Colombo TV Network

Colombo TV Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Colombo TV Network, Media, Hunupitiya.

connect with COLOMBO TV NETWORK -world largest live tamil Trending news tv network.




லைக் செய்து செய்திகளை படியுங்கள்.. TV Network










அனைத்துவிதமான செய்தி

களையும் உடனுக்குடன் அறிந்திட இங்கே லைக் செய்து இணைந்திருங்கள்
https://www.facebook.com/ColomboTVnetwork/

06/08/2026

05/08/2026

 ❤️💞❤️
05/07/2026

❤️💞❤️

"HI, ASSALAMU ALAIKUM" ❤️💞❤️
30/03/2026

"HI, ASSALAMU ALAIKUM"
❤️💞❤️

பாரசீக வளைகுடாவின் ஆழமான நீல நிற அலைகளுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு புதையல் ஒன்று மறைந்துள்ளது. இது ஒரே...
24/03/2026

பாரசீக வளைகுடாவின் ஆழமான நீல நிற அலைகளுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு புதையல் ஒன்று மறைந்துள்ளது.

இது ஒரே ஒரு எரிவாயு வயல்தான், ஆனால் அரசியல் ரீதியாக இது இரண்டு நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது:

1. ஈரான் பகுதி: South Pars
2. கத்தார் பகுதி: North Dome

இந்த எரிவாயு வயல் சுமார் 9,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஈரான் வசம் 3,700 சதுர கிலோமீட்டரும், கத்தார் வசம் 6,000 சதுர கிலோமீட்டரும் உள்ளன. மொத்தமாக இதில் 1,800 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு 'Shared Reservoir' என்பதால், ஒரு நாடு வேகமாக எரிவாயுவை உறிஞ்சினால், அழுத்தம் குறைந்து மற்றொரு பக்கத்தில் இருக்கும் எரிவாயுவும் அந்தப் பக்கமே நகரத் தொடங்கும்.

கதை இங்கேதான் தொடங்குகிறது. கத்தார் தனது பகுதியை (North Dome) மிக வேகமாகவும் நவீன தொழில்நுட்பத்துடனும் மேம்படுத்தியது. இன்று கத்தார் உலகின் இரண்டாவது பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளராக இருப்பதற்கு இதுவே காரணம்.

மறுபுறம், ஈரான் தனது பகுதியை (South Pars) மேம்படுத்த முயன்றபோது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதாரத் தடைகளை (Sanctions) எதிர்கொண்டது.

அதன் விளைவு ஈரானால் நவீன இயந்திரங்களை வாங்க முடியவில்லை, வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கவில்லை.

ஆனால் கத்தார் அதிநவீன வசதிகளுடன் எரிவாயுவை உறிஞ்சி எடுக்கும்போது, ஈரான் தனது பழைய தொழில்நுட்பத்தால் தடுமாறியது. இதனால், பூமிக்கு அடியில் இருக்கும் எரிவாயு அழுத்தம் காரணமாக கத்தார் இருக்கும் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. "கத்தார் அனைத்து எரிவாயுவையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டது, ஈரான் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் உருவானது.

சமீபத்திய சூழலில், இந்த எரிவாயு வயல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது.

மார்ச் 18, 2026 அன்று இஸ்ரேல் விமானப்படை ஈரானின் சவுத் பார்ஸ் பகுதியில் உள்ள எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 'அசலுயே' (Asaluyeh) என்ற முக்கிய மையத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரானின் மொத்த எரிவாயு உற்பத்தியில் 12% இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இது ஈரானின் மின்சார உற்பத்தி மற்றும் வீட்டுத் தேவைகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது.

ஈரான் சும்மா இருக்கவில்லை. இதற்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள Ras Laffan என்ற எரிவாயு மையத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

உலகிற்குத் தேவையான மொத்த LNG-யில் 20% கத்தாரின் இந்த ஒரு இடத்திலிருந்துதான் செல்கிறது. இங்கே ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பு கூட உலக அளவில் எரிவாயு விலையை கிடுகிடுவென உயர்த்தும்.

இப்போது இந்த மோதல் என்பது வெறும் ராணுவ வீரர்களுக்கு இடையிலான போர் மட்டுமல்ல, இது ஒரு பொருளாதாரப் போராக வடிவம் பெற்றுள்ளது.

ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் எரிசக்தி கட்டமைப்பைத் தகர்ப்பதன் மூலம் அந்த நாட்டை நிலைகுலையச் செய்வதே இதன் நோக்கம்.

South pars என்பது வெறும் எரிவாயு வயல் அல்லஅது ஈரானின் பொருளாதாரம் மற்றும் உலக எரிசக்தி சந்தையின் இதயம் போன்றது.

ஈரானின் 36% எரிவாயு இருப்பு இங்கேயே உள்ளது.

ஈரான் தனது ராணுவத்திற்கும், அதன் நட்பு அமைப்புகளுக்கும் (Hezbollah, Hamas போன்றவை) செலவிடும் பணத்தை முடக்க வேண்டுமானால், அதன் வருமான ஆதாரமான எரிசக்தித் துறையைத் தகர்க்க வேண்டும் என்பது இஸ்ரேலின் திட்டம்.

ஈரானின் எரிவாயு உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய அனைத்தும் 'அசலுயே' என்ற ஒரே இடத்தில் குவிந்துள்ளன.

ஒரே ஒரு மையத்தை (Single point of failure) தாக்குவதன் மூலம், ஈரானின் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியையும் முடக்கி விடலாம். இது ஈரானின் உள்நாட்டு மின்சாரத் தேவையையும், தொழில்துறையையும் பாதிக்கும், இதனால் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிருப்தி ஏற்படும் என இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா ஏற்கனவே ஈரான் மீது பல தடைகளை விதித்துள்ளது. இதனால் ஈரானால் தனது எரிவாயு கட்டமைப்புகளை நவீனப்படுத்தவோ அல்லது எளிதாகப் பழுதுபார்க்கவோ முடியாது.

தாக்குதலுக்குப் பிறகு ஈரானால் பழையபடி உற்பத்தியைத் தொடங்க நீண்ட காலம் எடுக்கும். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஈரானை நிரந்தரப் பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளுவது ஒரு முக்கிய நோக்கம்.

ஈரான் தனது எரிவாயுவை ஈராக் மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
நோக்கம் ஈரானின் ஏற்றுமதியைத் தடுப்பதன் மூலம், மற்ற நாடுகள் ஈரானைச் சார்ந்து இருப்பதை நிறுத்தச் செய்வது. குறிப்பாக ஈராக் போன்ற நாடுகள் இப்போது ஈரான் எரிவாயு இல்லாமல் தவிக்கின்றன,
இதன் மூலம் ஈராக்கில் இருந்து கிடைக்கும் டாலர்களை தடுக்க முடியும்.

இஸ்ரேலின் நோக்கம் வெறும் ராணுவ வெற்றி மட்டுமல்ல, ஈரானை ஒரு 'ஆற்றல் மிக்க நாடு' (Energy Power) என்ற நிலையிலிருந்து வீழ்த்தி, அதன் பொருளாதாரத்தை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளுவதே ஆகும்.

எரிசக்தி உள்கட்டமைப்புகள் இலக்காக்கப்படுவது ஒரு தேசத்தின் உயிர்நாடியைத் துண்டிப்பதற்குச் சமம்.

கத்தார் போன்ற நாடுகள் உலகிற்கு வழங்கும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் ஐரோப்பா முதல் ஆசியா வரை பல நாடுகளில் மின்சார முடக்கம் மற்றும் விலை ஏற்றத்தை உடனடியாக உருவாக்குகிறது.

இது தற்செயலானது அல்ல; ஒரு உலகளாவிய அமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்றால் அதன் ராணுவத்தைத் தாக்க வேண்டியதில்லை, அந்த ராணுவம் எதை நம்பி இயங்குகிறதோ அந்த எரிசக்தி ஆதாரத்தைத் தாக்கினால் போதும் என்ற 'பொருளாதார அழிப்பு' (Economic Attrition) கொள்கையே இங்குச் செயல்படுத்தப்படுகிறது.

South pars மீதான தாக்குதல் என்பது ஒரு பிராந்திய மோதலிலிருந்து உலகளாவிய பொருளாதாரப் போராக (Economic Warfare) மாறியுள்ளது. ஒரு காலத்தில் புதையலாகப் பார்க்கப்பட்ட இந்த எரிவாயு வயல், இன்று உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் ஒரு வெடிகுண்டாக மாறியுள்ளது.

எரிசக்தி அமைப்புகள் இலக்குகளாக மாறும் வரை, உலக சந்தை நிலையற்ற தன்மையிலேயே இருக்கும்.

எரிசக்தி சந்தையின் மாற்றங்களையும், நாடுகளின் எதிர்வினைகளையும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே உலகம் எங்கே செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து கொள்பவர்கள் மட்டுமே, வரவிருக்கும் ஒரு மாபெரும் பொருளாதார மற்றும் அரசியல் புயலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முடியும்.
Colombo TV Network

எங்கே கை வைக்க வேண்டும் என்ற விவேகம் இல்லாமல், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை (JCPOA) ட்ரம்ப் தன்னிச்சையாக முறித்து ஈர...
24/03/2026

எங்கே கை வைக்க வேண்டும் என்ற விவேகம் இல்லாமல், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை (JCPOA) ட்ரம்ப் தன்னிச்சையாக முறித்து ஈரானை முடக்க நினைத்து அவர் மேற்கொண்ட "அதிகபட்ச அழுத்தம்" (Maximum Pressure) என்ற தந்திரம், இன்று அவருக்கே வினையாக முடிந்துள்ளது.

ஈரானை வழிக்கு கொண்டு வரப்போவதாகக் கூறி விதிக்கப்பட்ட தடைகள், ஈரானை விட அமெரிக்காவின் நட்பு நாடுகளையும், உலகப் பொருளாதாரத்தையுமே அதிகம் வதைக்கின்றன.

ஆப்பை இழுத்து சிக்கிக் கொண்ட குரங்கைப் போல, முன்னேறவும் முடியாமல், பின்வாங்கவும் முடியாமல் ட்ரம்ப் நிர்வாகம் தவிக்கிறது.

மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ட்ரம்பின் இந்த பிடிவாதமான போக்கினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரானுடனான பதற்றம் அதிகரித்துள்ளதால், அரபு நாடுகள் தங்கள் பட்ஜெட்டில் பெரும் பகுதியை ஆயுதங்கள் வாங்கவும் பாதுகாப்புக்காகவும் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

போர் பதற்றம் நிலவும் ஒரு பிராந்தியத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதனால் "Vision 2030" போன்ற அரபு நாடுகளின் பொருளாதாரக் கனவுகள் சுக்குநூறாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றத்தால், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகை (Insurance premium) பல மடங்கு உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் பாதிக்கிறது.

ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் யதார்த்தம் தலைகீழாக உள்ளது

போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால், அமெரிக்க நிறுவனங்கள் மத்திய கிழக்கில் ஏற்கனவே செய்துள்ள பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளன.

ஈரானை ஒடுக்க நினைத்த ட்ரம்ப், இன்று அமெரிக்காவின் மிகப்பெரிய பலமான 'பெட்ரோ-டாலர்' (Petro-dollar) அமைப்பிற்கே வேட்டு வைத்துள்ளார். ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தைத் தடுத்தால் அவர்கள் பணிந்து வருவார்கள் என்று அவர் போட்ட கணக்கு, தற்போது உலக நாடுகளை டாலரை விட்டு வெளியேறத் தூண்டியிருக்கிறது.

Hormuz நீரிணையை கடக்க வேண்டும் எனில் yuanல் மட்டுமே எண்ணை வாங்க வேண்டும் என ஈரான் அறிவித்தது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.

இதற்கு ஜப்பான் போன்ற அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளே சம்மதம் தெரிவித்து வருவது ட்ரம்பிற்கு விழுந்த பலத்த அடியாகும்.

டாலரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி ஈரானைத் தனிமைப்படுத்த முயன்றதன் மூலம், மற்ற நாடுகளுக்கு "டாலர் பாதுகாப்பற்றது" என்ற பயத்தை ட்ரம்ப் ஏற்படுத்திவிட்டார். இதன் விளைவாக, நாடுகள் தங்களுக்கென மாற்றுப் பாதையை (Dedollarization) அவசரமாகத் தேட ஆரம்பித்துவிட்டன.

ட்ரம்பின் 48 மணி நேரக் கெடு மற்றும் போர் மிரட்டல்கள், ஈரானை அச்சுறுத்துவதற்குப் பதிலாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கே (US Military Bases) உலை வைப்பதாக உள்ளது.

கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் அனைத்தும் ஈரானின் ஏவுகணை எல்லைக்குள் உள்ளன.

ட்ரம்ப் ஒரு முட்டாள்தனமான தாக்குதலைத் தொடங்கினால், அதற்குப் பதிலாக ஈரான் தொடுக்கப்போகும் 'மொத்த அழிவு' (Total Destruction) தாக்குதல், வளைகுடா நாடுகளில் பல தசாப்தங்களாக அமெரிக்கா கட்டமைத்த பாதுகாப்பை ஒரே நாளில் தரைமட்டமாக போகின்றது.

அமெரிக்காவின் இந்த அவசரக் கோலத்தால், போர் நடந்தால் முதலில் சாம்பலாகப் போவது அரபு நாடுகளின் உள்கட்டமைப்பும் அவர்களின் எண்ணெய் கிணறுகளும்தான். இதனால் தான் அரபு நாடுகள் இன்று ட்ரம்பின் போக்கை எண்ணி உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

நிதானமில்லாத ட்ரம்ப்பின் நடவடிக்கைகள், ஈரானை வீழ்த்துவதற்குப் பதிலாக அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

டாலரின் வீழ்ச்சிக்கு அவரே வித்திட்டதுடன், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க வீரர்களின் உயிரையும், அரபு நாடுகளின் பொருளாதாரத்தையும் பணயம் வைத்துள்ளார்.

இது ஒரு தற்கொலைக்குச் சமமான இராஜதந்திரம் என சொல்வதா அல்லது சிந்திக்கத் தெரியாதவனின் முட்டாள்தனம் என சொல்வதா?
Colombo TV Network

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஈரான் தனது வான்பரப்பை மூன்று அடுக்குகளாகப் பிரித்து பாதுகாத்து...
24/03/2026

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஈரான் தனது வான்பரப்பை மூன்று அடுக்குகளாகப் பிரித்து பாதுகாத்து வருகிறது. இதில் மிக முக்கியமானது ரஷ்ய தயாரிப்பான S-300 PMU2 ஏவுகணை அமைப்பாகும்.

இது சுமார் 200 கி.மீ தொலைவிலேயே எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக, அமெரிக்காவின் பி-52 (B-52) போன்ற பெரிய குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே அவற்றைச் சுட்டு வீழ்த்த S-300 ஏவுகணைகள் ஏவுதளங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

S-300 தவிர, ஈரான் தனது சொந்தத் தயாரிப்பான Bavar-373 என்ற ஏவுகணை அமைப்பையும் களமிறக்கியுள்ளது. இது அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 (F-35) மற்றும் பி-2 ஸ்டெல்த் (Stealth) விமானங்களைக் கூடக் கண்டறியும் திறன் கொண்ட 'ரேடார்களை' கொண்டுள்ளது என ஈரான் உரிமை கோருகிறது.

மேலும், தாழ்வாகப் பறந்து வரும் ஏவுகணைகளை அழிக்க Khordad-15 மற்றும் Tor-M1 போன்ற குறுகிய தூர ஏவுகணைகள் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி அரணாக அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் இலக்கை அடைவதற்கு முன்பே அவற்றை வானிலேயே தடுத்து அழிப்பதே ஈரானின் தற்போதைய முக்கிய வியூகமாகும்.

தற்போது 48 மணிநேரக் கெடு முடியப்போகும் இந்த இறுதித் தருணத்தில், ஈரானின் 'வான் பாதுகாப்புப் படை' (Khatam al-Anbiya) நாடு முழுவதும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அமெரிக்காவின் எலக்ட்ரானிக் ஜாமிங் (Electronic Jamming) நுட்பங்களை முறியடிக்க ஈரான் தனது ரேடார்களை அடிக்கடி மாற்றி அமைத்து வருகிறது.

வான்வெளியில் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே நடக்கப்போகும் இந்த 'தொழில்நுட்பப் போர்' (Tech War), இந்தப் போரின் போக்கை தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும்.
Colombo TV Network

| | | | | |

Address

Hunupitiya
11000

Alerts

Be the first to know and let us send you an email when Colombo TV Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colombo TV Network:

Shortcuts

Share

Category