Ulagavalam

Ulagavalam நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤️❤️

22/05/2026

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய உபகுழு நியமனம்

1,744.85 மில்லியன் ரூபா செலவில்  அம்பாறையில் பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு...!!சு...
22/05/2026

1,744.85 மில்லியன் ரூபா செலவில் அம்பாறையில் பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு...!!

சுமார் 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினல் இன்று (22) வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக சமூகம் ஒரு சட்டப்பூர்வமான மற்றும் முறையான இடத்தில் தமது வியாபாரங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும், அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த பலநோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடனான அரங்கு, வர்த்தக வளாகம், அலுவலக வளாகம் மற்றும் பாரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பலநோக்கு கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள், 2028.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அங்கு தொழிலாளராகப் பணியாற்றிவரும் ஈ. டி. ஹேமச்சந்திரவும் இந்நிகழ்வில் ஒரு அதிதியாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் முஸ்லிம்  பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறை  இலங்கை யிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட ...
22/05/2026

இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறை

இலங்கை யிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
​முஸ்லிம் சமூகம் கொண்டாடும் முக்கிய சமயப் பண்டிகைகளை முன்னிட்டு (பெருநாள் கால அட்டவணையின்படி) இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​இதன்படி, விடுமுறைக்காலம் நிறைவடைந்த பின்னர் வழமையான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

22/05/2026

🩸சிலாபம் வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின

தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..!மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு...
22/05/2026

தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..!

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் #உயிர் #மாய்த்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#உயிரிழந்தவர் வேணுக்கன் சுமேதா (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது #கணவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் கடந்த 19.05.2026 அன்று சுமேதாவிற்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையில் #கடும் #வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணையே #மறுமணம் செய்வதாக கணவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து #ம-ன-வே-த-னையில் இருந்த சுமேதா, நேற்று (20) தனது #உயிரை #மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.😥😥

16/05/2026

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பல மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை

  🚨பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது.!! #களனி மற்றும் வனவசல ரயில் நிலையங்களுக்கு இடையே...
16/05/2026

🚨
பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டுள்ளது.!!

#களனி மற்றும் வனவசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டதால், பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#அறிக்கைகளின்படி, ரயில் தண்டவாளத்தில் ஒரு பெட்டி கவிழ்ந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

#தடம் புரண்டபோது, ​​அந்த ரயில் பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

#இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

#தடம் புரண்டதன் காரணமாக பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

15/05/2026
15/05/2026

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது..

ஓமந்தையில் மின் கம்பத்துடன் மோதி பிக்கப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது  வாகனத்திலேயே மின்கம்பம் தங்கி உள்ளது
15/05/2026

ஓமந்தையில் மின் கம்பத்துடன் மோதி பிக்கப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது வாகனத்திலேயே மின்கம்பம் தங்கி உள்ளது

⭕ யாழ் சுழிபுரம் பகுதியில் மின்னல் தாக்கியதில் 20 வயது இளைஞன் பலி!
15/05/2026

⭕ யாழ் சுழிபுரம் பகுதியில் மின்னல் தாக்கியதில் 20 வயது இளைஞன் பலி!

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Ulagavalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulagavalam:

Share