Malaioli Radio

Malaioli Radio Welcome to the official page of MALAIOLI FM. We are Srilanka's One & Only TAMIL Youth Radio.

இலங்கையின் மலைநாட்டில் அமைந்துள்ள #ஹட்டன் நகரில் இருந்து மலையக மக்களின் குரலாய் #மலைஒலி இணைய வானொலி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட அழகிய இயற்கை வனப்புள்ள மலையக மண்ணில் வசிக்கும் மக்களின் குரல்கள் மலைகளை தாண்டி ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலைஒலி என்று உங்கள் வானொலிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மழை மற்றும் குளிர்ச்சியான வானிலையால் எப்போதுமே சில்லென்று காணப்படும் மலையகத்தில் வ

சிக்கும் மக்களின் பொழுதுகளை மேலும் இனிமையாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை தாங்கி வருகின்றது #மலைஒலி இணைய வானொலி.

இன்று இணையம்தான் உலகை ஆக்கிரமித்து வருகின்றது. அதற்கு மலையகமும் விதிவிலக்கல்ல. அன்று முதல் வானொலிக்கென்றே ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு மற்றும் ஆர்வம் மலையக மக்கள் மத்தியில் ஊறிக்கிடக்கின்றது. இன்று பாரம்பரிய வானொலி அலைவரிசை முறை மாறி இணையத்தின் ஊடாக வானொலியை செவிமெடுக்கும் நிலைக்கு உலகம் மாறிக்கொண்டிருக்கின்றது.

அலைவரிசைகளில் இயங்கும் வானொலிகள்கூட இன்று இணையத்திலும் தமது வானொலி நிகழ்ச்சியை நேரலையாக ஒலிபரப்பி வருகின்றன. அந்தளவுக்கு இணையத்தின் ஊடாக வானொலி ஒலிபரப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகின்றது.

இன்று யார் வேண்டுமென்றாலும் இணைய வானொலிகளை இயக்கி விடலாம். ஆனால், அது மக்களுக்கு எந்த விதத்தில் பயனை கொடுக்கின்றது என்பதும் எவ்வாறான முறையில் காத்திரமாக செயற்படுகின்றது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகின்றது.

மலையக மக்களின் பாரம்பரியங்களுடன், மலையக மண்வாசனையுடன் மலையகத்துக்கான தனித்துவமிக்க வானொலியொன்றின் தேவையை உணர்ந்து மலைஒலி இணைய வானொலி உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது பரீட்சார்த் ஒலிபரப்பில் உள்ள மலைஒலி இணைய வானொலி 24 மணிநேரமும் உங்கள் ரசனைக்கு ஏற்ப பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளது. விரைவில் நேரடி நிகழ்ச்சிகளுடன் உங்களை சந்திக்க வருகின்றோம்.

உங்கள் பேராதரவுடன் என்றும் மக்களின் குரலாய் மலைஒலி ரீங்காரமிடும்.

வானொலி - www.radio.malaioli.com
இணையத்தளம் - www.malaioli.com

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்
29/10/2024

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமட....

இலவச WI-FI குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
29/10/2024

இலவச WI-FI குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

பொது இடங்களில் மக்கள் இலவச Wi-Fiஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பி...

மார்ச் மாதத்தில் சாதாரண தரப் பரீட்சை
29/10/2024

மார்ச் மாதத்தில் சாதாரண தரப் பரீட்சை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி .....

ஹட்டனில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்
29/10/2024

ஹட்டனில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு ...

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்
29/10/2024

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விநிய.....

கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
25/10/2024

கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சாதாரண முறையில் கடவுச்சீட்டை பெறுவதற்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்கள வளாகத்தை ச...

உயரம் குறைந்த சிறார்களின் எண்ணிக்கை நுவரெலியாவில் அதிகரிப்பு
25/10/2024

உயரம் குறைந்த சிறார்களின் எண்ணிக்கை நுவரெலியாவில் அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் உயரம் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களில் அதிகளவானோர் நுவரெல.....

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் தீபாவளி முற்பணம்
23/10/2024

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் தீபாவளி முற்பணம்

தீபாவளி முற்பணம் - தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25, 000 ரூபாய் முற்பணம் வழங்க நடவடிக்கை

கண்டியிலிருந்து கைப்பற்றப்பட்ட மேலும் இரண்டு வாகனங்கள்
21/10/2024

கண்டியிலிருந்து கைப்பற்றப்பட்ட மேலும் இரண்டு வாகனங்கள்

கண்டி, அனிவத்த பிரதேசத்தில் முன்னாள் துறைமுக அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ...

சடலமாக மீட்கப்பட்ட தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி
21/10/2024

சடலமாக மீட்கப்பட்ட தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி

தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி தெரிவித்து சென்ற 17 வயதுடைய இரண்டு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை லொ.....

மசாஜ் நிலையத்தில் விபசாரம் – ஐந்து பெண்களுக்கு அபராதம்
21/10/2024

மசாஜ் நிலையத்தில் விபசாரம் – ஐந்து பெண்களுக்கு அபராதம்

விபசாரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து பெண்களுக்கு தலா 100 ரூபாய் அபராதத்தை நுவரெலியா நீதவான் திங்கட்கிழம...

பாரஊர்தி விபத்து; ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை
15/10/2024

பாரஊர்தி விபத்து; ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை

கொழும்பில் இருந்து ஹட்டனுக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற பாரஊர்தியொன்று கினிகத்தேனை வைத்தியசாலைக்கு அருகில் வை.....

Address

Hatton
22000

Alerts

Be the first to know and let us send you an email when Malaioli Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malaioli Radio:

Share

Category