SEema FM

SEema FM Welcome to SEema FM.

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்...
14/07/2025

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.

இன்று(14) வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றமை தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம், சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான உறவுகளை பிரதிபலிக்கிறது.

சவூதி அபிவிருத்தி நிதியம், இலங்கை குடியரசில் சுமார் 425 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட 15 முக்கிய திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளது.

இந்த வயம்ப பல்கலைக்கழக திட்டமும் சவூதியின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா கொண்டுள்ள நம்பிக்கையே இந்த திட்டங்களை செயற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.

பல்கலைக்கழகங்களை கட்டுதல், அபிவிருத்தி செய்தல் என்பது வெறும் கட்டடங்களை நிர்மாணிப்பது மட்டுமல்ல, மாறாக அது ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கான அடித்தளமாகவும், மக்களுக்கு இடையேயான புரிதலையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவும் அமைகிறது.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan

ரூபாய் 10,000.00 பெறுமதி முத்திரைகள் வழங்கிவைப்பு 2024 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை ...
14/07/2025

ரூபாய் 10,000.00 பெறுமதி முத்திரைகள் வழங்கிவைப்பு

2024 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு 5000 ரூபாய் பெறுமதியான இரண்டு முத்திரைகள் (ரூபாய் 10,000.00) வெளிநாடு சென்றுள்ள பெண்களின் பிள்ளைகளை பராமரிக்கும் பாதுகாவலர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு இம்முத்திரைகள் வழங்கப்பட்டது

இம்முத்திரைகளுக்கான பொருட்களை சந்தோச நிறுவனத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முத்திரைகள் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச் முகமது கனி அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

2024 ஆம் ஆண்டில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 பேர் முதல் தடவையாக கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியிடத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களுக்கான முத்திரைகள் எதிர்வரும் தினங்களில் அவர்களை அழைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை க குறிப்பிடத்தக்கதாகும்

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Arun Hemachandra

மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் பற்றிய தகவல் குறித்து, ...
14/07/2025

மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரும் பற்றிய தகவல் குறித்து, இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு இராஜதந்திர அல்லது பாதுகாப்பு தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற பொலிஸ் ஊடக பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது;

மலேசியாவில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன், அவர்களது விபரங்களை உறுதி செய்யும் பணியில் பல பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் தற்போது மலேசியா மற்றும் தாய்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட 26 பேரில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் உறுதி செய்தார்.

ஜூலை 11ஆம் திகதி மலேசியாவில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தேசிய மத்திய பணியகத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இரு சந்தேகநபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் குற்றவியல் ஆவணக் காப்பகம் மற்றும் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதில் 20 வயதுடைய ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அவரை குறித்து மலேசிய குடிவரவு சட்டங்களுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நடவடிக்கைகள் தற்போதுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் மலேசிய அரசு தீர்மானிக்கும் வழியில் நாடு கடத்தல் அல்லது விசாரணைகள் தொடரும் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan

நடிகை சரோஜா தேவி காலமானார்.SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK
14/07/2025

நடிகை சரோஜா தேவி காலமானார்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political
SLNews.LK

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிம...
14/07/2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed

இலங்கைக்கு நிதி வழங்குவதை நிறுத்தாத, ஒரே நாடு சவுதி மட்டுமே https://www.jaffnamuslim.com/2025/07/blog-post_522.html இலங்...
14/07/2025

இலங்கைக்கு நிதி வழங்குவதை நிறுத்தாத, ஒரே நாடு சவுதி மட்டுமே

https://www.jaffnamuslim.com/2025/07/blog-post_522.html

இலங்கையில் சவுதி அரேபியாவின் 11 வது திட்டமான வயம்பா பல்கலைக்கழக நகர திட்டம் (ஜூலை 14, 2025) காலை 9 மணிக்கு மக்களின் பயன்பாட்டிற்காக மாகந்துர மற்றும் குளியாப்பிட்டி வளாகத்தில் திறக்கப்பட உள்ளது என சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் தெரிவித்துள்ளார். இவற்றை ஒருங்கிணைப்பதிலும் அவரே முக்கிய பங்காற்றியிருந்தார்.

இந்தத் திட்டத்தின் பலனளிப்புக்காக சவுதி மேம்பாட்டு நிதியம் (SFD) 28 மில்லியன் அமெரிக்க டாலர்களை (SAR 105 மில்லியன்) வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டி மற்றும் மகந்துர வளாகங்களில் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு அடங்கும், இதன் மூலம் இரு வளாகங்களிலும் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள், இதில் புதிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஏற்கனவே உள்ள பீடங்களுக்கான மேம்பட்ட கற்றல் வளங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். இந்தத் திட்டம் தரமான கல்வியை வழங்குவதற்கும் சுற்றியுள்ள சமூகங்களின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் பல்கலைக்கழகத்தின் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சம்பரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்காக SFD 50 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வழங்குகிறது.

இந்த கல்வி நலத்திட்டத்தின் சம்பிரதாய திறப்பு விழாவிற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்தின் (SFD) தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் ஏ அல்மர்ஷாத் தலைமையிலான இலங்கை வந்துள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களாக SFD உடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் இந்த ஒப்பந்தம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் ஜூலை 14 ஆம் தேதி SFD மற்றும் இலங்கை நிதி அமைச்சகத்திற்கு இடையிலான இந்த உயர்மட்ட விஜயத்தின் போது அது கையெழுத்திடப்படும். இந்த விஜயத்தின் போது தூதுக்குழு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவையும் சந்திக்க உள்ளது.

சவூதி அபிவிருத்திக்கான நிதியம், கடந்த பல தசாப்தங்களாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக சுமார் 1.5 பில்லியன் சவூதி ரியால் (438 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள மொத்த சலுகை மிக்க கடன் உதவியை வழங்கியுள்ளது.

கொழும்பு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் திட்டம் (1981), இலங்கையின் மிக நீளமான பாலமான கிண்ணியா பாலம், கொழும்பு தேசிய மருத்துவமனையில் நீரோ ட்ராமா பிரிவு, மின்சார சக்தி பரிமாற்ற திட்டம், களு கங்கை மேம்பாட்டுத் திட்டம், மகாவலி கங்கை மேம்பாட்டுத் திட்ட அமைப்பு B இடது கரை, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் - கொழும்பு மருத்துவமனை, பட்டிகொல்லா-திருகோணமலை சாலை திட்டம், சப்ரகமுவா பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடம், பேராதனை - பதுளை - செங்கலடி சாலை உள்ளிட்ட பதினான்கு (14) வெவ்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு SFD அவர்களின் உலகளாவிய மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் நிதியளித்தது.

இலங்கையில் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை, குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதில் SFD இன் பங்களிப்புகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன.

இலங்கைக்கு அதன் நிதியை வழங்குவதை நிறுத்தாத ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே, இலங்கையின் சமீபத்திய திவால்நிலை அறிவிப்பு இருந்தபோதிலும் தொடர்ந்து நிதியளித்தது என சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் மேலும் தெரிவித்துள்ளார்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமத...
14/07/2025

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த ஒரு பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மற்றொரு பேருந்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்தை தற்போது பொலிஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan Sanoos Sanoos

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) மொத்தம் 750 படங்களுக்கும் மேல்...
14/07/2025

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இவரது மறைவிற்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஜூலை 10ம் தேதி 1942ம் ஆண்டு விஜயவாடாவில் பிறந்தார். 1978ம் ஆண்டு பிரணம் கரீது தெலுங்கு திரைப்படம் மூலம் கோட்டா சீனிவாசராவ் சினிமாவில் அறிமுகமானார். 1999 – 2004ம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் (வயது 83 ) தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.

இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK

12,16,344 சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இதுவரை இலங்கை வருகை..!July 12, 2025நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இர...
13/07/2025

12,16,344 சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இதுவரை இலங்கை வருகை..!
July 12, 2025
நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை 12,16,344 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 48,300 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,860 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,181 சுற்றுலாப் பயணிகளும், பிராஸ்சிலிருந்து 2,335 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,153 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசி...
12/07/2025

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

யாரும் தனித்தனியாகச் செயல்பட முடியாது என்று கூறிய ஜனாதிபதி, மக்களுக்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைவரின் ஆதரவையும் கோரினார்.

ஹம்பந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(11) நடைபெற்ற ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, கிராமிய வீதி, காணி, நீர்ப்பாசனம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் வெற்றி குறித்தும் ஆராயப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள், இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தென் மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 574 மில்லியன் நிதி ஒதுக்கியிருந்தாலும், அதில் இதுவரை 23 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது எனவும் இது 4% முன்னேற்றம் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் தேவைகளுக்காக தொடர்புடைய ஒதுக்கீடுகளை முறையாகச் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்தல் உள்ளிட்ட காணி பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. பல்வேறு அதிகாரத்தரப்பினருக்கும் சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் காணி வழங்குவதற்குப் பதிலாக, மிகவும் பொருத்தமான மக்களுக்கும் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் நடவடிக்கைகளுக்கும் காணிகளை வழங்கும் கலாச்சாரம் நாட்டிற்குத் தேவை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலை கட்டமைப்பு குறித்து முறையான மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனைத்து பிள்ளைகளும் சிறந்த கல்வியைப் பெறும், மனித வளங்களை நன்கு நிர்வகிக்கும் மற்றும் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் ஒரு திட்டமாக இது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

உணர்ச்சிகள் அல்லது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான முறையான தரவுக் கட்டமைப்பு தேவை என்றும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதன் அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை வலுப்படுத்த அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும், 05 ஆண்டுகளுக்குப் பிறகு அரச சேவைக்குப் புதிதாக 30,000 பேரைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதேச செயலாளர்கள் உட்பட ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்களின் வசதிக்காக தேவையான வாகனங்களை வழங்குவதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மாவட்டத்தின் விவசாயப் பிரச்சினைகள், மீன்பிடித் துறைமுகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சிறுநீரகப் பிரிவின் பணிகளை முடிப்பதற்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கக் கோரி சுகாதார அதிகாரிகள் சமர்ப்பித்த கடிதம் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். திறைசேரியுடன் கலந்துரையாடி அந்த நிதியை ஒதுக்குவதற்குத் தான் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாகவும் கூறினார்.

கடந்த காலங்களில் ஒரு நாட்டின் வளர்ச்சியானது பெரிய கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் அளவிடப்பட்டாலும், இன்று தொழில்நுட்பம் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவுகோலாக மாறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் ஏற்படுவது அரசாங்கத்தின் அடிப்படைத் திட்டமாகும் என்றார்.

அதற்காக, குடிமக்களிடையே கலாச்சார மாற்றத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஜனாதிபதி, எதிர்வரும் செப்டம்பர் மாதத்தை நாட்டில் டிஜிட்டல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான மாதமாக பிரகடனப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

டிஜிட்டல் உலகில் நமது நாட்டை ஒரு புதிய தனித்துவத்துடன் அடையாளங் காண வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை அதில் ஒரு புதிய பாய்ச்சலைக் குறிக்கிறது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

SEema FM Kinniyan News

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துற...
11/07/2025

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

துருக்கி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர், குறிப்பாக வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு துருக்கி ஒரு முக்கிய பொருளாதார பங்காளியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய வாய்ப்புகளை வளர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டத்தின் 3வது அமர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பது இரு நாடுகளுக்கும் மிகவும் சரியான தருணம் என துருக்கி குடியரசின் தூதுவர் கௌரவ செமி லுட்ஃபு துர்குட் தெரிவித்தார்.

மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் வர்த்தகம், சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட நட்புறவுச்சங்கத்தின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், தன்னைத் தெரிவு செய்தமைக்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, சங்கத்தின் பணி மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூல...
11/07/2025

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று(10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை, அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சவால்கள், மற்றும் அவற்றுக்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் தொடர்பான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நோய்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும், மருந்துப் பற்றாக்குறையை தவிர்க்க அரசு நிர்வாகத்தில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்தார்.

இதனையடுத்து, இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக, நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ஆதரவை வழங்க அமெரிக்கா தொடர்ந்து தயாராக உள்ளது என தூதர் ஜூலி ஜே. சங் உறுதியளித்தார்.

SEema FM Kinniya Bridge Kinniyan News SL political SLNews.LK Sahraz Mohamed Santhan Kumaran Mufasir Ramlan Sanoos Sanoos Mohamed Siraj

Address

Dehiwela

Opening Hours

Friday 18:30 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEema FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEema FM:

Share