Ulagavalam

Ulagavalam நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤️❤️

கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
17/06/2025

கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

🇱🇰 யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசையாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவ...
17/06/2025

🇱🇰 யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.

இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், "வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
-------------------------

இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

16/06/2025

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!


சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் இவ்வாறு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராமநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஒருவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும், மற்றையவரிடமிருந்து 1000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

16/06/2025

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 485 பேர் கைது

மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்து: இருவர் காயம்! கம்பளை, நிதாஸ் மாவத்தை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் என்...
16/06/2025

மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்து: இருவர் காயம்!

கம்பளை, நிதாஸ் மாவத்தை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் காயமடைந்துள்ளனர். அவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் கம்பளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 #இரகசிய_வாக்கெடுப்பு  #மூலம்_கொழும்பு_மாநகர  #சபை_மேயரை_தெரிவு  #செய்ய_தீர்மானம்16 Jun 2025 கொழும்பு மாநகர சபையின் புதி...
16/06/2025

#இரகசிய_வாக்கெடுப்பு #மூலம்_கொழும்பு_மாநகர #சபை_மேயரை_தெரிவு #செய்ய_தீர்மானம்

16 Jun 2025 கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு!ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து 2...
16/06/2025

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 224 ஆக உயர்வு!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து 224 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மற்றும் மேலும் இரண்டு தளபதிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

* அல் ஜசீரா ஆங்கில அறிக்கைகள்

லண்டனிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானம் அவசரமாக  தரையிறக்கம்
16/06/2025

லண்டனிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

16/06/2025

அயன் டோம் தயாரித்த ரஃபேல் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த ஈரான் : உலக நாடுகளிடம் உதவி கேட்கும் இஸ்ரேல்!

பாடசாலை கழிப்பறைக்கு அருகில் மயங்கி கிடந்த மாணவி - தீவிர விசாரணையில் சிக்கிய சந்தேக நபர் கைதுபண்டாரவளையில்  பாடசாலை மாணவ...
16/06/2025

பாடசாலை கழிப்பறைக்கு அருகில் மயங்கி கிடந்த மாணவி - தீவிர விசாரணையில் சிக்கிய சந்தேக நபர் கைது

பண்டாரவளையில் பாடசாலை மாணவி ஒருவர், கழிவறைக்கு அருகில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி, கடந்த 12 ஆம் திகதி பாடசாலை முடிந்ததும் வீடு திரும்பவில்லை, என அவரது தாயார் ஒரு ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இது குறித்து விசாரித்ததன் பின் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து, பாடசாலை வளாகத்தில் தேடிய போது, அந்த மாணவி கழிப்பறைக்கு அருகில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

ஆசிரியரும் மாணவர்களும் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மயக்கமடைந்த மாணவி, தனது பாடசாலை தோழியுடன் பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் கழிப்பறைக்குச் சென்றபோது, முகத்தை முழுமையாக மூடியிருந்த பாடசாலை சீருடையும் அணிந்திருந்த ஒருவனும், மற்றுமொருவர் தனது முகத்தை மறைத்ததாகவும், பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை போதனா மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த தடயவியல் மருத்துவர், அவர் எந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 #முல்லைத்தீவு -  #மாஞ்சோலை நகர  #தீப்பரவல் கட்டுப்பாட்டில்.கரைதுறைபற்று பிரதேச சபை, பாதுகாப்பு தரப்பு மாவட்ட அனர்த்த மு...
16/06/2025

#முல்லைத்தீவு - #மாஞ்சோலை நகர #தீப்பரவல் கட்டுப்பாட்டில்.

கரைதுறைபற்று பிரதேச சபை, பாதுகாப்பு தரப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செஞ்சிலுவை சங்கம் ஆகியோரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 #இந்தியாவில்  #மற்றுமொரு_விபத்து  #பாலம்_இடிந்து  #விழுந்ததில்_பலர்  #உயிரிழப்பு_25_ற்கு  #மேற்பட்டோரை  #காணவில்லை.  சற...
16/06/2025

#இந்தியாவில் #மற்றுமொரு_விபத்து #பாலம்_இடிந்து #விழுந்ததில்_பலர் #உயிரிழப்பு_25_ற்கு #மேற்பட்டோரை #காணவில்லை.
சற்றுமுன் இந்தியாவின் புனேபகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழப்பு! மேலும் 25 ற்கு மேற்பட்டோரை காணவில்லை. தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Address

Jaffna Town

Alerts

Be the first to know and let us send you an email when Ulagavalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulagavalam:

Share