Evr Live

Evr Live "Connecting You to the World 24/7." Tamil News Channel

VAN FOR HIRE 🚐📍ஏறாவூர்📍ஓட்டமாவடி📍காத்தான்குடி📍மட்டக்களப்புமிகவும் பாதுகாப்பான முறையில் இலங்கையின் எப்பாகத்திற்கும் சென்ற...
12/04/2025

VAN FOR HIRE 🚐

📍ஏறாவூர்
📍ஓட்டமாவடி
📍காத்தான்குடி
📍மட்டக்களப்பு

மிகவும் பாதுகாப்பான முறையில் இலங்கையின் எப்பாகத்திற்கும் சென்று வரவும், விமான நிலையம், சுற்றுலா, திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய வைபவங்களுக்கான Van வசதியினை (சாரதியுடன்) எம்மிடம்பெற்றுக் கொள்ளலாம்

☎️ தொடர்புகொள்ள : Naseer : 0752799963
077 396 7600

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் நமது IKC-Q அமைப்பு "ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ்...
19/05/2024

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

நமது IKC-Q அமைப்பு "ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு பெருநாள் ஆடைகளை கொள்வனவு செய்ய வசதியற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆடைத் தொகுதி ஒன்றினை வழங்க திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் அதற்கான முன்னெடுப்பாக வயதுகளுக்கு ஏற்ப ஒருவருக்கு செலவாகும் ஆடை விபரங்களை பதிவிட்டுள்ளோம்.

இதில் நீங்கள் உங்களது அன்பளிப்பினை ஆடைகளாகவோ அல்லது பணமாகவோ நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எங்கு வசிப்பவராக இருப்பினும் கீழ் உள்ள தொடர்பிலக்கங்களுக்கு வாட்சப் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

(இதனை இன்னுமொருவருக்கு பகிர்வதன் மூலமாகவும் இப்பணியில் இனைந்து கொள்ளலாம்.)

Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

தான தர்மம் பற்றி அல்குர்ஆன்

﴿مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ﴾
[ البقرة: 261]
அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான்.

தர்மம் பற்றி நபி மொழி

அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும் படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக்கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்' எனக் கூறினார்கள். [நூல் புஹாரி :1432]

கல்குடா லயன்ஸ் விளையாட்டுக் கழக சீருடை அறிமுகமும் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவும்.......கட்டார் வாழ் கல்குடா சகோதரர்க...
20/01/2024

கல்குடா லயன்ஸ் விளையாட்டுக் கழக சீருடை அறிமுகமும் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவும்.......

கட்டார் வாழ் கல்குடா சகோதரர்களால் உருவாக்கப்பட்ட கழகமான KALKUDAH LIONS விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுகமும் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவும் கட்டார் றோயல் பிளாஸா கேட்போர் கூடத்தில் 2024.01.18 வியாழன் இரவு பாரூக் றியாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவு மற்றும் கிரிக்கட் அணிக்கான தலைவர், மற்றும் உப தலைவர் ஆகியோர் சபையோர்களால் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

நிர்வாகத் தெரிவு விபரம்.
01. தலைவர் : றியாஸ் பாரூக் (றிபான்)

02. செயலாளர்:
S.M. சனூஸ் (நளிமி)

03. பொருளாளர்:
சமீர் மர்சூக்

04.உப தலைவர்:
A.L. தன்வீர்

05. உப செயலாளர்:
A.M. சப்றி

06. நிர்வாக உறுப்பினர்கள்:
H.M.ஜாபிர், பாறூக் றியாஸ், R. சுதைஸ் அஹமட், F. றிஸ்மி அஹமட்

07. கழக ஆலோசகராக:
M.A. றிபாத்

08. கிரிக்கட் அணித் தலைவராக:
சமீர் மர்சூக்

09. கிரிக்கட் அணி உப தலைவராக:
நப்றாஸ் சித்தீக் ஆகியோரும் சபையோர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

நிர்வாகத் தெரிவையொட்டி இராப்போசனமும் கழக வளர்ச்சி பற்றிய கருத்துப் பரிமாறலும் கழகத்தின் தலைவர் றியாஸ் பாரூக்கின் (றிபான்) தலைமையில் லக்பீம உணவகத்தில் இனிதே இடம்பெற்றது. இதில் கழக வளர்ச்சி மற்றும் வீரர்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு மற்றும் வெளிக் களச் செயற்பாடுகள் என்பவை பற்றிய நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தகவல்:
றியாஸ் பாரூக்.
தலைவர்
கல்குடா லயன்ஸ் விளையாட்டுக் கழகம்.

நுஸைக் வபாத் (இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிஊன்)ரிதிதென்ன - புனாணை விபத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்...
27/08/2023

நுஸைக் வபாத் (இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிஊன்)

ரிதிதென்ன - புனாணை விபத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த இளைஞன் நுஸைக் இன்று (27) சிகிச்சை பலனின்றி வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.

இவர்கள் இருவரின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வு பூஞ்சோலையாக அமைய அனைவரும் பிராத்திப்போம்

03/04/2023
13/10/2022

மக்கள் குடியிருப்பு பகுதியில் காணித்துண்டுகள் விற்பனைக்கு
(இன்னும் 5 துண்டுகள் மாத்திரமே) ஏறாவூரில்

✅பாடசாலை அருகில்
✅பள்ளிவாயல் அருகில்.
✅மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி அருகில்.
✅நான்கு பக்கம் அடைக்கப்பட்டு கேட்(Gat)
போடப்பட்ட காணிகள்
✅6.6 பேர்ச்சஸ் அளவு காணி(5×10பாகம்)
✅12×50அடி கடைக் காணி
✅பிரதான கொங்ரீட் வீதி(RDS Road)
✅சகல வசதிகளையும் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி

(எம்மிடம் காணியை கொள்வனவு செய்தவர் வீடு ஒன்றினை அமைப்பதை படத்தில் காணலாம்)

(இன்னும் 5 காணித்துண்டுகள் மாத்திரமே கையிருப்பில்)

💯தரகர் கூலி இன்றி நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்
☎தொடர்பு கொள்ள- 0762347755/
0754146049

https://wa.me/p/4184704668298696/94762347755

வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு6ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
11/09/2022

வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு
6ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

20/07/2022


இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு.

20/07/2022

நாடாளுமன்றத்திற்குள் மொபைல் ​போன் தடை

பதில் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெறும் இன்றைய தினம் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மொபைல் போன்களை நாடாளுமன்றத்தினுள் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

19/07/2022

ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி , தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் சிலர் ரணிலுக்கு இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஆதரவளிப்பர். ரணில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் சர்வகட்சி ஆட்சி அமையும்.

ஹரீன் பெர்னாண்டோ ஊடகமொன்றிடம் தெரிவிப்பு
-QuickNews

சிட்டுவேஷன் ரிப்போர்ட்..!  ரணிலா? டலஸா?ஜனாதிபதி தேர்தல் தெரிவில் ரணிலுக்கும் ,டலசுக்குமிடையில் கடும் போட்டி என்று செய்தி...
19/07/2022

சிட்டுவேஷன் ரிப்போர்ட்..! ரணிலா? டலஸா?

ஜனாதிபதி தேர்தல் தெரிவில் ரணிலுக்கும் ,டலசுக்குமிடையில் கடும் போட்டி என்று செய்திகள் தீயாக பரவினாலும் என்னைப்பொறுத்தவரை அப்படி இருப்பதாக தெரியவில்லை..

* டலசுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளவர்களில் எத்தனை பேர் சொன்னபடி செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.

* கட்சித்தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்தாலும் எத்தனைபேர் ,அவர்களின் பேச்சை கேட்பார்கள் என்பது நிச்சயமில்லை ( சுதந்திரக்கட்சி - தமிழ்க்கூட்டமைப்புக்குள் இதுதான் நிலைமை )

* கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளின் அழுத்தம் கட்சித்தலைவர்கள் பலருக்கு சென்றிருப்பதால் ,பலர் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும்படி தங்களின் எம்.பிக்களை கேட்டுள்ளதாக தெரிகிறது.

* இந்த செய்தி எழுதப்படும் இந்த நிமிடத்தில் டலஸ் பக்கம் ஆதரவு அதிகமான நிலை இருப்பதுபோல இருந்தாலும் , ரணில் சில வியூகங்களை வகுத்து எம்.பிக்களை வளைத்திருக்கிறார். ( நாளைய தினம் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்குப் பின்னர் அந்த வியூகங்களை பகிர்கிறேன்..)

* இவற்றுக்கெல்லாம் அப்பால்,டலஸ் அழகப்பெரும டீமின் முக்கிய தூண்களை கழற்ற, இன்றிரவு ரணில் முக்கிய சந்திப்புகளில்..

* விமல் வீரவன்ச இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டினால் பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு எம்.பிக்கள் அதிருப்தியில்.

* ஹக்கீம் , ரிஷார்ட் , தௌபீக் எம்பி மாரை தவிர அதாவுல்லாஹ்வுடன் சேர்த்து 11 முஸ்லீம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு - முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடித்த சன்ன ஜெயசுமன , ரத்தன தேரர் உட்பட்ட எம்.பிக்கள் டலஸின் வருகையின் பின்னால் இருப்பதாக அவர்கள் விமர்சனம்.

* தமிழ்க்கூட்டமைப்புடன் எழுத்துமூல உடன்பாட்டுக்கு டலஸ் - சஜித் அணி வந்திருக்குமாயின் தங்களுடன் அப்படியொரு ஏற்பாடு நடக்கவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றிரவு தீர்மானம். இல்லையேல் டலசுக்கு வழங்கும் ஆதரவு மீள் பரிசீலனை.

* கூட்டிக்கழித்துப் பார்த்தால் சிறியதொரு வித்தியாசத்தில் ரணில் வெல்லும் வாய்ப்பே இப்போது இருக்கிறது. இந்த நிமிடத்தின் நிலைமை இதுதான்..

(தமிழன் பத்திரிகை)

Address

Eravur
30300

Telephone

+94762347755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evr Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evr Live:

Share

EVRLIVE

EvrLive is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2018 Curated by @Safri_twitz