Sri Lanka Muslim Media Forum

Sri Lanka Muslim Media Forum Colombo, Sri Lanka Sri Lanka Muslim Media Forum is a registered NGO. (Registration No. It has increased its membership to many folds.

Sri Lanka Muslim Media Forum (SLMMF) commenced its journey with only 34 members on the 09th of June 1995, with a view to bringing together Muslims who are involved in the Print and Electronic Media and also those who are involved in the communication industry in educating, imparting knowledge and training of Media Personnel in the country. L 81104)

Sri Lanka Muslim Media Forum has crossed many milestones and has become one of the strongest organizations in this country.

SLMMF AGM Notice for all members Date  : 27.09.2025 Saturday Time : 9.00am onword Venue : AMANI GRAND BANQUETS & EVENTS2...
08/09/2025

SLMMF AGM Notice for all members

Date : 27.09.2025 Saturday
Time : 9.00am onword
Venue : AMANI GRAND BANQUETS & EVENTS
211 Orabi Pasha Street, Colombo 10.

Chief Guest :
Nalinda Jayatissa
Hon. (Dr.) Nalinda Jayatissa, M.P.
Minister of Health and Mass Media and Chief Government Whip.

Guest of Honour :
His Excellency Khalid bin Hamoud Al-Kahtani Ambassador of Kingdom of Saudi Arabia in Sri Lanka

For your confirmation please.

Sadique Shihan - General Secretary - 0773112561

Irshad A Cader - National Organizer - 0773063561

*ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 30ஆவது ஆண்டு நிறைவு விழா 2025 செப்டம்பர் 27ல்*ஸ்ரீலங்கா முஸ்...
25/08/2025

*ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 30ஆவது ஆண்டு நிறைவு விழா 2025 செப்டம்பர் 27ல்*

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2025.09.27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலக்கம் 211, ஒராபி பாஷா வீதி, மருதானை, கொழும்பு 10ல் உள்ள *AMANI GRAND* மண்டபத்தில்
நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்து லில்லாஹ்!

மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியாளருமான அல்ஹாஜ் என். எம் அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி
பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெறவுள்ளது.

இதற்கமைய முஸ்லிம் மீடியா போரத்தின் அடுத்த ஆண்டுக்கான புதிய நிறைவேற்று குழுவின் தலைவர் பதவிக்காக எம் பீ எம் பைரூஸ், இர்ஷாட் ஏ காதர், எம் எப் ரிபாஸ் மற்றும் ரிப்தி அலி ஆகிய நால்வரும் பொதுச்செயலாளர் பதவிக்காக எம். எஸ் பாஹிம், என் ஏ எம் ஸாதிக் ஷிஹான் மற்றும் ஸமீஹா சபீரும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளராக கியாஸ் ஏ புஹாரி போட்டியின்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று குழுவுக்கு 15 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் இதற்கான தெரிவும் பொதுக்கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம் பெறும் என நியமனக்குழு அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று குழுவிற்கு போட்டியிடுவோர் விபரம் பின்வருமாறு :-

என். ஆஷிக் முஹம்மத்,
கே. அப்துல் ஹமீத், ஏ. பி. அப்துல் கபூர்,
எம். அப்துர் ரஹ்மான், அஷ்ரப் ஏ ஸமத், அதீபா தௌஸீர், கே. அஸீம் முஹம்மத், எஸ். எல். அஸீஸ், பரீட் இக்பால், எம். எப். எம். பர்ஹான், எஸ். ஏ. எம். பவாஸ், ஏ. எச். எம். பௌஸான், ஏ. புஹாது, ஐ. எம். இர்ஷாத், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், யு. எல் மப்ரூக், எம். ஐ. முஹம்மத் ரியாஸ், எஸ். எம். எம். முஸ்தபா, பீ எம் முர்ஷிடீன், எம். ஏ. எம். நிலாம், எம். ஐ. நிஸாம் டீன், ஏ. எல். ஏ. ரபீக் பிர்தௌஸ், ஏ. கே. எம். ரம்ஸி, ஏ சி ரிஸாத், ரிஸ்வான் சேகு மொஹிடீன், எம் எஸ் எம் ரிஸ்வான், ஷிஹார் அனீஸ், எஸ். என். எம். சுஹைல் மற்றும் உமர் அரபாத்

நீர்கொழும்பில் விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்று கூ...
21/08/2025

நீர்கொழும்பில் விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் (SLMMF), பலகத்துறை கலை இலக்கிய வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்றுகூடல் 2025 ஆகஸ்ட் (18) ஞாயிற்றுக்கிழமை, நீர்கொழும்பு, போருதொட்ட அல் பலாஹ் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது .

காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்த ஒன்று கூடல் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெற்றது .

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான கலாபூஷணம் எம் ஏ எம் நிலாமின் விஷேட ஏற்பாட்டில் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் , தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் ஆகியோரின் பங்களிப்புடன்நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளப்பட்டதுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது மாவட்டத்திற்கு தனியான ஊடாக அமைப்பு ஒன்று தேவையென வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைய கம்பஹா மாவட்ட மீடியா போரமும் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்கமைய கம்பஹா மாவட்ட மீடியா போரத்தின்
தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். ஏ. எம். நிலாமும்
செயலாளராக பியாஸ் மொஹம்மதும் பொருளாளராக ஏ எச் எம் பௌஸானும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே.எம். தாஜூத்தீன் உட்பட 11பேர் தெரிபு செய்யப்பட்டனர்.

இந்த ஒன்று கூடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான எம் எப் றிபாஸ், உப செயலாளர் சமீஹா சபீர், முன்னாள் தலைவி புர்கான் பீ இப்திகார், இணையதள ஆசிரியர் எம் ஐ நிஸாம் டீன், ஊடக இணைப்பாளர் அஷ்ரப் ஏ ஸமத் மற்றும்
மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

SLMMF பின்  கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்று கூடலும் பாடசாலை மாணவர்களுக்கான  ஊடக செயலமர்வும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீ...
21/08/2025

SLMMF பின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்று கூடலும் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் (SLMMF), பலகத்துறை கலை இலக்கிய வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்றுகூடல் மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவ, மாணவிகள், பாடசாலை ஊடக கழகங்களுக்கான ஒருநாள் செயலமர்வும் 2025 ஆகஸ்ட் (18) ஞாயிற்றுக்கிழமை, நீர்கொழும்பு, போருதொட்ட அல் பலாஹ் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது .

காலை 9 மணிக்கு ஆரம்பமான ஊடக பயிட்சிகள் மாலை 4 மணிவரை இடம்பெற்றது .

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என். எம். அமீன் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம். ஜே. எம். தாஜூதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் , இருவேறு அமர்வுகளாக நடைபெற்றது .

பாடசாலை மாணவ, மாணவிகள் மத்தியில் ஊடகம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நவீன உபகரணங்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பாடசாலைகளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பிரதான ஊடகங்களுக்கு அறிக்கையிடல், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பன தொடர்பான வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பது.

விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ், தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ். ஏ. எம். பவாஸ்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்ச்சி திட்டங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர் மற்றும் ஊடக பயிற்றுவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளருமான இஸ்பஹான் ஷர்ப்டீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர் .

இவ் ஊடக பயிற்சி பட்டறையில் கம்பஹா மாவட்டத்தின் தமிழ் மொழி மூலமான 16 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வின் இறுதியில் மாலை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் பிரதம அதிதியாகவும், முன்னாள் தேர்தல் ஆணையர் எம் எம் மொஹம்மட், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பாரிஸ், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பாயிஸ், மீடியா போரத்தின் உப தலைவர்களான எம் ஏ எம் நிலாம் , எம் எப் றிபாஸ்
பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் , தேசிய அமைப்பாளர் இர்ஷாத் ஏ காதர் , உப செயலாளர் சமீஹா சபீர் , உப பொருளாளர் ஏ எச் எம் பாவ்சன் , முன்னாள் தலைவி புர்கான் பீ இப்திகார், இணையதள ஆசிரியர் எம் ஐ நிஸாம் டீன், ஊடக இணைப்பாளர் அஷ்ரப் ஏ ஸமத் மற்றும்
மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் எல் ஐ ஏ எம் ஷாஜஹான், ஊடக செயலாளர் முஷர்ரிப் மொஹிடீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ்ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்வார உரை...
17/08/2025

துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமாகிய புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது மரணம் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்ட வார உரைகல் பத்திரிகை அப்பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் அநியாயத்தை தட்டிக் கேட்பதிலும் அவர் மிகுந்த நெஞ்சுரத்துடன் செயற்பட்டார். வயதான காலப் பகுதியில் கூட செய்திகளை சேகரித்தல், தட்டச்சு செய்தல், வடிவமைத்தல், அச்சடித்தல், விநியோகித்தல் என அனைத்தையும் தனி மனிதனாக முன்னெடுத்த அவரது திறமை மெச்சத்தக்கதும் இளம் ஊடகவியலாளர்களுக்கு முன்மாதிரிமிக்கதாகும்.

தனது எழுத்துக்களுக்காக அவர் பல தடவைகள் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளதுடன் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார். சட்ட ரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக தளர்வுற்றிருந்த நிலையில் நேற்று இவ்வுலகை விட்டும் பிரிந்த அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

என்.எம். அமீன்
தலைவர்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

ஊடக அறிக்கைகாஸா ஊடகவியலாளர்களின் படுகொலையைஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக  கண்டிக்கிறதுஅல் ஜெஸீரா வலையமைப்புக்...
13/08/2025

ஊடக அறிக்கை

காஸா ஊடகவியலாளர்களின் படுகொலையை
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது

அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட ஐவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அனஸ் அல் ஷரீப், முஹம்மது அல்-கால்தி ஆகிய ஊடகவியலாளர்களும் முஹம்மது குரைதா, இப்ராஹிம் ஸாஹிர், மொஹம்மது நௌபல் ஆகிய கமரா உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளுடன் சேர்த்து 2023 ஒக்டோபர் 7 முதல் இன்று வரை பலஸ்தீனில் 270 ஊடகவியலாளர்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஸாவில் இஸ்ரேல் அரங்கேற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தமது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டு வந்த இந்த ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்ததானது, உண்மையை மூடிமறைத்து, காஸாவின் கொடூரமான கள யதார்த்தத்தை உலகம் அறிந்துகொள்வதைத் தடுப்பதற்கான இஸ்ரேலின் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

ஊடகவியலாளர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவதானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இந்தத் தாக்குதல் தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமன்றி, ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் தகவல் அறியும் உரிமை ஆகிய அடிப்படை கொள்கைகள் மீதான நேரடித் தாக்குதலுமாகும்.

நன்றி
வஸ்ஸலாம்

என் எம் அமீன் 12.08.2025
தலைவர்

PRESS RELESE

SRI LANKA MUSLIM MEDIA FORUM (SLMMF)
STRONGLY CONDEMNS THE KILLING OF JOURNALISTS IN GAZA

The Sri Lanka Muslim Media Forum (SLMMF) strongly condemns the killing of five journalists, including senior journalist Anas Al-Sharif, who was working for Al Jazeera Network from Gaza, in an Israeli airstrike on a journalists’ tent near al‑Shifa Hospital in Gaza City.
Mohammed Qreiqeh (correspondent), Ibrahim Zaher (cameraman), Mohammed Noufal (cameraman), and Moamen Aliwa (camera operator) were also killed in the attack.
The killing of these journalists, who were risking their lives to report the truth and bring to the attention of the international community the crimes against humanity being committed by Israel in Gaza, is against the humanity and could be considered as war crimes. This is undoubtedly an attempt by Israel to cover up the truth and prevent the world from learning about the horrific reality on the ground in Gaza.
The deliberate targeting of journalists is a violation of international humanitarian law. This attack is not only an attack on individuals, but also a direct attack on the fundamental principles of media freedom and the people’s right to information.
An independent investigation into this incident must be conducted immediately and pressure must be applied on Israel to ensure the safety of journalists carrying out their duties in Gaza. We urge the international community to hold those responsible for these horrific acts accountable.
We express our deepest condolences to the families and colleagues of Anas al-Sharif and his fellow journalists who were killed alongside him. We also pray for all the journalists who lost their lives while reporting from Gaza.
We also want to record here that the courage and dedication shown by these journalists to bring the truth to light amidst the greatest threats will never be forgotten in history.

N. M. AMEEN
President – SLMMF 12.08.2025

ஜனாஸா அறிவித்தல்  *ஊடகவியலாளர் அக்குறனை ராபி காலமானார்* ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் நிறைவேற்று குழு உறு...
09/08/2025

ஜனாஸா அறிவித்தல்

*ஊடகவியலாளர் அக்குறனை ராபி காலமானார்*

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் நிறைவேற்று குழு உறுப்பினரும் பிராந்திய ஊடகவியலாளருமான அக்குறனையைச் சேர்ந்த ராபி சிஹாப்தீன் இன்று அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:00 மணிக்கு அக்குரனை ஆறாம் கட்டையில் உள்ள தாய் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

வேட்பு மணு கோரல் 2025 / 2026ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025 ஆகஸ...
04/07/2025

வேட்பு மணு கோரல் 2025 / 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பொதுக் கூட்டத்தை முன்னிட்டு 2025/2026 ஆண்டுக்கான தலைவர் / பொதுச் செயலாளர் / பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்...!!
03/07/2025

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்...!!

02/07/2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அம்பாறையில் ஏற்பாடு செய்த உறுப்பினர்களின் ஒன்று கூடலில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த 2025. 06. 30 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட பின்னரே நிறைவேற்று குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டுள்ளது.

30 ஆண்டுகள் பழமை வாய்ந்த போரத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட ஒரு சிலரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே இதனை கருதுவதாக போரம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரவும் போரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. -
SLMMF

ஊடகவியலாளர் பஸீரின் ஊடக செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தி அவரை குளியாப்பிட்டிய நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் அதிகாரிகள் வெ...
26/04/2025

ஊடகவியலாளர் பஸீரின் ஊடக செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தி அவரை குளியாப்பிட்டிய நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் அதிகாரிகள் வெளியேற்றியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு

தேசிய, முஸ்லிம் ஊடக  பரப்பில் சிறப்புற பரிணமித்த ஆளுமை தாஹா முஸம்மில்https://www.vidiyal.lk/post/--3270
27/03/2025

தேசிய, முஸ்லிம் ஊடக பரப்பில் சிறப்புற பரிணமித்த ஆளுமை தாஹா முஸம்மில்

https://www.vidiyal.lk/post/--3270

Address

#41/2, Vijitha Road, Nedimala
Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Muslim Media Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Lanka Muslim Media Forum:

Share