
18/07/2025
பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு IMC International Merit Campus நிறுவனத்தினால் கௌரவிப்பு.!
யாழ்.புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய மாணவி ரமேஷ் சங்கீதா காபொத சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த புள்ளியை பெற்று (9A) பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனை முன்னிட்டு, IMC
(International Merit Campus) நிறுவனத்தின் ஆலோசகர், சட்டத்தரணி ஜெயராசா மதுரா அவர்களால் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு கல்வியை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.