Taste Kadai

Taste Kadai Youtube Channel

09/09/2024

2024 ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய தெரிவு யார்?

இடம் : ஏறாவூர் தற்காலிக சந்தை

குறிப்பு: இந்த காணொளி முற்று முழுதாக வெட்டி ஒட்டப்படாமல் எடுக்கப்பட்டதாகும். இத எந்த ஒரு கட்சியினதும் அரசியல் நோக்கத்திற்காவும் செய்யப்பட்டது அல்ல!

04/09/2024

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்கள் தெரிவு யார்?
முழு வீடியோ - https://youtu.be/wAkkpJq5BZM

06/01/2024

மறைந்த பேராசிரியர் செ. யோகாராஜா அவர்களுக்கான இரங்கல் உரை

எழுத்தாளர் Slm Hanifa

09/05/2023
ஏறாவூர் புத்தக கொண்டாட்ட வேலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நண்பர்கள் பலர் புத்தக கொண்டாட்டம் தவிர்த்து ஏறாவூரில் என்ன ...
04/05/2023

ஏறாவூர் புத்தக கொண்டாட்ட வேலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நண்பர்கள் பலர் புத்தக கொண்டாட்டம் தவிர்த்து ஏறாவூரில் என்ன விடயங்களைப் பார்க்கலாம், என்ன ஸ்பெஷல் எனக் கேட்கிறார்கள். குடும்பத்துடன் வருகிறோம் புதிதாக ஏதாவது இருந்தா இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

புத்தக கொண்டாட்டத்துடன் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் அமைத்துள்ளோம். பத்து நாட்களும் பல நிகழ்வுகள் அரங்கேற்றப்படவிருக்கின்றன. கூத்து, கூத்துப் பாடல்கள், பறைமேளக்கூத்து, கோலாட்டம், சீணடி, பக்கீர்பைத், பெரெஹெரா நடனம், பட்டிமன்றம், வீதிநாடகம், பாடல், நாடகம், ஆய்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என ஆயிரத்தெட்டு விடயங்கள் உள்ளன. புத்தகங்கள் வாங்காவிடினும் ஆறுதலாக ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். இம்மைதானத்துக்கு அருகாமையில் அழகான வாவி ஒன்று உள்ளது. சிறந்த பூங்கா உள்ளது. படகு சவாரி செய்யலாம். மருத மரத்திற்கு கீழ் அமர்ந்து காற்றுவாங்கலாம். பலர் தரிசித்துச் செல்கின்ற இயற்கை எழிலான ஆறும் பூங்காவும் உண்டு. மைதானத்துக்கு அருகாமையில் நானூறு வருடங்கள் பழமைவாய்ந்த பள்ளிவாயல் என தொல்பொருள் திணைக்களத்தால் பிரகடணப்படுத்தப்பட்ட பழைய பள்ளிவாயலின் அம்சங்களை அப்படியே கொண்ட ஆற்றங்கரை பள்ளிவாயல் உள்ளது.

புன்னைக்குடா, சவுக்கடி என இரண்டு அழகான கடற்கரைகள் உள்ளது. புன்னைக்குடா குளிப்பதற்கு வசதியானது. ஆழம் குறைந்தது. அலைகள் ஆர்ப்பரிப்பதில்லை. சவுக்கடி இதற்கு நேர்மாறானது. ஆனால் இரண்டுமே ஓய்வெடுப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் பொருத்தமான இடம்.

இடங்கள் ஒரு புறமிருக்கட்டும். சாப்பாட்டுக்கு வருவோம். மரவள்ளிக்கிழங்கை பொரித்து அதற்குள் பொரித்த இறைச்சி, நுரையீரல், குடல் போன்றவற்றையும் பாபத் கறி எனப்படும் ஆடு மாட்டுக்குடல்களின் கறியையும் ஊற்றி தாலிப்பு, வெங்காயம்,தூள் என எல்லாவற்றையும் போட்டு சாப்பிடத் தருவார்கள். மிக அருமையாக இருக்கும். அவ்வாறான டேஸ்ட் கடைகள் அதிகம் உண்டு. மேலதிகமாக கடலைக் கரத்தை எனப்படும் ஒரு அம்சமும் உண்டு. அவித்த கடலை, பருப்பு, கிழங்குச் சீவல், தூள், எல்லாம் போட்டு ஒரு பெரிய இரும்பு கப்பில் போட்டு அடித்து நொருக்கித் தருவார்கள். மிக மிக ருசியாக இருக்கும்.

வழமை போன்று நான்கு விடயங்களுக்கு ஏறாவூர் பேர் போனது. கஜு எனப்படும் முந்திரியம்பருப்பு, நெய், தயிர் மற்றும் பனையோலைப் பொருட்கள். மேலுள்ள மூன்றுக்கும் இலங்கையிலே ஏறாவூர் பேர்போனது. அதனை வாங்கிச் செல்லலாம். சாப்பிடலாம். ஏதாவது செய்யலாம்.

18 கிலோ மீட்டர் தூரத்தில் பாசிக்குடா உள்ளது. வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசங்கள் உள்ளது. எதிர்ப்புறமாக 14 கிலோமீட்டரில் மட்டக்களப்பு உள்ளது. அதிலிருந்து 06 கிலோமீட்டர் தூரத்தில் காத்தான்குடி உள்ளது. மிக அருகில் கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளது.

இஸ்லாமிக் புக் ஹவுஸ், குமரன் பதிப்பகம், சமுத்ரா புத்தக நிலையம், பேஜஸ் புத்தக நிலையம், ஃப்ளாஸ் புக்ஸ், பாத்திமா புத்தக கடை, Books for children's, அல் அமீன் புத்தக நிலையம் போன்றவை அமையப்பெற்றிருக்கும். தேவையான புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விடயங்களை Eravur Book Celebration பக்கம் ஊடாக பார்வையிடலாம்.

வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Eravur Book Celebration
23/04/2023

Eravur Book Celebration

இன்று தொழிலாளர் தினம். ஒவ்வொரு வருடமும் எந்த பேதமும் இல்லாமல் கொண்டாடும் நாள்.  துரதிஷ்டவசமாக இம்முறை இலங்கையில் எல்லோரு...
01/05/2022

இன்று தொழிலாளர் தினம். ஒவ்வொரு வருடமும் எந்த பேதமும் இல்லாமல் கொண்டாடும் நாள். துரதிஷ்டவசமாக இம்முறை இலங்கையில் எல்லோருமாக நடுத்தெருவில் நிற்கிறோம். மீளும் காலம் தொலைவில் இல்லை என்பது சிறு புள்ளியாக தெரிகிறது.

டேஸ்ட் கடை யூடியூப் சனல் ஊடாக இத்தொழிலாளர் தினத்தில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளோம். நேசத்துக்குரிய பாடகர் ரிஸ்வி பாடலைப் பாடுகிறார். பாடல் வரிகளை கவிஞர் அப்துல் ரஹ்மான் எழுதியுள்ளார். அழகாக எடிட் பண்ணியுள்ளார் நஸீம். வாஜித் அத்துடன் அஸ்லம் அத்ஹம் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

நிச்சயம் இம்மேதினத்தில் இப்பாடலை சின்னதாய் உங்களை உலுக்கும்.

மே தின வாழ்த்துக்கள்.

செல்வமான தேசம் இன்று சீரழிந்து போனதே 😟

A song detecicated for our fellow Sri Lankan people.Footage Credits : YouTubeSinger - Rizvi AhmathLyricist - A.C. Abdul RahumanEditor - NazeemVideographer - ...

16/06/2021

சிறுவர்கள் தற்சமயம் பாடசாலைகளில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்லைன் வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இவற்றின் சாதக பாதகங்கள் தொடர்பாக சிறிய கலந்துரையாடல்.

Presenters:
Ramees Abdul Salam & Mohamed Sabry

Team Taste Kadai

10/06/2021

உங்கள் வீட்டில் 3-5 வயதான குழந்தைகள் உள்ளார்களா? பாலர் கல்வி தடைப்படுகிறதா? | Home Schooling - 1

கப்பலுக்குத் தெரிந்துவிட்டது நாம் இனி பிழைக்க வாய்ப்பில்லையென்று. கட்டார் துறைமுகத்திடம் கேட்கிறது. வாய்ப்பில்லை ராசா அத...
04/06/2021

கப்பலுக்குத் தெரிந்துவிட்டது நாம் இனி பிழைக்க வாய்ப்பில்லையென்று. கட்டார் துறைமுகத்திடம் கேட்கிறது. வாய்ப்பில்லை ராசா அதற்கான தொழில்நுட்பமோ வசதிகளோ எம்மிடமில்லை என்று கைவிரித்துவிடுகிறது. இந்தியாவிடம் கேட்கிறது. அவர்களும் கட்டார் சொன்ன பதிலைத்தான் சொல்கிறது. கப்பலுக்குத் திண்டாட்டம். நிம்மதியாகச் சாவதற்கு கூடவா கடல் இல்லை எனக்கு. என்ன செய்வது கப்பல் தன்னுள் வைத்திருந்த விடயங்கள் பாரதூரமானதே. யார்தான் தங்கள் கடலில் இந்த நச்சுக்கள் கலப்பதை விரும்பப் போகிறார்கள். அதுவும் வசதி படைத்த பெரிய நாடுகளே கைவிரித்துவிட்ட நிலையில் நம்நாடு நாமிருக்கிறோம் நமது கடல் குப்பைகளுக்கும் நச்சுக்களுக்குமானது வந்து தற்கொலை செய்து கொள்ளுங்கள் அன்பின் கப்பலே என்றது. ஆனால் நஷ்டஈட்டுத் தொகை லம்பா வந்துசேர்ந்துவிட வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தது.

கப்பல் வந்தது. கப்பல் தாண்டது. கடல் நாசமானது. கடல்சார் உயிரினங்கள் அழிந்தது. மீனவர் வாழ்வு அம்போ ஆனது.

கடலில் கப்பல் இரசாயணங்களைக் கக்கிக் கொண்டிருக்கும்போதே கப்பல்காரனுடன் பேரம் பேசுவதில் அரசாங்கம் காட்டிய மும்முமரம் பாராட்டுக்குரியது.

கப்பல் தாண்டாத்தான் என்ன மயிர் தாண்டாத்தான் நமக்கென்ன என்ற சமூகமான நமக்கு இந்த வீடியோ எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

இலங்கைக் கடற்பரப்பில் தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் பற்றிய சம்பவங்களின் தொகுப்பினை வழங்குகின்றது இ...

Address

Eravur

Alerts

Be the first to know and let us send you an email when Taste Kadai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taste Kadai:

Share

Category