Tamil Akaran News

Tamil Akaran News அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்

என்னவேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பன். எனக்கு ராஜாவா தான் வாழுறேன்👑👑👑
29/09/2024

என்னவேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பன். எனக்கு ராஜாவா தான் வாழுறேன்👑👑👑

கடற்படை படகுடன் இந்திய மீனவர் படகு மோதி விபத்து - ஒருவர் பலி, ஒருவர் மாயம்!சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி...
01/08/2024

கடற்படை படகுடன் இந்திய மீனவர் படகு மோதி விபத்து - ஒருவர் பலி, ஒருவர் மாயம்!

சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான படகொன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த படகில் நான்கு இந்திய மீனவர்கள் பயணித்துள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்கு இலங்கை கடற்படை முயற்சித்த போது, மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஏனைய மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள மீனவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

01/08/2024

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இவ்விடயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆடிய ஆட்டம் என்ன 🤣
05/03/2024

ஆடிய ஆட்டம் என்ன 🤣

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்..."
05/03/2024

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்..."

🔴 Titanic கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடையாளம்...
22/06/2023

🔴
Titanic கப்பலை பார்வையிட 5 பேருடன் கடலின் அடிக்கு சென்ற submarine இன் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர கடற்படை சற்றுமுன் அறிவித்துள்ளனர்.
- 1912ம் ஆண்டு 2224 பேருடன் பணிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய Titanic கப்பலை பார்வையிடுவதற்காக அதிநவீன நீர் மூழ்கிக் கப்பலில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சென்றனர். ஒருவர் தலா ரூ.2 கோடி கொடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணம் தொடங்கிய ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நீர்மூழ்கி கப்பலுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கப்பல் எங்கு சென்றது, அதில் உள்ளவர்களின் நிலை என்ன என எந்த விவரங்களும் தெரியவில்லை. இருந்தபோதிலும், 96 மணிநேரம் நீர்மூழ்கி கப்பலுக்குள் ஆக்சிஜன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அமெரிக்கா, கனடா நாடுகள் இணைந்து நீர் மூழ்கிக் கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டதால் இதன் தொடர்பு அறுந்துபோக வாய்ப்பே இல்லை என அதனை வடிவமைத்த நிறுவனம் கூறியுள்ளது. ஆழ்கடலில் மிகப்பெரிய ராட்சத மீன் ஏதாவது தாக்கி இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மர்மமான விஷயம் நடந்திருந்தால் மட்டுமே அந்த நீர்மூழ்கி கப்பல் வழிதவறி சென்று மாயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பல கதைகள் குறிப்பிட பட்ட நிலையில், குறித்த submarineஇன் சிதைவுகள் என சந்தேகிக்கபடும் பாகங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

22/06/2023
14/12/2022

_*சண்டிலிப்பாய் பிரதேசமட்ட இளைஞர் யுவதிகளுக்கான சிங்கள மொழி கற்கைநெறி தொடர்பானது*_

UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் CFCD நிறுவனத்தினரால் நடைமுறை படுத்தப்படும் 35 வயதுக்குட்பட்ட பிரதேச மட்ட இளைஞர் யுவதிகளுக்கான சிங்கள மொழி கற்கைநெறி (150 மணித்தியால கற்கைநெறி) எமது பிரதேச செயலக பிரிவினுள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கற்கை நெறி முழுமையாக பூரணப்படுத்தியிருப்பின் மொழிகள் திணைக்களத்தின் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்.

ஆரம்ப காலம்: மார்கழி மாத நடுப்பகுதி

நாட்கள்: வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று நாட்கள். (மாணவர்களின் கருத்துகளின் அடிப்படையில் கிழமைகள் நிர்ணயிக்கப்படும்)

ஒரு வகுப்பில் பங்குகொள்ளும் மாணவர் எண்ணிக்கை: 40 - 50 மாணவர்கள் (அதிக எண்ணிக்கையாயின் இரு குழுக்களாக நடாத்த முடியும்)

மாணவர்கள் உயர்தரம் கற்றவர்களாகவும் சிங்கள மொழி கற்க விருப்பம் அல்லது தேவை உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். பல்கலைகழக மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்.

இக் கற்கைகான கொடுப்பனவு மேற்படி நிறுவனங்களால் பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும்.

இச்சந்தர்பத்தை பிரதேச இளைஞர் யுவதிகள் பயன்படுத்தி கொள்வதற்காக தங்களது பிரிவுகளில் உள்ள அனைத்து கழகங்களூடாக GS பிரிவு ரீதியாக கீழ்வரும் விபரங்களை எதிர்வரும் 09.12.2022 க்கு முன்னர் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
1. Full name (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
2. NIC no.
3. Address
4. GN Division no.
5. Telephone no.

தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற மண்டோஷ் புயல் ஆனது சூறாவளியாக பரிணமித்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிரு...
08/12/2022

தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற மண்டோஷ் புயல் ஆனது சூறாவளியாக பரிணமித்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது இதன் காரணமாக பலத்த மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. மேலும் புயல் காரணமாக மாசடைந்த காற்று துகள்கள் வளிமண்டலத்தில் கலப்பதனால் வளிமண்டலம் மேகமூட்டமாக காணப்படும். எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வானிலை முன்னறிவிப்புதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ.) ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...
08/12/2022

வானிலை முன்னறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ.) ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் "மண்டூஸ்" சூறாவளியாக நேற்று மாறியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 09 ஆம் தேதி இரவு நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

டிசம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால்

உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

08 டிசம்பர் 2022 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

யாழ் - கண்டி (A9) வீதியில் விபத்துக்கள் அதிகரிக்க முறிகண்டி பிள்ளையார் கோயிலில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம்....
06/11/2022

யாழ் - கண்டி (A9) வீதியில் விபத்துக்கள் அதிகரிக்க முறிகண்டி பிள்ளையார் கோயிலில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம்...!

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது.

வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது.

அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசம்.

எனவே வாகன சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் தொடர முடியும். இதற்குத்தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள்.

மோட்டார் வாகன பாவனைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், இவ்வழிபாட்டு தலங்களுடன் கூடிய நிறுத்துமிடங்கள் வீதி விபத்துக்களை பெருமளவு குறைக்க உதவும்.

நமது முன்னோர்களது எந்தவோர் செயலும், மிகநுட்பமான காரணகாரியத்துடன், மனிதனது 'நன்மை' ஒன்றை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டவையாகும்.

இது வெறும் பதிவு மட்டும் என்று எண்ணவேண்டாம்.. முறிகண்டி பிள்ளையாரை வணங்கி விட்டு சென்றவர்கள் பலர் விபத்தில் இருந்து உயிர் தப்பி இருக்கிறார்..👍

ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ...
26/04/2022

ஜனாதிபதி, பிரதமருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது போலவே, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போதுமான பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

Address

Manipay
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Akaran News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Akaran News:

Share