Malainaadu News

Malainaadu News Malainaadu (மலைநாடு) page shares daily political, cultural and public newses.

மலைநாடு (https://www.facebook.com/Malainaadu/) முகநூல் ஊடாக மலையக மக்களின் அரசியல், கலாசார, பண்பாட்டு, சமூக பொருளாதார தகவல்களை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

10/10/2026

இந்தியா எப்படி வல்லரசாகும்?

10/10/2026

மலையகத்தில் இடி, மின்னலுடன் கனமழை; கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதுடன், பல இடங்களில் கடும் பனிமூட்டமும் நிலவி வருகின்றது.

இதனால் மலையகப் பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக வீதிகளில் பார்வைத்திறன் குறைவடைந்துள்ளதால், வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்குமாறு ஹட்டன் வலய காவல்துறைத் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மண் சரிவு அபாயத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்ச்சியான கனமழை காரணமாக மாவட்டத்தின் பல வீதிகள் வழுக்கும் தன்மையில் காணப்படுவதால், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், கார்கள், வேன்கள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் வேகத்தைக் குறைத்து, பாதுகாப்பான இடைவெளியைப் பேணி பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(மஸ்கெலியா நிருபர்)

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது; சி.அ. யோதிலிங்கம் காலமானார்மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார ...
09/10/2026

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது; சி.அ. யோதிலிங்கம் காலமானார்

மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த தமிழ்த் தேசிய, சிவில் சமூகச் செயற்பாட்டாளர் சி.அ. யோதிலிங்கம் காலமானார்.

ஆய்வுக் கட்டுரைகள் ஊடாக மலையகத் தமிழர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதுடன், அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வந்த இவர், நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் எட்டு மணிநேரம் இடம்பெற்ற இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கிற்கும் மலையகத்திற்கும் இடையிலான சமூக, அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதிலும், மலையகத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் விடுதலை தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பதிலும் பங்களிப்புச் செய்த அவரது மறைவு, சமூக மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இழப்பாகக் கருதப்படுகிறது.

ஹட்டன் பட்டல்கலை தோட்டத்தைச் சேர்ந்த மாணவி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்கிழக்குப் பல்கலைக்கழகத்த...
09/10/2026

ஹட்டன் பட்டல்கலை தோட்டத்தைச் சேர்ந்த மாணவி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஹட்டன் - டிக்கோயா பட்டல்கலை கீழ்ப்பிரிவைச் சேர்ந்த யோகராஜா லாவண்யா கல்வியியல் துறையில் தனது சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இவர், பல்கலைக்கழக மட்டத்தில் கல்வியைத் தொடர்ந்து சிறப்புப் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

09/10/2026

ஹட்டன் - கொழும்பு வீதியில் அடுத்து அடுத்து விபத்து

👉Online visa service 👉online visa✈️Connect US
09/10/2026

👉Online visa service
👉online visa

✈️Connect US

09/10/2026

தன் தாயேன நினைத்து பால் அருந்தும் கன்று - உலகம் அனைத்து உயிர்களுக்குமானது : மனிதன் உணர வேண்டும்

டக்வாரி தோட்டத்தின் முதல் பட்டதாரியாக சாதனை படைத்த ர.சிவரஞ்சனி!கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழ...
09/10/2026

டக்வாரி தோட்டத்தின் முதல் பட்டதாரியாக சாதனை படைத்த ர.சிவரஞ்சனி!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், கண்டி, ரங்கல, டக்வாரியைச் சேர்ந்த ரத்னகுமார் – புவனேஸ்வரி தம்பதியினரின் செல்வப் புதல்வியான ர. சிவரஞ்சனி, கல்வியியல் துறையில் சிறப்பு பட்டத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவர் கல்வியியல் துறையில் கல்விமாணி சிறப்புப் பட்டத்தை (Bachelor of Education – B.Ed. (Hons)) பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை ரங்கல ஆரம்பத் தமிழ்ப் பாடசாலையிலும், தொடர்ந்து ரங்கல தமிழ்மகா வித்தியாலயம் மற்றும் ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரியிலும் பயின்ற இவர், டக்வாரி கிராமத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கல்வியில் விடாமுயற்சியுடன் முன்னேறி, தனது கிராமத்திற்குப் பெருமை சேர்த்துள்ள ர. சிவரஞ்சனிக்கு உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பசறை எல்டப் டைனாவத்த தோட்ட மாணவி யாழ். பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் நுண்கலைமானிப் பட்டம் பெற்று சாதனை!பதுளை மாவட்டம்,...
08/10/2026

பசறை எல்டப் டைனாவத்த தோட்ட மாணவி யாழ். பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் நுண்கலைமானிப் பட்டம் பெற்று சாதனை!

பதுளை மாவட்டம், பசறை பிரதேச சபைக்குட்பட்ட எல்டப் டைனாவத்த தோட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி சலோமியா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் நுண்கலைமானிப் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

எல்டப் டைனாவத்த தோட்டத்தைச் சேர்ந்த கோடிஸ்வரன் – சந்திரவடிவு தம்பதியினரின் மகளான செல்வி சலோமியா, பல்வேறு சவால்களையும் கடந்து, விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் தனது பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து பட்டதாரியாகியுள்ளார்.

தோட்டப்புறச் சூழலில் இருந்து உயர்கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுள்ள அவரது சாதனை, பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, எல்டப் டைனாவத்த தோட்ட மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

கல்வி மற்றும் கலைத்துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள மலையக மாணவர்களுக்கு செல்வி சலோமியாவின் வெற்றி ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. முறையான முயற்சியும் விடாமுயற்சியும் இருந்தால் உயர்கல்வியில் சாதிக்க முடியும் என்பதையும் அவரது கல்விப் பயணம் எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில், நுண்கலைமானிப் பட்டத்தைப் பெற்ற செல்வி சலோமியாவுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் எல்டப் டைனாவத்த தோட்ட மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அவரது எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையவும், கலைத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைத்து சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள பணிகளை முன்னெடுக்கவும் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

08/10/2026

இப்படியும் மாதுபனத்தை கடத்த முடியுமா?
இந்தியாவின் பிஹாரில் நடந்த சம்பவம்

Address

Colombo
22000

Alerts

Be the first to know and let us send you an email when Malainaadu News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malainaadu News:

Shortcuts

Share