10/08/2026
டெங்கு தடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் - வெள்ளையன் வினோத்காந்த்.!
(களத்திலிருந்து மின்மினி மின்ஹா)
டெங்கு நோயை ஒழிப்பதற்கு அரச நிறுவனங்களின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களும் சமூக அமைப்புகளும் இணைந்து செயற்பட வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வெள்ளையன் வினோத்காந்த் தெரிவித்தார்.
புதிய வளத்தாப்பிட்டியில் இன்று (10) நடைபெற்ற டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலோன் பிரிட்டிஷ் கல்லூரி, Voice of Future Sri Lanka, Change for Student Community ஆகியவற்றின் நிறுவுனரான வெள்ளையன் வினோத்காந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளராகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராகவும், அக்கட்சியின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
துரித செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட அமைப்புகள் பின்வருமாறு.
1.அறம் அமைப்பு.
2.Voice of Future Sri Lanka.
3.மாற்றத்திற்கான மாணவர்கள் அமைப்பு.
4.வாரணம் நற்பணி ஒன்றியம்.
5.ஸ்ரீ நாவலர் சன சமுக நிலைய நிர்வாகம்.
6.வீனஸ் விளையாட்டு கழகம்.
7.நண்பர்கள் ஒன்றியம்.
8.உதவும் கரங்கள் அமைப்பு.
9.கிரேஸ் பாடல் பாடசாலை நிர்வாகம்.
10.நியூ லைப் அமைப்பு.
பத்து சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கண்ணகி, அம்மன், மத்திய, விபுலானந்த மற்றும் ஸ்ரீ நாகதம்பிரான் வீதிகளில் வீடுகள் தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொது இடங்கள், வெளிக்காணிகள், பாவனையற்ற காணிகள், குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.எஸ். டீ. அத்தநாயக்க, கிராம சேவகர் எம். உதயராஜன், பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்டோர் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்கினர்.