்கு மரக்காடு - இப்போது எப்படி உள்ளது"

08/08/2026

🇱🇰🇱🇰ராகலையில் பதற்றம்🇱🇰🇱🇰

ராகலை - மல்லிகைப்பூ தோட்டத்திலுள்ள அம்மன் ஆலயத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய நேற்றிரவு, வேறொரு பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்துள்ள நிலையில், அந்த பகுதியில் நேற்றிரவு முழுவதும் பதற்றமாக சூழ்நிலை நிலவியுள்ளது. (News with ARUN)

செய்திகளை உடனுக்குடன் அறிய :- https://chat.whatsapp.com/JS91VOZ0ksm1ZX9vNM3zc6?s=cl&p=a&mlu=4

l l l l l l

04/08/2026

நாவலப்பிட்டி - ராக்ஸாவ தோட்டம் தித்வா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி.

இங்கு வாழும் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் கடந்த 9 மாத காலமாக முகாம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதுடன், முகாமிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தோட்ட முகாமைத்துவம் வலியுறுத்தி வருகிறது.

இந்த மக்கள் மீது தோட்ட முகாமைத்துவம் சில வழக்குகளை பதிவு செய்துள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கிறனர்.

இவ்வாறான சூழ்நிலையில், மீண்டும் இந்த மக்கள் தற்போது பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். (News with ARUN)

செய்திகளை உடனுக்குடன் அறிய Whatsapp குழுவுடன் இணையுங்கள் :- https://chat.whatsapp.com/JS91VOZ0ksm1ZX9vNM3zc6?s=cl&p=a&mlu=4

l l l l l l

03/08/2026

இந்த இளைஞர்களின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்...

உங்களின் உயிரை பற்றி யோசிக்காது இந்த பெண்ணை காப்பாற்றி உங்களின் மனிதநேயம் போற்றப்பட வேண்டியது...

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய அளவை விடவும் நான்கு மடங்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை நீதி அ...
02/08/2026

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய அளவை விடவும் நான்கு மடங்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை நீதி அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையிலுள்ள 37 சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களில் 10,801 கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்க முடியும் என்ற நிலையில், தற்போது சிறைச்சாலைகள் மற்றும் முகாம்களில் 41,114 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

l l l

BREAKING NEWS :- ராகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்...
01/08/2026

BREAKING NEWS :- ராகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைக்கு அனுப்பப்பட்ட ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்கள் மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கண்காணிப்பதற்கா...
01/08/2026

மஹர சிறைக்கு அனுப்பப்பட்ட ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்கள்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கண்காணிப்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ட்ரோன் கமராக்கள் சிறைச்சாலைக்கு மேல் பறக்க விடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவிக்கின்றது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மோதல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன், சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளின் உறவினர்கள் ஏற்படுத்திய அமைதியின்மையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி;விக்கின்றனர்.

மஹர சிறையில் வலுப் பெற்ற மோதல் - புதிய கள நிலவரம் மஹர சிறைச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உ...
01/08/2026

மஹர சிறையில் வலுப் பெற்ற மோதல் - புதிய கள நிலவரம்

மஹர சிறைச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன், சிறைச்சாலைக்குள் தீ பரவியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சிறைச்சாலைக்குள் உள்ள பிரதான அலுவலகங்கள் கைதிகளினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிறைச்சாலைக்கு வெளியில் கைதிகளின் உறவினர்கள் ஒன்று திரண்டுள்ள நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

l l l

BREAKING NEWS :- மஹர சிறைக்குள் துப்பாக்கி சூட்டு சத்தம் மஹர சிறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதாக உறவின...
01/08/2026

BREAKING NEWS :- மஹர சிறைக்குள் துப்பாக்கி சூட்டு சத்தம்

மஹர சிறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

''எங்களுக்கு தெரியாது. எங்கு துப்பாக்கி சூடு நடத்தப்படுகின்றது என்று தெரியாது. அங்கே கேட்கும் சத்தம் தான் எங்களுக்கு கேட்கின்றது."" என சிறைச்சாலை வளாகத்திலுள்ள கைதி ஒருவரின் உறவு முறை பெண் ஒருவர் கூச்சலிடும் வீடியோவை அத தெரண தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் 4 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலைக்குள் உள்ள கைதிகள் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

மோதல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹர சிறைச்சாலைக்குள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மஹர சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இந்த சிறைச்சாலை வளாகத்தில் சிறை கைதிகளின் உறவினர்கள் ஒன்று திரண்டுள்ளதுடன், சிறை வளாகத்திலும் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when True Ceylon News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Ceylon News:

Shortcuts

Share